Papanasanathar Temple: ஜென்ம பாவங்களை போக்கும் பாபநாசம் கோயில்..!
Papanasam: நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்கள் யாவும் நம் தலைமுறையினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நிலையில் இதனை தடுப்பதற்கென சில வழிகளும் உள்ளது. அதில் ஒன்று தான் இறை வழிபாடு. அந்த வகையில் நாம் செய்த பாவங்களை எல்லாம் போக்கும் தலமாக பாபநாதசாமி கோயில் உள்ளது. பாபநாத சுவாமி கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது.
பாபநாதர் சுவாமி கோயில்: ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் பெற்று மகிழ்ச்சியாக நாமும்,நம்முடைய தலைமுறையினரும் வாழ வேண்டும் என்று நினைப்போம். இந்த வேண்டுதலை எப்போதும் கடவுளிடம் வைப்போம். ஆனால் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்கள் யாவும் நம் தலைமுறையினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நிலையில் இதனை தடுப்பதற்கென சில வழிகளும் உள்ளது. அதில் ஒன்று தான் இறை வழிபாடு. அந்த வகையில் நாம் செய்த பாவங்களை எல்லாம் போக்கும் தலமாக பாபநாதசாமி கோயில் உள்ளது. அந்த கோயிலைப் பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் காணலாம். இந்த கோயில் நவகைலாயங்களில் முதல் தலம் என்ற சிறப்பைப் பெற்றது.
எப்படி செல்ல வேண்டும்?
பாபநாதர் சுவாமி கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு நாம் பேருந்து, கார், ரயில் மூலம் வரலாம்.
Also Read: Aadi Masam: ஆடி செவ்வாயில் ஔவையார் விரதம்.. என்ன பலன்கள் கிடைக்கும்?
கோயிலின் வரலாறு
இந்த கோயிலில் பாபநாதர் சுவாமியுடன் உலகம்மை அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சாளுக்கிய பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகரம் மற்றும் நாயக்கர் கால அரசர்களால் விரிவுப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
புராண வரலாறுகளின்படி, சிவனுக்கும் பார்வதிக்கும் கயிலை மலையில் நடந்த திருமணத்தை அகத்தியர் காண முடியாமல் போனதாகவும், திருமணக் கோலத்தைக் காண விரும்பி இறைவனை வேண்டியதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி, அகத்தியர் விருப்பத்தை நிறைவேற்ற சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சியளித்த இடம் தான் பாபநாசம் என கூறப்படுகிறது. இக்காட்சியை கோயிலின் கருவறைக்குப் பின் இருப்பதைக் காணலாம். அதன் பக்கத்தில் அகத்தியர் தன் மனைவியுடன் வணங்கும்படியான சிலையும் இருக்கும்.
மேலும் அசுர குருவான சுக்கிராச்சாரியாரின் மகன் துவஷ்டாவை இந்திரன் கொன்றதால் அவனுக்கு பிரம்மஹத்தி என்ற தோஷம் பிடித்தது. இதனால் பூமியில் பல கோயில்களுக்கு சென்று சிவனை வழிபட்டும் அவனின் தோஷம் நீங்கவில்லை. இதனால் வியாழ பகவான் அறிவுரையின்படி, பாபநாசம் வந்து வேண்டியதால் இந்திரன் தோஷம் நீங்கியதாக சொல்லப்படுகிறது. அதனால் இங்கிருக்கும் சிவம் பாபநாசநாதர் என அழைக்கப்படுகிறார்.
இக்கோயில் 9 நவக்கிரக்கிரங்களில் முதன்மையானதாக சொல்லப்படும் சூரியனுக்குரியதாகும். ஒவ்வொரு தைப்பூச தினத்திலும் நந்திக்கு சந்தனக்காப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கும். மேலும் உலகம்மை அம்பாள் சன்னதி முன்பு ஒரு உலக்கை இருக்கும், அதில் விரலி மஞ்சளை போட்டு பெண்கள் இடித்து பொடி செய்வார்கள். இந்த மஞ்சளை அபிஷேகத்துக்கு பயன்படுத்துவார்கள். இதனை குடித்தால் திருமண பாக்கியம், சுமங்கலி வரம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
நீங்கள் பாபநாசம் வந்து தாமிரபரணி நதிக்கரையில் நீராடி பாபநாசநாதர் , உலகம்மை சிலைகளுக்கு வஸ்திரம் அணிவித்து அபிஷேகம் செய்து வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என நம்பப்படுகிறது. வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று பாவத்தை நீக்க முயற்சிக்க வேண்டும் என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.