5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

UNESCO: தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்கள்… யுனெஸ்கோ அறிவித்த இடங்கள்!

World Heritage Sites in Tamil Nadu: ஐநா சபையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று யுனெஸ்கோ ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும். இதில் 193 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கிறது. உலகப் பாரம்பரிய களம் என்ற குழு உலகத்தில் இருக்கக்கூடிய காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச்சின்னம், கட்டிடம், நகரம் போன்றவற்றின் தன்மையை ஆராய்ந்து உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கிறது.

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 04 Oct 2024 13:41 PM
மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகாபலிபுரத்தில் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட கோயில்கள் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது மாமல்லன் என்று அழைக்கப்படும் முதலாம் நரசிம்ம பல்லவன்‌ காலத்தில் கட்டப்பட்டது. மாமல்லபுரம் இரத கோயில்கள், குகை கோயில்கள், அர்ச்சுனன் பாவ சங்கீதனம், மாமல்லபுரம் கடற்கரை கோயில் ஆகிய மரபுச் சின்னங்களை 1984 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.

1 / 5
தஞ்சை பெரிய கோயில்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் சோழப் பேரரசு முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில் காவிரி ஆற்றின் தென்கரையில் திராவிட பாணியில் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.‌ இங்கு உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இந்தக் கோயிலின் விமானத்தின் உயரம் 216 அடி ஆகும். இந்தக் கோயிலின் கருவறையில் இருக்கும் சிவலிங்கம் உலகத்திலேயே பெரிய லிங்கமாகும். இந்தக் கோயில் 1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

2 / 5
தாராசுரம்: தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரத்தில் அமைந்திருக்கும் ஐராவதேசுவரர் கோயில் இரண்டாம் இராஜராஜனால் கட்டப்பட்டது. சிற்பிகளின் கனவு என்று போற்றப்படும் இந்த தளம் முழுவதும் மிகவும் நுக்கமான சிலைகளால் நிறைந்திருக்கிறது. திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலின் விமானம் 80 அடி உயரம் கொண்டது. 2004 ஆம் ஆண்டு இந்த கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக  யுனெஸ்கோ அறிவித்தது.

3 / 5
கங்கைகொண்ட சோழபுரம்: அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. 560 அடி நீளமும் 320 அடி அகலமும் கொண்ட இந்தக் கோயிலின் மூலவராக சிவன் இருக்கிறார். அர்த்தநாரீஸ்வரர், நடராசர், பிரம்மன், துர்க்கை, திருமால், சரஸ்வதி போன்ற 50-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் இங்கே உள்ளன. சோழர் கலைக்கு சான்றாக விளங்கும் இந்தக் கோயில் 2004 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

4 / 5
நீலகிரி மலை தொடர்வண்டி:  1908 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த ரயில் பாதை 1000 மில்லிமீட்டர் அளவு கொண்ட குறுகிய பாதை‌ ரயில் போக்குவரத்து ஆகும். இதில் பயணிக்கும் பொழுது ஒரு சிறந்த அனுபவத்தை பெற முடியும். 28 மைல்கள் பயணிக்கும் இந்தப் பயணத்தில் 108 வளைவுகள், 16 சுரங்கங்கள் மற்றும் 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும். சுமார் 230 நிமிடங்கள் பயணிக்கும் இந்த மலைப்பாதை ஆசியாவில் மிகக் கடுமையான சரிவு பாதை என கருதப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு இதை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.

5 / 5
Follow Us
Latest Stories