Naga Panchami: இன்று நாக பஞ்சமி.. தவறுதலாக கூட இதை செய்யாதீங்க!
Aadi Masam: பாம்புகளுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ள பண்டிகை தான் நாக பஞ்சமி. இது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தின் வளர்பிறை திதியின் 5வது நாளில் வரும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான நாக பஞ்சமி ஆகஸ்ட் 9 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கான திதியானது வெள்ளிக்கிழமை அதிகாலை 12.36 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 3.14 மணிக்கு முடிவடைகிறது.
நாக பஞ்சமி 2024: பொதுவாக ஒவ்வொரு உயிரினங்களும் கடவுளின் வாகனமாக விளங்குகிறது. இவற்றில் சில பல கடவுள்களுக்கு வாகனமாக செயல்படுகிறது, அதில் ஒன்று தான் பாம்புகள். அப்படியாக பாம்புகளுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ள பண்டிகை தான் நாக பஞ்சமி. இது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தின் வளர்பிறை திதியின் 5வது நாளில் வரும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான நாக பஞ்சமி ஆகஸ்ட் 9 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கான திதியானது வெள்ளிக்கிழமை அதிகாலை 12.36 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 3.14 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் சித்தியோகமும், ரவியோகமும் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்றைய நாளில் அதிகாலை 5.47 மணி முதல் காலை 8.27 மணி வரை தான் வழிபட உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாள் முழுவதும் திதி இருப்பதால் முடிந்த நேரத்தில் நாக பஞ்சமி வழிபாடு மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய நாளில் நாம் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றி காணலாம்.
Also Read: Naga Panchami: நாகபஞ்சமி வழிபாடு.. இப்படி செய்தால் புண்ணியம் கிடைக்கும்!
இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்
நாக பஞ்சமியன்று நாக தெய்வத்திற்கு பால் கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் இது மக்கள் மத்தியில் தவறான கருத்து என்று கூறுகிறார்கள். பாம்பு கடவுளுக்கு பால் கொடுக்க வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் கூறவில்லை. ஆனால் பால் அபிஷேகம் செய்ய பரிந்துரைக்கிறது. நாக பஞ்சமியன்று கோயிலுக்குச் செல்லுங்கள். சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து நாக தேவதைகளை வழிபடவும். கோவிலில் உள்ள நாகர் சிலைக்கு அருகில் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி, அந்தக் கலசத்தை பிரசாதமாக வழங்கவும்.
Also Read: Naga Panchami: நாக பஞ்சமி எப்போது? – 5 ராசிக்கு அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம்!
நாக பஞ்சமி அன்று தவறுதலாக கூட செய்யாதீர்கள்
நாக பஞ்சமி அன்று பூமியை தோண்டவோ, வயல்களை உழவோ கூடாது. அவ்வாறு செய்வது புராண நூல்களில் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் பாம்பு இருந்தால் தீங்கு ஏற்படலாம். மேலும் நாக பஞ்சமி அன்று கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தக்கூடாது. இந்த நாளில் தையல், எம்பிராய்டரி போன்ற விஷயங்களைச் செய்யக்கூடாது. நம்பிக்கையின்படி, இந்த நாளில் மேற்குறிப்பிட்ட வேலையைச் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
நாக பஞ்சமியன்று நினைவில் கொள்ள வேண்டிய சில சிறப்புகள் உள்ளன. மேலும் இந்த நாளில் எங்கேயாவது பாம்புகளை கண்டால் தீங்கு செய்யக்கூடாது. பாம்புக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். இந்த நாளில் பாம்புகளை தீண்டினால் சர்ப்ப தோஷம் கால சர்ப்ப தோஷம் போன்ற தோஷங்கள் ஏற்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)