Health Tips: மழைக்காலம் உஷார்.. இதையெல்லாம் கண்டிப்பாக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்! - Tamil News | Rainy season food to diet everyday for better health details in Tamil | TV9 Tamil

Health Tips: மழைக்காலம் உஷார்.. இதையெல்லாம் கண்டிப்பாக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

Published: 

04 Nov 2024 10:41 AM

Healthy Foods: மழை மற்றும் குளிர்காலத்தில் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் நாற்று நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் உடலை குளிர்ந்த காலநிலைக்கு ஏற்ப மாற்ற உதவுகிறது. பருவத்திற்கு ஏற்ப உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உடலுக்கு தேவையான சத்துக்களை பெறுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும் இந்த உணவுகள் பெரிதும் உதவுகிறது. எந்த வகை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 5சக்கர

சக்கர வள்ளி கிழங்கு: சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மேலும் ரத்த சர்க்கரை அளவை சமன் செய்கிறது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

2 / 5

ஆப்பிள்: ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பலமான ஆப்பிள் நாள்பட்ட நோய்களை தடுக்கிறது. ஆப்பிள்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இவை இதய ஆரோக்கியத்திற்கும் செரிமானத்திற்கும் நல்லது.

3 / 5

மாதுளை: மாதுளை ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் ஆற்றல் மிக்கது. வைட்டமின் சி மற்றும் பாலிஃபீனால்கள் நிறைந்த இந்தப் பழம் உடலை அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. இந்த நன்மைகள் இதய நோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.

4 / 5

பூசணி: பூசணிக்காயில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது ஒரு ஆக்சிஜனேற்றியாகும். இது உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்துக்களை வழங்குகிறது. வைட்டமின் ஏ நோய் எதிர்ப்பு சக்தி, தோல் ஆரோக்கியம் மற்றும் கண் ஆரோக்கியத்தில் உதவுகிறது. மேலும் இது செரிமானத்திற்கு நல்லது.

5 / 5

காலிஃபிளவர்: நார்ச்சத்து மற்றும் வைட்டமின் கே மற்றும் சி அதிகம் உள்ள காலிஃபிளவர் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. காலிஃபிளவரை பொரித்தோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்

இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?
தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?
ஆரோக்கியமாக வாழ தினமும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி செய்த டாப் 7 சாதனைகள்..!