5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

vaikasi visakam 2024 : வைகாசி விசாகம் அன்று வீட்டில் ஒலிக்க முருகன் பக்தி பாடல்கள் லிஸ்ட்!

Lord Murugan Songs : நாளை காலை 8:18 மணி முதல் அடுத்த நாள் காலை 9:43 மணி வரை விசாக நட்சத்திரம் உள்ளது. இதனால், முருகனுக்கு விரதம் இருக்க வேண்டுமென கருதுபவர்கள், மே 22-ஆம் தேதி முருகனுக்கு விரதமிருந்து, பூஜை செய்யலாம். இவை மட்டுமின்றி, அன்றைய தினம் முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதானைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். அன்று முருகனை வழிபடுபவர்கள் இனிப்பு அப்பம் அல்லது தேன், தினை மாவை கலந்து முருகனுக்கு படைத்து வழிபடலாம். மேலும், விசாகத்தன்று முருகனை வழிபடுவதன் மூலம் முந்தைய ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

vaikasi visakam 2024 : வைகாசி விசாகம் அன்று வீட்டில் ஒலிக்க முருகன் பக்தி பாடல்கள் லிஸ்ட்!
முருகன்
Follow Us
tamil-tv9
Tamil TV9 | Updated On: 21 May 2024 16:49 PM

வைகாசி விசாகம் : முருகனுக்கு உகந்த தினமாக கருதப்படும் வைகாசி விசாகம், நாளை மே 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழ் கடவுளான முருக பெருமான் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால், அந்நட்சத்திரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், வைகாசி மாதத்தில் பௌர்ணமியும், விசாக நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்னாளை வைகாசி விசாகமாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் முருகனை துதித்து பக்தியுடன் மக்கள் வழிபடுவது வழக்கம்.அதன்பேரில், வரும் 22-ஆம் தேதி காலை 8:18 மணி முதல் அடுத்த நாள் காலை 9:43 மணி வரை விசாக நட்சத்திரம் உள்ளது. இதனால், முருகனுக்கு விரதம் இருக்க வேண்டுமென கருதுபவர்கள், மே 22-ஆம் தேதி முருகனுக்கு விரதமிருந்து, பூஜை செய்யலாம். இந்த வைகாசி தினத்தில் வீட்டில் முருகன் பாடல்களை ஒலிக்கவிட்டு அன்றைய தினத்தை பயபக்தியுடன் தொடங்கலாம். நாங்கள் சில முருகன் பக்தி பாடல்களை தருகிறோம்.

முருகனை நின்ற இடம் நின்று மனதார நினைத்தேலே வேண்டும் பலன் கிடைக்கும் என்பார்கள். ஆனால் கோவிலுக்கு போவதும் சிலருக்கு பாசிட்டிவாக விஷயமாக இருக்கும்.

அப்படி விரும்பும் முருக பக்தர்கள் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமையன்று வள்ளி தெய்வானையோடு வீற்றிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்றுவாருங்கள்.

அப்படிப் போகையில் செவ்வரளி மாலை கட்டி எடுத்துச்செல்லுங்கள். இந்த மாலையை முருகனுக்கு சாத்திவிட்டு, 8 முறை வேண்டுதல் எழுதப்பட்ட காகிதத்துடன் பிரகாரத்தை சுற்றிவாருங்கள்

பிரகாரத்தை சுற்றும்போது மன ஒருநிலையோடு சுற்றவேண்டும். சுற்றிக் கொண்டிருக்கும்போதே 108 முறை ஓம் சரவண பவ எனும் மந்திரத்தை உச்சரியுங்கள். எட்டு முறை சாதாரணமாகவும், ஒன்பதாவது முறை அடிப்பிரதட்சனமாகவும் சுற்றுங்கள். ஒன்பது வாரம் இதை தொடர்ந்து செய்து வாருங்கள். வேண்டிய பலன் கைமேல் கிடைக்கும்.

Latest News