சத்யராஜ் உடன் இருக்கும் இந்த சிறுவன் இப்போ மாஸ் நடிகர்… யார் தெரியுதா? - Tamil News | Young Fahadh Faasils pic with actor Sathyaraj viral on social media | TV9 Tamil

சத்யராஜ் உடன் இருக்கும் இந்த சிறுவன் இப்போ மாஸ் நடிகர்… யார் தெரியுதா?

Published: 

03 Oct 2024 17:34 PM

கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என முரண்டு பிடிக்காமல், கிடைக்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என களத்தில் இறங்கினார். பகத்தின் நடிப்பை விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் அவர் ஒரு தவிர்க்க முடியாத நடிகர் என சொல்லும் அளவுக்கு தன் நடிப்பால் பிரம்மிக்க வைத்தார். வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என தமிழில் வெறும் 4 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தனது அசாத்தியமான நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் பகத் பாசில். 

1 / 8சமீபத்தில்

சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சத்யராஜ் உடன் பகத் பாசில் சிறு வயதில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

2 / 8

தமிழில் பூவே பூச்சூடவா, சத்யராஜ் நடிப்பில் வெளியான என் பொம்முகுட்டி அம்மாவுக்கு, விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை போன்ற ஹிட் படங்களை தந்த இயக்குநர் பாசிலின் மகன் தான் நடிகர் பகத் பாசில்.

3 / 8

இன்று இந்திய திரையுலகமே திரும்பி பார்க்கும் ஒரு நடிகராக இருக்கிறார் பகத் பாசில். இவரின் திரைப்பயணம் அவரது தந்தை பாசில் இயக்கிய கையேதும் தூரத்து என்கிற படம் மூலம் தொடங்கியது. படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

4 / 8

இனி நடிக்க வேண்டுமா என பகத் என்னும் அளவுக்கு அவரை விமர்சனங்கள் தாக்கின. அப்போது நடிப்பில் இருந்து விலகி வெளிநாட்டுக்கு படிக்க சென்றுவிட்டார். பின்னர் 7 வருடங்கள் கழித்து திரையுலகில் மீண்டும் காலடி எடுத்த வைத்த பகத்.

5 / 8

பிறகு 2009-ல் 'கேரளா கஃபே' என்ற பெயரில் இயக்குநர் ரஞ்சித் தயாரித்த குறும்படத் தொகுப்பு ஒன்றில் பகத் பாசில் என்ற பெயரில் மீண்டும் அறிமுகமானார். எட்டு குறும்படத் தொகுப்பு ஒன்றில்தான் நடித்தார் என்றாலும் ஃபகத்தின் திறன் கவனிக்கப்பட்டது. 

6 / 8

கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என முரண்டு பிடிக்காமல், கிடைக்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என களத்தில் இறங்கினார். பகத்தின் நடிப்பை விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் அவர் ஒரு தவிர்க்க முடியாத நடிகர் என சொல்லும் அளவுக்கு தன் நடிப்பால் பிரம்மிக்க வைத்தார்.

7 / 8

வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என தமிழில் வெறும் 4 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தனது அசாத்தியமான நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் பகத் பாசில். 

8 / 8

குறிப்பாக எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை கையாண்ட விதத்தால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். கண்களாலேயே ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்தி ஆச்சரியமளித்துவருகிறார் பகத்.

Follow Us On
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
Exit mobile version