Winter Skin Care Tips: குளிர்காலத்தில் வறண்ட சருமம் ஜொலிக்க வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்க! - Tamil News | Winter skin care tips home remedies Honey face pack to get relief from dry skin details in Tamil | TV9 Tamil

Winter Skin Care Tips: குளிர்காலத்தில் வறண்ட சருமம் ஜொலிக்க வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்க!

Published: 

29 Nov 2024 12:47 PM

Skin Care Tips: குளிர்காலத்தில் நீர்ச்சத்து குறைவதால் வறண்ட சருமம் அனைவருக்கும் ஏற்படும். எனவே முகத்தை பளபளப்பாகும் மிருதுவாகவும் வைத்திருக்க சரியான தோல் பராமரிப்பு முறை அவசியம். எனவே குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க சில பராமரிப்பு முறையை தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 5தேன் மற்றும் மஞ்சள் கலவையை முகத்தில் தடவலாம். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த கலவையை முகத்தில் தடவினால் முகத்திற்கு பொலிவு கிடைப்பதுடன் தழும்புகள் குறையும்.

தேன் மற்றும் மஞ்சள் கலவையை முகத்தில் தடவலாம். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த கலவையை முகத்தில் தடவினால் முகத்திற்கு பொலிவு கிடைப்பதுடன் தழும்புகள் குறையும்.

2 / 5

மஞ்சள், தேன் மற்றும் பச்சைப் பால் மூலம் ஃபேஸ் பேக் செய்து பயன்படுத்தலாம். இந்த கலவையும் முகத்திற்கு பொலிவை தருகிறது. பச்சைப் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் முகத்தில் இருந்து சரும செல்களை குறைக்க உதவுகிறது. மேலும் புரதம் மற்றும் கொழுப்பு சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்க உதவுகிறது

3 / 5

ஒரு கிண்ணத்தில் இரண்டு சிட்டிகை மஞ்சள் அரை ஸ்பூன் தேன் மற்றும் 3 ஸ்பூன் பச்சைப் பால் ஆகியவற்றை எடுத்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்தக் கலவையை சுத்தமான கைகள் அல்லது காட்டன் பஞ்சு மூலம் முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் முகத்திற்கு மசாஜ் செய்து விட்டு 15 முதல் 20 நிமிடம் வரை வைத்திருந்து பின் பெறுவதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

4 / 5

தேன் மற்றும் பால் கலந்தும் முகத்தில் தடவலாம். நமது சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இது நல்லது. இதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் சருமத்திற்கு நல்லது. பாலில் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவலாம்.‌ இதை பூசும்போது முகத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் வைத்துவிட்டு கழுவ வேண்டும்.‌ பால் மற்றும் தேன் இரண்டும் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.

5 / 5

தேனுடன் கற்றாழை சேர்த்து பயன்படுத்தினால் சருமம் ஈரப்பதமாக இருக்கும். கற்றாழையின் இயற்கையான ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை சருமத்தை ஈரப்பதமாக்கு மற்றும் சருமத்திலுள்ள அழுக்குகளை போக்குகிறது. தேன் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும் மென்மையாக்குவதற்கும் உதவுகிறது.

மஞ்சள் நீரில் எந்த வைட்டமின் நிறைந்துள்ளது..?
குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!
உங்கள் அன்பை அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
மழைக்காலத்தில் ஜில் தண்ணீர் குடிக்கலாமா?