Varalakshmi Viratham: வரலட்சுமி நோன்பு அன்று வீட்டில் வழிபடுவது எப்படி?
Aadi Masam: பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தான் வரலட்சுமி நோன்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டு ஆடி மாதம் கடைசி நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு வருகிறது. வரலட்சுமி நோன்புக்கு முதல் நாளான வியாழக்கிழமை வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். பூஜையறை மற்றும் பூஜைக்கு சம்பந்தப்பட்ட பொருட்களை விளக்கி வைக்க வேண்டும்.
வரலட்சுமி நோன்பு: ஆடி மாதம் என்பது ஆன்மிகத்துக்குரிய மாதம் என்பது நாம் அறிந்தது. அப்படியான இந்த மாதத்தில் வரும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று வரலட்சுமி நோன்பு. இது கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி சுமங்கலி பெண்கள் இருக்கும் விரதமாகும். வழக்கமாக ஆடி மாதம் தான் வரலட்சுமி நோன்பு வரும். ஆனால் சில சமயம் ஆடி மாதத்தில் இரு அமாவாசைகள் வரும். அப்போது இந்த நோன்பு தள்ளிப்போய் ஆவணி மாதத்தில் வரவும் செய்யும். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தான் வரலட்சுமி நோன்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டு ஆடி மாதம் கடைசி நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு வருகிறது.
இதையும் படிங்க: Horoscope Today: ஆகஸ்ட் 13 2024 ராசிபலன்.. மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய ராசிபலன்..
வரலட்சுமி நோன்புக்கு முதல் நாளான வியாழக்கிழமை வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். பூஜையறை மற்றும் பூஜைக்கு சம்பந்தப்பட்ட பொருட்களை விளக்கி வைக்க வேண்டும். எந்த காரணம் கொண்டு வரலட்சுமி நோன்பு அன்று இத்தகைய வேலைகளை செய்யக்கூடாது. தரை முதல் மேலே உள்ள கூரை வரை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டு வாசலை சுத்தம் செய்து மிகப்பெரிய அளவில் மாக்கோலம் போட வேண்டும். வண்ணக்கோலம் போட்டாலும் பிரச்னையில்லை. மகாலட்சுமி வாசம் செய்யும் வீட்டை எப்படி தோன்றுகிறதோ அப்படியே அலங்கரியுங்கள். அழகான இடங்கள் எல்லாம் திருமகளின் இருப்பிடமாக கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து நிலைவாசல் தொடங்கி வீட்டின் எல்லா அறை வாசல்களிலும் மஞ்சள் குங்குமம் மறக்காமல் வைக்க வேண்டும் . இவை இரண்டும் தான் மகாலட்சுமி தத்துவம் என சொல்லப்படுகிறது. மகாலட்சுமிக்கு பிடித்தது 3 தான். மஞ்சள், குங்குமம், மலர்கள் இவை மூன்றும் தான் மகாலட்சுமி குடியிருக்கும் இடமாகும். மேலும் வரலட்சுமி பூஜையின்போது மஞ்சள் ஆடையும், தாமரை மலர்களையும் பயன்படுத்தலாம்.
ஒரு மரப்பலகை அல்லது பெஞ்சை எடுத்து அதனை சுத்தம் செய்ய வேண்டும். அதன் மீது சுத்தமான சிவப்பு துணியை விரித்து அதில் லட்சுமி மற்றும் கணபதியின் சிலை அல்லது படத்தை வைக்க வேண்டும். லட்சுமி தேவியின் சிலைக்கு அருகில் சிறிது அரிசியை வைத்து அதன் மீது தண்ணீர் நிரப்பப்பட்ட கலசத்தை வைக்கவும். நீரில் மாவிலைகளை போட்டு அதன் நடுவே தேங்காய் வைத்து வழிபடலாம். கலசத்தின் கழுத்தில் சேலை அல்லது பட்டுப்பாவாடைக் கட்டி மகாலட்சுமியாக பாவித்து வழிபடலாம். இதில் கலசத்தின் கழுத்தில் நகைகளையும் அணிவிக்கலாம்.
இதையும் படிங்க: Astrology: தங்க நகைகளை காலில் அணியலாமா? – சாஸ்திரம் சொல்வது என்ன?
விளக்குகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் வீட்டில் பூஜையறையின் அத்தனை சாமி படங்கள் அல்லது சிலைகளுக்கு மலர்கள் வைக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போடவும். அதேசமயம் அகல்விளக்கில் சிறிது பசுநெய் விட்டு விளக்கேற்றுவது சிறந்தது. வாசலில் மாவிலை தோரணம் கட்டிக்கொள்ளவும். இதன்பின்னர் விளக்கேற்றி தீபாராதனை காட்ட வேண்டும். வடை, புளிசாதம், சர்க்கரைப் பொங்கல் என ஏதாவது முடிந்த நைவேத்தியம் படைத்தும் வழிபடலாம்.
இந்த மகாலட்சுமி விரத வழிபாட்டின்போது குடும்பத்தினர், நண்பர்கள், அக்கம் பக்கத்தைச் சேர்ந்த பெண்களை அழைக்கலாம். அப்படி வருகை தருபவர்களுக்கு பூஜை முடிந்தபின் புதுத்துணி, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்கி சிறப்பிக்கலாம்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)