5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ramar Temple: பித்ரு தோஷம் நீக்கும் ராமர் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?

அமாவாசைகளில் கண்டிப்பாக முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் நினைவு திதி தவிர இந்த 3 அமாவாசையில் ஏதேனும் ஒருநாளாவது தர்ப்பணம் செய்ய வேண்டும். அப்படி முன்னோர்களை வழிபடாவிட்டால் பித்ரு தோஷம் ஏற்படும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பணம், உடல்நலம் ஆகியவற்றில் பிரச்னை உண்டாகும். இவையெல்லாம் சரியாக நாம் சில கோயில்களுக்கும் சென்றும் வழிபடலாம்.

Ramar Temple: பித்ரு தோஷம் நீக்கும் ராமர் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 16 Oct 2024 12:57 PM

பித்ரு தோஷம்: பொதுவாக நம்முடைய முன்னோர்களை மறக்காமல் வழிபட  வேண்டும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. நாம் அல்லது நம் முன்னோர்கள் செய்த கர்ம வினைகள் நம்மை தாக்காமல் இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட வேண்டும். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து வழிபட முடியாதவர்கள் தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசைகளில் கண்டிப்பாக முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் நினைவு திதி தவிர இந்த 3 அமாவாசையில் ஏதேனும் ஒருநாளாவது தர்ப்பணம் செய்ய வேண்டும். அப்படி முன்னோர்களை வழிபடாவிட்டால் பித்ரு தோஷம் ஏற்படும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பணம், உடல்நலம் ஆகியவற்றில் பிரச்னை உண்டாகும். இவையெல்லாம் சரியாக நாம் சில கோயில்களுக்கும் சென்றும் வழிபடலாம். அவற்றில் முக்கியமானது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பிண்ட ராமர் கோயிலாகும்.

எங்கு உள்ளது?

 

திருநெல்வேலி மாவட்டத்தில் நகரப்பகுதியில் அமைந்துள்ள அருகன்குளம் அருகில் தான் இந்த கோயில் அமைந்துள்ளது. அங்கிருந்து நாரணம்மாள்புரம் செல்லும் சாலையில் இருக்கும் இக்கோயில் ராமேஸ்வரம் தலத்திற்கு இணையானதாக கருதப்படுவதால் பழைய ராமேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. மேலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஜடாயு தீர்த்தத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஸ்ரீபர்வதவர்தினி அம்பாளுடன் ஸ்ரீராமலிங்க சுவாமி காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் தான் பிண்ட ராமர் சன்னதி உள்ளது.

இதையும் படிங்க: Papanasanathar Temple: ஜென்ம பாவங்களை போக்கும் பாபநாசம் கோயில்..!

கோயில் வரலாறு

 

சூரிய பகவானின் தேரோட்டியாக இருந்தவர் அருணன். இவருக்கு சம்பாதி, ஜடாயு என இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் ஜடாயு ராமரின் தந்தையான தசரதனுக்கு போரில் உறுதுணையாக இருந்ததால் அவன் மீது தசரதன் மிகப்பெரிய அன்பு இருந்தது. இப்படியான நிலையில் சீதாவை ராவணன் கவர்ந்து சென்ற நிலையில், அவனுடன் ஜடாயு போர் செய்தான். சிவபெருமான் கொடுத்த வாளைக் கொண்டு ஜடாயுவின் இரண்டு இறக்கைகளையும் ராவணன் வெட்ட, தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அவன் கீழே விழுந்தான். ராமன் வரும் வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த ஜடாயு, ராவணன் சீதையுடன் சென்ற திசையைக் காட்டி விட்டு உயிரை விட்டான்.

இதனைத் தொடர்ந்து ஜடாயு தனது அப்பாவுக்கு நண்பர், தனக்கு சிறிய தந்தை முறை என்பதால் ராமன் அவனுக்கு ஈமக்கிரியை செய்ய முன்வந்தார். அதன்படி தாமிரபரணி ஆற்றின் கரையோரம் கிணறு தோண்டினார். அந்த இடத்தில் கங்கை நீர் பெருக்கெடுக்க இறுதி காரியங்கள் செய்யப்பட்டது. பின்னர் ஆற்றின் கரையோரம் ராமன் தர்ப்பணம் செய்த இடம் ஜடாயு தீர்த்தக் கட்டம் என சொல்லப்படுகிறது. பின்னர் மாவினான் பிண்டம் பிடித்து அதை ஆற்று நீரில் கரைத்ததாகவும் கூறப்படுகிறது. சிவன் மற்றும் பார்வதியை வணங்கியை ராமன், யார் ஒருவர் தாமிரபரணி ஆற்றின் ஜடாயு தீர்த்த கட்டத்தில் நீராடி தன் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு, 21 ஆண்டுகள் தர்ப்பணம் செய்வதற்கான புண்ணிய பலன்களை நான் வழங்குவேன் என கூறியதாக வரலாறு தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: Sorimuthu Ayyanar: குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய சொரிமுத்து அய்யனார் கோயில்!

இதன் காரணமாக தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பலன் பெறுகின்றனர். அவ்வாறு செய்வதால் திருமணம், குழந்தை பேறு, உடல்நலம் ஆகியவற்றில் இருந்த தடைகள் நீங்கி குடும்பத்தில் செல்வ வளம் பெரும் என நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இக்கோயிலில் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம்.

Latest News