5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Varalakshmi Viratham: வரலட்சுமி நோன்பு எப்போது? – இந்தாண்டு கொஞ்சம் ஸ்பெஷல் தெரியுமா?

Aadi Masam: மகாலட்சுமி விரதம் இருப்பதால் நமக்கு சில பலன்கள் கிடைக்கிறது. தொன்றுத்தொட்டு பல தலைமுறைகளாக மகாலட்சுமி விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த விரதத்தை கடைபிடித்தால் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கிறது. குடும்பத்தில் வறுமை அகல்வதோடு செல்வ செழிப்பும் மேலோங்கும்.

Varalakshmi Viratham: வரலட்சுமி நோன்பு எப்போது? – இந்தாண்டு கொஞ்சம் ஸ்பெஷல் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 12 Aug 2024 12:18 PM

வரலட்சுமி நோன்பு: ஆடி மாதம் என்பது ஆன்மிகத்துக்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் பல்வேறு விதமாக ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறும். அதில் ஒன்று தான் வரலட்சுமி விரதம். இது கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி சுமங்கலி பெண்கள் இருக்கும் விரதமாகும். இந்நாளில் பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி விரதம் இருப்பார்கள். வழக்கமாக ஆடி மாதம் தான் வரலட்சுமி நோன்பு வரும். ஆனால் ஆடி மாதத்தில் இரு அமாவாசைகள் வந்தால் இந்த நோன்பு தள்ளிப்போய் ஆவணி மாதத்தில் வரும். வரலட்சுமி விரதம் தொடர்பாக பல்வேறு விதமான கதைகள் சொல்லப்படுகிறது. அவற்றில் மிக முக்கியமாக சொல்லப்படுவது என்னவென்றால்,  சிவபெருமானின் அறிவுரைப்படி உமாதேவி மகாலட்சுமியை வழிபட்டு விரதம் இருந்ததால் முருகனை பெற்றார் என்பது தான். ஆனால் நடப்பாண்டு வரலட்சுமி நோன்பு மிகவும் ஸ்பெஷலானது. அதனைப் பற்றி நாம் காணலாம்.

இதையும் படிங்க: Vastu Tips: வீட்டு வாசலை நோக்கி கால் வைத்து தூங்குவது நல்லதா?

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தான் வரலட்சுமி நோன்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு வரலட்சுமி நோன்பு ஆடி மாதம் கடைசி நாளில் (ஆகஸ்ட் 16) வருகிறது. அதுவும் ஆடி கடைசி வெள்ளியில் வருவதால் மிகப்பெரிய சிறப்பாக பார்க்கப்படுகிறது. பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உரியது. அந்நாளில் சுக்கிரனுக்குரிய பூராடம் நட்சத்திரம் வருவது இன்னும் சிறப்பு. பூராடம் நட்சத்திரம் தனுசு ராசிக்குரியது. அந்த ராசி குருவுக்குரிய ராசியாகும். கணவரின் ஆயுள் பலம் வேண்டி, நீண்ட காலம்  தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என திருமணமான பெண்கள் இந்த விரத்ததை கடைபிடிக்கிறார்கள். இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பு தினத்தில் விஷ்ணுக்குரிய ஏகாதசி விரதமும் வருகிறது. ஆக இந்த முறை ஆடி வெள்ளி, ஏகாதசி, வரலட்சுமி நோன்பு உள்ளிட்ட மூன்றும் வருகை தருவதால் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Astrology: வேலை தேடும் 6 ராசியினருக்கு கிடைக்கப்போகும் பொன்னான வாய்ப்பு!

இந்த மகாலட்சுமி விரதம் இருப்பதால் நமக்கு சில பலன்கள் கிடைக்கிறது. தொன்றுத்தொட்டு பல தலைமுறைகளாக மகாலட்சுமி விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த விரதத்தை கடைபிடித்தால் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கிறது. அதாவது, குடும்பத்தில் வறுமை அகல்வதோடு செல்வ செழிப்பும் மேலோங்கும். குடும்பத்தில் நிலவும் பிரச்னைகள் நீங்கி, நல்லுறவு வளரும். கணவருடனான அன்பு அதிகரிக்கும். எங்கு அன்பு, சந்தோசம் நிலைத்திருக்கிறதோ அங்கு நாம் அழைக்காமலே மகாலட்சுமி வாசம் வீசுவாள் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News