YouTube: புதிய மாற்றங்களை செய்யப் போகும் யூடியூப்… என்ன மாற்றம் என்று தெரிந்து கொள்ளுங்கள்… - Tamil News | YouTube planning to remove dislike button and increase the duration for shorts details in Tamil | TV9 Tamil

YouTube: புதிய மாற்றங்களை செய்யப் போகும் யூடியூப்… என்ன மாற்றம் என்று தெரிந்து கொள்ளுங்கள்…

Published: 

03 Nov 2024 15:45 PM

YouTube Update: உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான. இந்த நிறுவனம் அவ்வப்போது புதிய வசதிகளையும் மாற்றங்களையும் செய்து வருகிறது. தற்பொழுது YouTube Shorts வீடியோக்களில் சில மாற்றம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப் செய்ய போகும் மாற்றங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 5யூடியூபில்

யூடியூபில் ஷார்ட்ஸ் (Shorts) வீடியோக்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. நீண்ட நேரம் ஒரே காணொளியில் நேரம் செலவழிக்காத பயனர்கள் Shorts வீடியோ மூலமாக பல வீடியோக்களை பார்த்து விடுகிறார்கள். இந்த Shorts வீடியோவில் மாற்றத்தை ஏற்படுத்த ஆயத்தங்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2 / 5

தற்பொழுது யூட்யூபில் Shorts வீடியோக்களுக்கு டிஸ் லைக் ஆப்சன் உள்ளது. ஆனால் புதிய அப்டேட்டில் அந்த ஆப்ஷன் நீக்கப்படும் என்று தெரிகிறது. அதற்கு பதிலாக சேவ் ஆப்சன் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

3 / 5

ஆண்ட்ராய்டு ஆணையத்தின் அறிக்கையின்படி யூடியூபில் இருந்து டிஸ்லைக் ஆப்சன் நீக்கப்படுகிறது. இந்த அம்சம் ஏற்கனவே சில பயனர்களுக்கு உள்ளது. இது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் செயல்படுத்தப்படும்.

4 / 5

மேலும் இந்த புதிய மாற்றத்தில் Shorts வீடியோக்களை எளிதில் சேமிக்கும் வாய்ப்பை ஏற்படுகிறது. சேமி ஆப்ஷனை தேர்வு செய்யும் பொழுது ஏற்கனவே உள்ள பிளே லிஸ்டில் சேமிக்க வேண்டுமா அல்லது புதிய பிளே லிஸ்ட்டை உருவாக்க வேண்டுமா என்று யூடியூப் கேட்டு எளிதாக வீடியோக்களை சேமிக்கிறது.

5 / 5

அதே வேளையில் மற்றுமொரு முக்கிய புதிய அம்சத்தை கொண்டு வர இருப்பதாக தெரிவித்திருக்கிறது. தற்பொழுது 60 வினாடிகள் நீளம் கொண்ட Shorts வீடியோக்கள் புதிய அப்டேட்டில் மூன்று நிமிடங்களாக வரம்பு அதிகரிக்கப்படும். இந்த அம்சம் யூடியூபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?
தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?
ஆரோக்கியமாக வாழ தினமும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி செய்த டாப் 7 சாதனைகள்..!