Thiruvalasuzhi Pillaiyar: திருமண தடையால் அவதியா? – இந்த பிள்ளையார் கோயில் போங்க! - Tamil News | swetha vinayagar, THIRUVALANSUZHI PILLAIYAR KOVIL, Aadi Masam, Temple special | TV9 Tamil

Thiruvalasuzhi Pillaiyar: திருமண தடையால் அவதியா? – இந்த பிள்ளையார் கோயில் போங்க!

Published: 

25 Jul 2024 16:41 PM

Swetha Vinayagar: தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் போது தடங்கல் ஏற்பட்டது. விநாயகரை வணங்காததால் தான் இந்த தடங்கல் ஏற்பட்டதாக உணர்ந்த அவர்கள், பாற்கடலைக் கடைந்ததால் ஏற்பட்ட நுரையை வைத்து விநாயகர் திருவுருவம் செய்து வழிபட்டனர். பின்னர் பாற்கடலை கடைந்து அமிர்தம் பெற்றனர்.

Thiruvalasuzhi Pillaiyar: திருமண தடையால் அவதியா? - இந்த பிள்ளையார் கோயில் போங்க!

கோப்பு புகைப்படம்

Follow Us On

கும்பகோணம் வெள்ளை விநாயகர்: நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்றால் ஒன்று நமக்கு போராடி முயற்சிக்கும் சக்தி வேண்டும். அதைவிட இறைவனின் அனுக்கிரகம் வேண்டும். அப்படியான சூழலில் தான் நாம் எதிர்கொள்ளும் அனைத்தையும் வெற்றிக்கொள்ள முடியும். அந்த வகையில் மாமன்னர் ராஜராஜசோழனின் குலதெய்வ கோயிலாக கும்பகோணத்துக்கு அருகே உள்ள ‘திருவலஞ்சுழி’ என்ற ஊரில் அருள்பாலித்து வரும் கபர்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் அருள்புரியும் ஷேத்திர பாலர்தான் அவரின் குலதெய்வம். தென்காவிரி கரையில் அமைந்திருக்கும் 25வது திருத்தலம் இதுவாகும். இந்த கோயிலில் திருவலஞ்சுழிநாதர் என போற்றப்பட்டும் கபர்தீஸ்வரர் மூலவராக எழுந்தருளியுள்ளார். இதே ஆலயத்தில் விநாயகருக்கும் க்ஷேத்திரபாலருக்கும் தனி கோயில்கள் உள்ளது.

விநாயகர் சிறப்பு

 

ஸ்வேத விநாயகர் என போற்றப்படும் அந்த விநாயகர் வெள்ளை நிறத்தில் இருப்பார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் போது தடங்கல் ஏற்பட்டது. விநாயகரை வணங்காததால் தான் இந்த தடங்கல் ஏற்பட்டதாக உணர்ந்த அவர்கள், பாற்கடலைக் கடைந்ததால் ஏற்பட்ட நுரையை வைத்து விநாயகர் திருவுருவம் செய்து வழிபட்டனர். பின்னர் பாற்கடலை கடைந்து அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட விநாயகர் என்பதால் அவர் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறார்.

Also Read: Hrudayaaleeswarar Temple: இதய நோய்களை தீர்க்கும் இருதயாலீஸ்வரர் கோயில்!

எங்கு இருக்கிறது கோயில்?

கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில் சுவாமிமலை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் கோயில் உள்ளது. கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் வழியாகவும் வரலாம். கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர், பாபநாசம் செல்லும் பேருந்துகளில் சென்று கோயிலை அடையலாம். காவிரி நதி வலப்பக்கமாக சுழிந்து செல்வதால் இந்த இடத்துக்கு திருவலஞ்சுழி என பெயர் வந்ததாக சொல்வார்கள்.

கோயிலின் சிறப்பு

ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து வெள்ளை விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.இவருக்கு மற்ற கோயில்களில் நடப்பது போன்ற அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு மட்டும் சாத்தி வழிபடுவார்கள். மேலும் பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து விநாயகரை தொடாமல் அர்ச்சகர் தூவி விடுவார்.

Also Read: Siruvapuri: சொந்த வீடு கனவை நனவாக்கும் சிறுவாபுரி முருகன் கோயில்!

கோயில் திறந்திருக்கும் நேரம்

வலஞ்சுழிநாதர் கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். இந்த விநாயகரை வேண்டினால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நிறைவேறும். விநாயகருக்கு இருக்கும் 10 படை வீடுகளில் இத்தலமும் ஒரு படை வீடு என சொல்லப்படுகிறது. திருமண தடை, குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இந்த ஸ்வேத விநாயகரை வழிபாட்டால் தங்கள் எண்ணம் நடைபெறும்.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version