310 வருட பாரம்பரியம்.. திருப்பதி லட்டு வரலாறு தெரியுமா?
Tiruppati Laddu: திருப்பதிக்கு யார் சென்று வந்தாலும் வீட்டுக்கு வந்த உடனே விளக்கேற்றி வைத்து விட்டு லட்டுவை பிரசாமாக கொடுப்பது வழக்கம். உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் இந்தியாவில் இருந்து செல்பவர்களிடம் இந்த லட்டை கேட்கிறார்கள். பிரபஞ்ச மூர்த்தியான திருமலை பெருமாள் லட்டு வடிவில் நம் வீட்டிற்கு வருகிறார் என்பதே நம்பிக்கை.
திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்தால் ஒரு புனித உணர்வு ஏற்படும். அதையும் தாண்டி யார் திருப்பதிக்கு சென்று வந்தாலும் அவர்களிடமிருந்து லட்டுப் பிரசாதம் கிடைக்குமா என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. அதேப் போல் யார் திருமலை சென்று வந்தாலும் வீட்டுக்கு வந்த உடனே விளக்கேற்றி வைத்து விட்டு லட்டுவை பிரசாமாக கொடுப்பது வழக்கம். உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் இந்தியாவில் இருந்து செல்பவர்களிடம் இந்த லட்டை கேட்கிறார்கள். பிரபஞ்ச மூர்த்தியான திருமலை பெருமாள் லட்டு வடிவில் நம் வீட்டிற்கு வருகிறார் என்பதே நம்பிக்கை. இந்த லட்டு வெறும் பிரசாதம் அல்ல.. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வு
இப்போது அந்த உணர்வுகள் உடைந்து இருக்கிறது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளது. அகிலத்தின் தலைவரான ஸ்ரீனிவாசப் பெருமாள் திருவிழா நாயகன், அலங்காரப் பிரியர், சேவைப் பிரியர் மட்டுமில்லை. பிரசாத பிரியர் கூட. பெருமாளுக்கும் சரி அவரின் பக்தர்களுக்கும் சரி மிகவும் பிடித்த பிரசாதம் லட்டு.
அன்னமாச்சாரியார் முதன்முதலாக பெருமாளை தரிசித்தபோது, “பிரசாதத்தின் பேருண்டிப் பிரியன்” என்று கிண்டல் செய்தார். பெருமாளின் சிறப்பைப் பற்றி பேசினால் முதலில் நினைவுக்கு வருவது லட்டு பிரசாதம் தான்! அந்த லட்டு பிரசாதத்தின் சுவை 310 வருடங்களை கடந்து நிற்கிறது.
பக்திரசத்தின் இனிமையை அமுதமாக வெளிப்படுத்தும் திருமலை நாராயணனின் லட்டு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. லட்டுகளில் நெய் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை லட்டின் 310 வருட வரலாறு:
பக்தி ரசத்தின் கீழ் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு அமுதமாக விநியோகிக்கப்படும் திருமலை பெருமாள் லட்டு, ஏறக்குறைய 310 ஆண்டுகள் பழமையானது. 1715 ஆண்டு முதன் முதலாக பெருமாள் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆனால் அது பக்தர்களுக்கு விநியோகிக்கப்படவில்ல. ஜமீன்தார்கள், முக்கியஸ்தர்களுக்கு மட்டும் முழு லட்டு வழங்கப்பட்டு வந்தது.
1803 ஆம் ஆண்டு அன்றைய மெட்ராஸ் அரசாங்கம் பிரசாதத்தை பூந்தியாக வழங்கியது. அந்த காலத்தில் பிரசாதங்கள் விற்கப்பட்டதாக வதந்திகளும் எழுந்தது. இந்த காலத்தில் தான் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கும் நேரம் முடிவு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
பல்லவர்கள் காலங்களில் இருந்தே பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் மலையில் உணவு வசதி இல்லாதல் காரணத்தினால் பக்தர்களின் பசி போக்க பிரசாதம் வழங்கப்பட்டது. அப்பொழுது திருப்பொங்கம் என்ற பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பிறகு 1445-ம் ஆண்டு முதல் சுய்யம் என்ற இனிப்பு பிரசாதமானது, இது 1450-ம் ஆண்டு முதல் அப்பமானது. 1460-ம் ஆண்டில் அது முழு கறுப்பு உளுந்து வடையானது. இன்றும் இது வழங்கப்படுகிறது. 1468-ம் ஆண்டு முதல் அதிரசம் திருப்பதி பிரசாதமானது. 1547-ம் ஆண்டு மனோகரம் என்ற இனிப்பு முறுக்கு பிரசாதமானது.
Also Read: புரட்டாசி மாதம் அனுமன் வழிபாடு.. வீட்டில் விரதம் இருந்து பூஜை செய்யும் வழிமுறைகள்!
1940ம் ஆண்டு முதல் பக்தர்கள் லட்டுகளை பிரசாதமாக பெற்று வருகின்றனர். 1940-ம் ஆண்டு, திருப்பதி பெருமாளுக்கு நித்ய கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கல்யாண உற்சவத்தில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் ருசியில் மயங்கிய பக்தர்கள், எப்போதும் அந்த பிரசாதத்தை வழங்குமாறு தேவஸ்தானத்திடம் கோரிக்கை வைத்தனர். 1943-ம் ஆண்டு முதல் சனிக்கிழமைதோறும் சிறிய அளவு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
பிறகு தினமும் வழங்கும் முறை உருவானது. இன்றும் சிறிய அளவு லட்டு இலவசம பிரசாதமாகவும், பெரிய அளவு லட்டு விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. கோயிலில் 1940 ஆண்டு முதல், பூந்தி லட்டுவாக மாற்றப்பட்டு பக்தர்களிடம் விநியோகிக்கப்பட்டது.
1950 ஆம் ஆண்டு முதன்முறையாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு, திட்டம் எனப்படும் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருளின் அளவை தீர்மானித்தது. கோயிலின் தேவை மற்றும் அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திட்ட லட்டின் அளவை இறுதி செய்தது. பிறகு 2001 திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தேவஸ்தானம் லட்டு பிரசாத்தை உருவாக்கி வருகிறது.
புவிசார் குறியீடு:
2008-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான பிரசாதமான திருப்பதி லட்டு புவிசார் குறியீடு பெற்றது. 2009 ஆம் ஆண்டு இதைப்போல எவரும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது என்ற காப்புரிமையும் பெற்றது. 2017 ஆம் ஆண்டு திருப்பதி லட்டுவை நினைவுகூரும் அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டது.
Also Read: வசூலை அள்ளிய பழனி ஆண்டவர் கோயில்.. விடுமுறை நாட்களில் மட்டும் ரூ. 5 கோடி காணிக்கை..