Thoranamalai: மன அமைதி தரும் தோரணமலை முருகன் கோயில்.. என்னென்ன சிறப்பு தெரியுமா?
Temple Special: மூலிகை மரங்களும், வற்றாத சுனைகளும் நிறைந்த தோரணமலையில் கோயில் கொண்டிருக்கும் முருகனுக்கு திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பம் வாழையடி வாழையாக செழிக்கும் என்பது நம்பிக்கையாகும். மொத்தம் 1000 படிகளைக் கொண்ட இந்த கோயிலைச் சுற்றி ராமாநதி, ஜம்புநதி ஆகியவை ஓடுகின்றது. இந்த கோயிலுக்கு பேருந்து, கார், தனிப்பட்ட வாகனங்கள் மூலமாக செல்ல முடியும்.
முருகன் கோயில்: தோரணைமலை முருகன் கோயில் தென்காசி மாவட்டத்தில் இருந்து கடையம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கும் உச்சிக்கால பூஜையின்போது சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற காண அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். திருமணம், மகப்பேறு, குடும்ப பிரச்னை, சொத்து தகராறு, படிப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் இருக்கும் தடைகள் நீங்கி தோரணமலை முருகன் மகிழ்ச்சியை மட்டும் தருவான் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
Also Read: Trigrahi Yogam: சிம்ம ராசியில் இணையும் 3 கிரகங்கள்..எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்?
தோரணமலை உச்சியில் அமைந்துள்ள முருகனை அகத்தியர், தேரையர் பல ஆண்டுகளுக்கு முன் வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த மலையில் உள்ள குகையில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கி இருப்பதால் இவரை வணங்கினால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். இந்த தோரணமலை முருகனுக்கும் மாலை அணிந்து விரதம் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள்.தோரணமலையில் உள்ள ஒவ்வொரு படிக்கட்டாக ஏறும்போது வாழ்க்கையில் முருகன் நம்மை உயர்த்துவார் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
முருகனை வணங்கி விட்டு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தால் மன அழுத்தம், மன சோர்வு போன்ற பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகமாகும். மூலிகை மரங்களும், வற்றாத சுனைகளும் நிறைந்த தோரணமலையில் கோயில் கொண்டிருக்கும் முருகனுக்கு திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பம் வாழையடி வாழையாக செழிக்கும் என்பது நம்பிக்கையாகும். மொத்தம் 1000 படிகளைக் கொண்ட இந்த கோயிலைச் சுற்றி ராமாநதி, ஜம்புநதி ஆகியவை ஓடுகின்றது.
Also Read: Varalakshmi Viratham: வரலட்சுமி நோன்பு எப்போது? – இந்தாண்டு கொஞ்சம் ஸ்பெஷல் தெரியுமா?
இந்த கோயில் உருவான வரலாறு சுவாரஸ்யமான ஒன்று. அதாவது தோரணமலை அருகில் இருக்கும் முத்துமாலைபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் நா.பெருமாள். ஒருநாள் இவர் கனவில் முருகன் தோன்றினார். அப்போது நான் தோரணமலை உச்சியில் உள்ள சுனைக்குள் கிடைக்கிறேன். என்னை வெளியில் எடுத்து வணங்குமாறு தெரிவித்துள்ளார். மறுநாள் பொழுது விடிந்ததும் பெருமாள் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து மலை உச்சியில் உள்ள சுனை நீரை வெளியேற்றி பார்த்தால் அங்கு முருகன் சிலை இருந்தது.
அந்த சிலையை மலையடிவாரத்தில் வைத்து வணங்கி வழிபட்டனர். இன்றும் அந்த சிலை சன்னிதானத்தில் மூலவராக உள்ளது. இதனைத் தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் உள்ள 150 சினிமா தியேட்டர்களில் விளம்பரம் மூலம் பெருமாள் மகனான ஆதிநாராயணன் தோரணமலை முருகன் பற்றிய தகவலை தெரிவிக்க மக்கள் இந்த கோயிலுக்கு படையெடுக்க தொடங்கினர். இதனைத் தொடர்ந்து மலை உச்சிக்கு செல்ல 1000 படிக்கட்டுகள் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.