Srivilliputhur Andal Temple: திருமண வரம் அருளும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில்!

Aadi Masam 2024: எல்லாருக்கும் திருமணத்தைப் பற்றிய ஒரு கனவு இருக்கும். தனக்கு வரவேண்டிய வாழ்க்கை துணை சரியாக இருக்க வேண்டும், நம் மனம் கவர்ந்தவராக நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்த எண்ணங்கள் நிறைவேற சில கடவுள்கள் வழிதுணைப் புரிவார்கள் என முன்னோர்கள் கணித்துள்ளனர். அந்த வகையில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் திருமண வரம் கொடுக்கும் கோயில்களில் ஒன்று.

Srivilliputhur Andal Temple: திருமண வரம் அருளும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில்!

கோப்பு புகைப்படம்

Published: 

06 Aug 2024 13:54 PM

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில்:  நம் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு தேவை இருக்கும். அதனை நிறைவேற இறைவனை நாடி வழிபடுவது வழக்கம். அந்த வகையில் எல்லாருக்கும் திருமணத்தைப் பற்றிய ஒரு கனவு இருக்கும். தனக்கு வரவேண்டிய வாழ்க்கை துணை சரியாக இருக்க வேண்டும், நம் மனம் கவர்ந்தவராக நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்த எண்ணங்கள் நிறைவேற சில கடவுள்கள் வழிதுணைப் புரிவார்கள் என முன்னோர்கள் கணித்துள்ளனர். அந்த வகையில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் திருமண வரம் கொடுக்கும் கோயில்களில் ஒன்று. இந்த கோயில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.இந்த கோயிலுக்கு திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கார், பேருந்து, ரயில் மூலமாக செல்லலாம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் கோபுரம் தான் தமிழக அரசின் இலச்சினையில் இடம்பெற்றுள்ளது. இக்கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 99வது திவ்ய தேசமாகக் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க: Aadi Pooram: ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு.. வீட்டிலேயே செய்வது எப்படி?

கோயில் சிறப்பு

ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்து வந்த பெரியாழ்வார் மகள் கோதை நாச்சியார். இவர் நந்தவனத்தில் பூக்கும் பூக்களை பறித்து மாலையாக தொடுத்து அதை பெரியாழ்வாரிடம் கொடுப்பார். அவர் அதை இறைவனான பெருமாளுக்கு சூட்டி வழிபடுவது வழக்கம். ஆனால் கோதை நாச்சியார் பூக்களை தொடுத்து தன் கூந்தலில் சூடி தான் இறைவனுக்கு பொருத்தமானவளா என்பதை கண்ணாடியில் கண்டுகளித்து வருவாள். ஒருநாள் பெரியாழ்வார் வழக்கம்போல மாலையை இறைவனுக்கு படைக்க செல்லும்போது அதில் தலைமுடி இருந்துள்ளது. இதனால் வேறுமாலையை பெருமாளுக்கு சூட, தனக்கு கோதை நாச்சியார் தொடுத்த மாலையே வேண்டும் என பெருமாள் தெரிவித்துள்ளார். பின்னர் கோதை நாச்சியார் இறைவனை நினைத்து தவம் இருக்க, பெரியாழ்வார் பெருமாளின் வார்த்தைக்காக காத்திருந்தார்.

ஒருநாள் அவர் முன் தோன்றிய பெருமாள், தான் கோதையை நேசிப்பதாகவும், அவளை பூப்பல்லக்கில் அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் வருமாறும் கூறினார். அங்கு சென்றதும் பெருமாளோடு கோதை நாச்சியார் ஐக்கியமானார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் கோதையோடு அருள்பாலிக்க வேண்டும் என பெரியாழ்வார் கேட்டதால், இருவரும் அங்கு கோயில் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்வின் காரணமாக இன்றும் கூட முதல் நாள் ஆண்டாளுக்கு சாற்றப்படும் மாலை, மறுநாள் காலை வடபெரும் கோயிலில் உள்ள பெருமாளுக்கு சூட்டப்படுகிறது. இக்கோயிலில் மார்கழி மாதம் எண்ணெய் காப்பு உற்சவம் நடத்தப்படும். இதில் 61 வகை மூலிகைகள் அடங்கிய தைலம் பயன்படுத்தப்படுகிறது. 8 நாட்கள் நடைபெறும் விழாவுக்கு 40 நாட்கள் எண்ணெய் காய்ச்சப்படும்.

இதையும் படிங்க: Aadi Pooram: ஆடிப்பூரம் திருவிழாவுக்கு பேமஸான கோயில்கள் என்னென்ன தெரியுமா?

திருமணத்தடை நீங்கும் தலம்

ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் மூவரும் ஒரே ஸ்தானத்தில் அருள் பாலிக்கிறார்கள். மேலும் ஆண்டாளுடன் அருள் பாலிக்கும் ரங்க மன்னர் ராஜகோலத்தில் இருப்பதை காண்பது மிகவும் சிறப்பானது. திருமண வரம் வேண்டுபவர்கள் ஆடிப்பூரம் திருவிழா அல்லது மற்ற விஷேச நாட்களில் இங்கு வரவேண்டும். அப்படி வந்து வழிபாடுவதால் கோதை நாச்சியாருக்கு எப்படி அவர் மனம் கவர்ந்த இறைவன் கணவனாக அமைந்தாரோ அதேமாதிரி வாழ்க்கைத்துணை அமையும் என்பது ஐதீகம்.

அதுமட்டுமல்லாமல் குழந்தைப்பேறு, கல்வியறிவு, வியாபார விருத்தி, குடும்ப மகிழ்ச்சி, விவசாயம் செழிக்க வேண்டுபவர்கள் இக்கோயிலுக்கு சென்று வழிபடலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!