Green Peas Benefits: மூட்டு வலி முதல் எடை குறைப்பு வரை.. சிறந்த பலனை தரும் பச்சை பட்டாணி! - Tamil News | Why Green Peas are Healthy and Nutritious full details here; health tips in tamil | TV9 Tamil

Green Peas Benefits: மூட்டு வலி முதல் எடை குறைப்பு வரை.. சிறந்த பலனை தரும் பச்சை பட்டாணி!

Published: 

06 Oct 2024 16:23 PM

Benefits of Peas: பச்சைப் பட்டாணியில் அதிகமாக உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. மழை மற்றும் குளிர்காலத்தில் பச்சை பட்டாணியை தினமும் சாப்பிட்டு வந்தால் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். இதன் காரணமாக வீக்கம் மற்றும் இதர வயிற்று பிரச்சனைகளை தவிர்க்கலாம். பச்சை பட்டாணி உண்பவர்களுக்கு இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும்.

1 / 6பச்சை

பச்சை பட்டாணி சத்துக்களின் களஞ்சியம் என்றே கூறலாம். இதில் உள்ள வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பட்டாணியில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை இயல்பாக்குகிறது.

2 / 6

பச்சை பட்டாணி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். பட்டாணியில் ஜி.ஐ உள்ளது. இது உடலில் சர்க்கரையை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. சர்க்கரை அதிகரித்து உங்களுக்கு தொல்லை தந்தால், மழை காலத்தில் பச்சை பட்டாணியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

3 / 6

பச்சைப் பட்டாணியில் அதிகமாக உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. மழை மற்றும் குளிர்காலத்தில் பச்சை பட்டாணியை தினமும் சாப்பிட்டு வந்தால் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். இதன் காரணமாக வீக்கம் மற்றும் இதர வயிற்று பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

4 / 6

பச்சை பட்டாணி உண்பவர்களுக்கு இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் சோர்வு, பலவீனம் மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. பட்டாணியை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

5 / 6

உடல் எடையை குறைப்பது பலருக்கும் கடினமான விஷயமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பச்சை பட்டாணியை உங்கள் உணவில் தினசரி எடுத்து கொள்வதன் மூலம் தேவையான புரதத்தை கொடுத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

6 / 6

பச்சைப் பட்டாணியில் செலினியம் என்ற சிறப்புத் தனிமம் உள்ளது. இது மூட்டுவலி பிரச்சனையைக் குறைக்க உதவும். மூட்டுவலி பிரச்சனையை தவிர்க்க வேண்டுமானால் பச்சை பட்டாணியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், பச்சைப் பட்டாணியில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் ஏ மற்றும் பாஸ்பரஸ் போன்றவை தசைக்கு வலிமையையும் தருகிறது.

Follow Us On
பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
Exit mobile version