அஸ்ஸாம் : உலகின் மிகச்சிறந்த கருப்பு தேயிலை அஸ்ஸாமில் விளைகிறது. அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் சில சிறந்த தரமான தேயிலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு, ஆர்த்தடாக்ஸ் வகை தேயிலைகளை பெறலாம்.
கேரளம் மூணாறு: கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மூணாறு அமைந்துள்ளது. இங்கு, பிரபலமான பிரபலமான நீலகிரி உள்ளிட்ட உயர் தர தேயிலைகள் வளர்கின்றன.
இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்க்ரா பள்ளத்தாக்கு, தௌலதார் மலைத்தொடரில் மிதமான காலநிலை மற்றும் வளமான மண் ஆகியவை காணப்படுகின்றன. இங்கு, ஆர்த்தடாக்ஸ் மற்றும் கிரீன் டீ அதிகம் விளைகிறது.
தமிழ்நாடு: தமிழ்நாட்டின் ஊட்டியில் ஊலாங் மற்றும் கிரீன் டீ போன்ற இந்தியாவின் சிறந்த தரமான தேயிலைகளை உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேற்கு வங்கம்: டார்ஜிலிங் மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ளது. இது பொதுவாக "மலைகளின் ராணி" என்று குறிப்பிடப்படுகிறது. "ஷாம்பெயின் ஆஃப் டீஸ்" என்றும் அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற டார்ஜிலிங் தேயிலை வளர்கிறது.