Ratan Tata: ரூ.3,800 கோடி சொத்து.. டாடா குழுமத்தை ஆளப்போகும் அடுத்த வாரிசு யார்? - Tamil News | who will take over ratan tata rs 3800 crore empire meet tata group future leaders tamil news | TV9 Tamil

Ratan Tata: ரூ.3,800 கோடி சொத்து.. டாடா குழுமத்தை ஆளப்போகும் அடுத்த வாரிசு யார்?

Updated On: 

10 Oct 2024 14:57 PM

ரத்தன் டாடா சொத்து மதிப்பு: பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவன தலைவருமான ரத்தன் டாடா வயது முதிர்வு காரணமாக நேற்று இரவு காலமானார். இவரது மறைவு நாட்டையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. இவர் பல தொழிலதிபர்கள் இளைஞர்களுக்கு பெரிதும் இன்ஸ்பிரெஸனாக இருந்துள்ளார். அதேநேரத்தில் உலக அளவில் டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ரத்தன் டாடா.

1 / 6பிரபல

பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவன தலைவருமான ரத்தன் டாடா வயது முதிர்வு காரணமாக நேற்று இரவு காலமானார். இவருக்கு வயது முதிர்வு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டார். ரத்தம் அழுத்தம் குறைந்ததால் கடந்த வாரம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் ரத்தன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு ரத்தன் டாடா கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியானது.

2 / 6

இதனை அடுத்து, நேற்று இரவு 11.30 மணியளவில் ரத்த டாடா உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியனாது. இவரது மறைவு நாட்டையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. இவர் பல தொழிலதிபர்கள் இளைஞர்களுக்கு பெரிதும் இன்ஸ்பிரெஸனாக இருந்துள்ளார். அதேநேரத்தில் உலக அளவில் டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ரத்தன் டாடா.

3 / 6

இவர் 1962ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா குழுமத்தில் சேர்ந்தார். இவர் முதலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றினார். ஜெ.ஆர்.டி. டாடா, 1991ல் ஓய்வு பெற்றவுடன் டாடாவின் மோட்டார்ஸ் டாடா பவர், டாடா கண்சல்டன்சி சர்வீஸ், டாடா தேனீர், டாடா கெமிக்கல்ஸ், தி இந்திய ஹோட்டல்ஸ் கம்பெனி, டாடா டெல்சர்வீசஸ் ஆகிய பெரும் டாடா நிறுவனங்களுக்கு தலைவரனார் ரத்தன் டாடா. இவரது பதவிக்காலத்தில் டாடா குழுமம் டெட்லி, ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் கோரஸ் நிறுவனங்களை கையகப்படுத்தியது.

4 / 6

இது இந்தியாவை மையமாகக் கொண்ட டாடா குழுமத்தை உலகளாவிய வணிகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது. டாடா குழும நிறுவன தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர், கடந்த 2012ஆம் ஆண்டு ஏற்பட்ட வாரிசு பிரச்னையால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தியாவில் மோட்டார் வாகன தொழில் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் ரத்தன் டாடா. மோட்டார் மட்டுமில்லாமல் சாப்ட்வேர் வரை பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

5 / 6

இப்படி தொழில் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ரத்தா டாடாவின் உயிர் பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது சொத்து மதிப்பு என்பது ரூ.3,800 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ரத்தன் டாடா காலமான நிலையில், இந்த ரூ.3800 கோடி சொத்துக்கு யார் தலைவராக இருப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது. அதன்படி, தற்போது டாடா குழு தலைவராக இருக்கும் சந்திரசேகரன் வழிநடத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும், லியா, மாயா, நெவில் ஆகியோரும் உள்ளனர். இவர்கள் ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் நவல் டாடாவின் குழந்தைகள் ஆவார். 34 வயதான மாயா டாடா, டாடா குழுமத்திற்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறார். டாடா குழுமத்தில் பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.

6 / 6

இந்த மூவரில் பெரியவர் 39 வயதான லியா டாடா. இவர் டாடா குழுமத்தின் ஹோட்டல் துறையை நிர்வகித்து வருகிறார். இவர் 2006ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டல் ரிசார்ட்ஸ், பேலசில் உதவி விற்பனை மேலாளராக டாடா குழுமத்தில் சேர்ந்தார். மேல், பல்வேறு பதவிகளில் இருந்து, தற்போது தி இந்தியன் ஹோட்டல்கள் கம்பெனி லிமிடெட்டில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். இவர்களில் மூன்று பேர் டாடா குழுமத்தை வழிநடத்தலாம் என்று கூறப்படுகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தை சந்திரசேகரன் நிர்வகித்து வந்தாலும், மேலும், டாடா குழுமத்திற்கு முழு அதிகாரம் ரத்தன் டாடாவின் சகோதர குழந்தைகளுக்கு செல்லப்போவதாக கூறப்படுகிறது.

மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் என்னாகும்?
செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
Exit mobile version