5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadi Masam: ஆடி மாதம் முழுவதும் நடை சாத்தப்பட்டிருக்கும் அம்மன் கோயில்!

Temple Special: ஆடிமாதம் என்றாலே நம்மைச் சுற்றி இறையருள் பரவும் வகையில் ஆன்மிக மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அம்மன் கோயில்கள் எல்லாம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, வரலட்சுமி நோன்பு என இம்மாதம் முழுக்க ஒரே கொண்டாட்ட காலம் தான்.

Aadi Masam: ஆடி மாதம் முழுவதும் நடை சாத்தப்பட்டிருக்கும் அம்மன் கோயில்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 13 Aug 2024 15:03 PM

ஸ்ரீ உமையநாயகி அம்மன்: பொதுவாக ஆடிமாதம் என்றாலே நம்மைச் சுற்றி இறையருள் பரவும் வகையில் ஆன்மிக மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அம்மன் கோயில்கள் எல்லாம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, வரலட்சுமி நோன்பு என இம்மாதம் முழுக்க ஒரே கொண்டாட்ட காலம் தான். கோயில்கள் மட்டுமல்ல நம் இல்லங்களிலும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இறையருள் பரவ செய்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு அம்மன் கோயில் மட்டும் ஆடி மாதம் முழுவதும்  நடை சாத்தப்பட்டிருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? அந்த கோயிலின் சிறப்பு பற்றி நாம் காணலாம்.

Also Read: Vastu Tips: பூஜையறையில் தவறியும் கூட இதெல்லாம் செய்யாதீங்க!

அந்த கோயில் எங்குள்ளது?

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் களைகட்டி இருக்கும் நிலையில் நடை சாத்தப்பட்டிருக்கும் அந்த அம்மன் கோயில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி என்ற ஊரில் உள்ளது.  அந்த ஊரை அடுத்த எஸ்.தரைக்குடியில் அமைந்துள்ள அக்கோயிலில் ஸ்ரீ உமையநாயகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இந்த  கோயிலில் தான் ஆடி மாதம் முழுவதும் நடை சாத்தப்பட்டு வருகிறது. இது பல வருடங்களாக வழக்கத்தில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் ஆடி மாதப் பிறப்பையொட்டி கடந்த ஜூலை  16 ஆம் தேதி இரவு  பல்வேறு பூஜை வழிபாட்டுடன் உமையநாயகி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டது.

இதோடு ஆடி மாதம் நிறைவடைந்த பின்னர் தான் கோயில் நடைத் திறக்கப்படும் என்பதால் வரும் ஆவணி மாதம் ஒன்றாம் தேதியான ஆகஸ்ட் 17 ஆம் தேதி இந்த கோயில் நடை திறக்கப்பட உள்ளது. இந்த கோயில் சாயல்குடியைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர் மக்களுக்கு குலதெய்வ கோயிலாக உள்ளதாகவும், பல்வேறு மாவட்ட மக்களும் கோயிலின் பெருமை அறிந்து வருகை தருவதாகவும்  அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இக்கோயிலின் மூலவரான உமையநாயகிஅம்மன் மேற்கூரையின்றி திறந்த வெளியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

Also Read: Varalakshmi Viratham: வரலட்சுமி நோன்பு அன்று வீட்டில் வழிபடுவது எப்படி?

மேலும் இந்த கோயில் ஆடி மாதம் அடைக்கப்படுவதற்கு பின்னால் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது ஆடி மாதத்தின் முதல் நாளில் உமையநாயகி அம்மன் தரைக்குடியில் இருந்து ராமேஸ்வரம் செல்வதாகவும், அங்கு அக்னித் தீா்த்தம் உள்ளிட்ட புனித நீா்நிலைகளில் நீராடுகிறார். பின் மறுபடியும் ஆவணி மாதம் முதல் நாள் தரைக்குடி கோயிலுக்கு திரும்புவதாக ஐதீகமாக பார்க்கப்படுகிறது. எனவே ஆவணி மாதத்தின் முதல் நாளில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கிராமத்தில் இருந்தும் திரளான பக்தா்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த அம்மனை வேண்டிக்கொண்டால்

Latest News