5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சபரிமலை ஹரிவராசனம் பாடல் வரலாறு… இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

Harivarasanam Song: 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றப்பட்ட ஹரிவராசனம் பாடல் ஐயப்பனை தூங்க வைப்பதற்கான பாடல் என்று பரவலாக பக்தர்கள் இடையே‌ சொல்லப்படுவதுண்டு. உண்மையில் ஹரிவராசனம் பாடல் ஐயப்பனை தூங்க வைக்கும் பாடல் தானா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

சபரிமலை ஹரிவராசனம் பாடல் வரலாறு… இவ்வளவு சிறப்புகள் இருக்கா?
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 27 Nov 2024 09:48 AM

ஐயப்ப சுவாமியின் பக்தி மிக்க ஹரிவராசனபாடல் பற்றி பல தகவல்கள் பரவி வருகின்றது. இவற்றில் பல பக்தர்களின் மனதில் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஹரிவராசனம் பாடல் அய்யப்பனின் உறங்கும் பாடல் எனவும் மற்ற கோவில்களில் பாடக் கூடாது எனவும் இந்தப் பாடலைப் பாடினால் மற்ற கீர்த்தனைகளைப் பாடக் கூடாது எனவும் பல கருத்துக்கள்  மண்டல்களின் போது பரப்பப்படுகின்றன. உண்மை என்ன?

100 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட ஹரிவராசனம் பாடல்:

இந்த கருத்துக்களுக்கு ஆதாரங்களோ மூலமோ இல்லை. ஐயப்பனின் பெருமையை பாடும் பல பாடல்கள் இருந்தாலும் இந்த ஹரிவராசனம் என்ற பாடல் மிகவும் பிரபலமான ஐயப்ப பாடல் ஆகும். இந்தப் பாடல் 1923 ஆம் ஆண்டு ஐயப்ப பக்தரான கொன்னகத்து ஜானகி அம்மாள் என்பவரால் இயற்றப்பட்டது. இந்த பாடல் ஸ்ரீனிவாச ஐயர் என்ற பக்தர் மூலம் வெளி உலகை அடைந்தது. அதன் பிறகு பல இசையமைப்பாளர்கள் இந்த பாடலுக்கு இசை அமைத்திருந்தாலும் யேசுதாசின் குரலில் பாடப்பட்ட இந்த ஹரிவராசனம் பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. ஜி.தேவராஜன் இசையில் யேசுதாஸ் பாடிய இந்தப் பாடல் தான் 1952 ஆம் ஆண்டு முதல் கோயிலின் நடை சாத்தும் போது ஒலிக்கும் பாடலாக இருந்து வருகிறது.

Also Read: சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு.. பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

ஹரிவராசனம் பாடலால் ஐயப்பன் உறங்குகிறாரா?

ஓம்காரப் பொருளாகவும், தத்துவமசிப் பொருளாகவும் விளங்கும் ஐயப்பசுவாமி உறங்குவதில்லை. அய்யப்பன் நிலையான விழிப்பு நிலையில் இருக்கும் ஒரு நித்திய ஒளி. முன்னர் ஹரிவராசன் பாடலை அத்தாழ‌ பூஜையின் போது பாடி வந்தனர். இந்த ஹரிவராசனம் பாடல் ஒலித்து முடிக்கும் நேரத்தில் கதவினை மெதுவாக அடைத்துவிட்டு அங்கிருக்கும் அனைவரும் வெளியே வந்து விடுவார்கள். இது தூங்க வைக்கின்ற தாலாட்டு பாடல் போல் இருப்பதால் இதை மலையாளிகள் ‘உறங்கு பாட்டு’ என்கிறார்கள். ஆனால் ஐயப்பன் உறங்குவதில்லை. ஐயப்பனின் உறக்கத்திற்கும் இந்த பாடலுக்கும் இந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் பாடல் எழுதுவதற்கு முன்பு சபரிமலை யாத்திரையும் பூஜையும் இருந்தது.

1923 இல் இயற்றப்பட்ட இந்தப் பாடலுக்கு கடந்த 2023ல் இசைஞானி இளையராஜா தலைமையில் இந்த கீர்த்தனையின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. 1950 ஆம் ஆண்டு சபரிமலையில் சுவாமி விமோகனந்தா இந்த கீர்த்தனையை முதன் முதலில் பாடினார். பின்னர், மேலசாந்தியான வடக்கில்லம் ஈஸ்வரன் நம்பூதிரி, இரவு நிறைவில் தொடர்ந்து பாராயணம் செய்யத் தொடங்கினார். நீண்ட காலமாக சபரிமலையில் அமைதியை நிலைநாட்டிய அவர், கோயிலின் நடையை சாத்தும் பொழுது இந்தப் பாடலை பாடி வந்தார். வடக்கில்லம் ஈஸ்வரன் நம்பூதிரி ஆரம்பித்த முறை, பின்னர் வந்த மேல்சாந்திகளால் தொடரப்பட்டது. பிறகு அது ஒரு நடைமுறையாக மாறியது.

இந்தப் பாடலை எழுதிய பக்தர் தூக்கப் பாடல் என்ற கருத்தைக் கொண்டு எழுதவில்லை. அய்யப்பனை பாடி தூங்க வைக்கும் தாந்திரீகக் கருத்து இல்லை. இதெல்லாம் பிற்காலத்தில் ஒவ்வொருவராலும் அவரவர் கற்பனைக்கேற்ப பிரச்சாரம் செய்யப்பட்டது. கோயிலின் நடையை சாத்தும் பொழுது இந்தப் பாடலை பாடி தொடங்கியதால் அது ஒரு சடங்காக மாறியது. உண்மையில், அய்யப்பன் உறங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவது, வழிபடுபவர்கள் இறைவனுடன் ஐக்கியமாகி சாந்த நிலையில் இருப்பதைத்தான் குறிப்பிடப்படுகிறது.

Also Read: Sabarimala: சபரிமலை போகிறவர்கள் மறக்காமல் இந்த கோயிலுக்கும் போங்க!

கடவுளுக்கு தூக்கம் இல்லை. நம் விழிப்பிலும், கனவிலும், உலகத்திலும் சாட்சியாக நிற்கும் பொருள் அது. தூக்கும் என்பது உண்மையில் தமது சுயத்தை மறப்பதாகும். இது கடவுளுக்கு நடக்காது. சபரிமலையில் மட்டும் ஹரிவராசனம் பாடலாம். மற்ற கோவில்களில் பாடக்கூடாது என்பது தவறு. எங்கு வேண்டுமானாலும் கடவுளை போற்றி பாடல்களை பாடலாம். உடலே கோவில், இதயம் சன்னதி, நமது ஆவியே பகவான். இந்த ஆவியை போற்றுவதில் ஏன் கட்டுப்பாடு? ஹரிவராசனம் பாடினால் மற்ற கீர்த்தனைகள் பாடக்கூடாது என்பது தவறான கருத்தாகும். இது காலங்காலமாக செய்து வரும் ஒரு அமைப்பின் முறை என்பதைத் தாண்டி எந்த முக்கியத்துவமும் இல்லை. பக்தரின் பக்தி மனப்பான்மையின் நேர்மை மட்டுமே முக்கியம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

Latest News