Curd: தினசரி தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இத்தனை விஷயங்கள் உள்ளதா? - Tamil News | | TV9 Tamil

Curd: தினசரி தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இத்தனை விஷயங்கள் உள்ளதா?

Updated On: 

21 Jul 2024 09:36 AM

நம் இந்திய உணவில் அத்தியாவசியமான ஒன்று தயிர். தயிர் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவாகும். ஆனால் சிலருக்கு அந்த சுவை பிடிக்காது. தயிரில் நம் குடலுக்கு ஏற்ற நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாக உள்ளது. இதனால் வயிற்று கோளாறு இருப்பவர்கள், இதனை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு சிலருக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களால் ஒவ்வாமை ஏற்படும். இதற்கு லாக்டோஸ் இண்டாலரன்ஸ் (lactose intolerance) என பெயர். தயிரை நாம் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.

1 / 6தயிர்

தயிர் தினசரி சப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வராது என பல ஆய்வுகள் கூறுகிறது. காய்கறிகள் அல்லது பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அல்லது தனியாக சாப்பிட்டாலும் இதய நோய் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 / 6

வெயில் காலத்தில் சிலருக்கு செரிமான கோளாறு இருக்கும், அப்படி இருக்கும் பட்சத்தில் தயிர் எடுத்துக்கொண்டால் வயிறு மந்தமாகி செரிமான கோளாறு அதிகரிக்கும். இதனால் தயிர் விட மோரை எடுத்துக்கொள்ளலாம்

3 / 6

பாலைத் தயிராக மாற்றும் லாக்டோபாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுத்து, நல்ல பாக்டீரியா வளர உதவும்’

4 / 6

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் அதில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களால் பாதுகாக்கிறது

5 / 6

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு தயிர் சிறந்த மருந்து. அப்பண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிரில் இருக்கும் லேக்டிக் அமிலம் அழித்துவிடும்.

6 / 6

குடல் சார்ந்த பிரச்சனை அல்லது irritatable bowel movement syndrome இருப்பவர்கள் தயிர் சேர்த்துக்கொள்ளலாம். அது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவும்

Follow Us On
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version