5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadi Masam: தமிழக அரசு சார்பில் கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்.. விண்ணப்பிப்பது எப்படி?

Spiritual Tour : ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு பெயரில் குடிகொண்டுள்ள அம்மனை குடும்பத்தோடு போய் தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். அதேசமயம் வயது மூத்தவர்கள் காலம் காலமாக ஆடி மாத வழிபாட்டை கையாண்டு வரும் நிலையில் அவர்களால் இம்மாதங்களில் அம்மன் கோயில் செல்வதை தவிர்க்கவே முடியாது.

Aadi Masam: தமிழக அரசு சார்பில் கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்.. விண்ணப்பிப்பது எப்படி?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 26 Jul 2024 15:29 PM

ஆன்மிகப் பயணம்: ஆடி மாதம் தொடங்கினாலே அம்மன் கோயில் எல்லாம் திருவிழா கொண்டாட களைக்கட்டி விடும். கடந்த ஜூலை 17 ஆம் தேதி ஆடி தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் மிக முக்கியமான நாளாகவே பார்க்கப்படுகிறது. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு என மிக முக்கியமான நாட்களும் இந்த மாதத்தில் வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு பெயரில் குடிகொண்டுள்ள அம்மனை குடும்பத்தோடு போய் தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். அதேசமயம் வயது மூத்தவர்கள் காலம் காலமாக ஆடி மாத வழிபாட்டை கையாண்டு வரும் நிலையில் அவர்களால் இம்மாதங்களில் அம்மன் கோயில் செல்வதை தவிர்க்கவே முடியாது. அப்படிப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.

Also Read: Aadi Masam: ஆடி மாத ஸ்பெஷல்.. அம்மனுக்கு பிடித்த கூழ் செய்வது எப்படி?

விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. வயதான 1000 நபர்களை கோயிலுக்கு அழைத்து செல்ல இருக்கிறார்கள். இந்த திட்டம் ஏற்கனவே ஜூலை 19, 26 ஆகிய தேதிகளில் செயல்படுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள ஆடிவெள்ளிக் கிழமைகளாக ஆகஸ்ட் 2 மற்றும் 9 ஆம் தேதி இந்த பயணம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதற்காக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பிரசித்தி பெற்ற குறிப்பிட்ட அம்மன் தலங்களுக்கு அனைவரும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

Also Read: Bullet Train : பறக்கும் புல்லட் ரயில்.. சென்னை டூ மைசூரு வெறும் 90 நிமிடங்கள்.. வழித்தடங்கள் குறித்த தகவல்கள்!

அதன்படி,

  • பக்தர்கள் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது சான்றிதழ் அவசியம்.
  • இதற்கான விண்ணப்பங்களை அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர் மற்றும் கோயில் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
  • இந்த விண்ணப்பங்களுடன் நிலையான முகவரி, ஆதார் கார்டு, பான் கார்டு, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள வருமான சான்றிதழ் ஆகியவை இணைக்க வேண்டும்.
  • இந்த இலவச ஆன்மிக பயணத்துக்கான விண்ணப்பங்களை அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://hrce.tn. gov. in பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆன்மிக சுற்றுலாவில் பங்கேற்று பயன்பெறுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Latest News