Aadi Perukku 2024: ஆடிப்பெருக்கு நாளில் வீட்டிலேயே வழிபடுவது எப்படி?

Aadi 18th Day: நடப்பாண்டு ஆடிப்பெருக்கு திருவிழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாள் விவசாயிகளுக்கு மிக முக்கியமான நாள் என்றாலும், காவிரி நதிக்கரையோரம் வசிக்கும் மக்களால் நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் வைபவமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்படிப்பட்ட ஆடிப்பெருக்கு நாளில் பெண்கள் தாலிக்கயிறு, தாலிச்சரடு ஆகியவற்றை மாற்றிக்கொள்வார்கள்.

Aadi Perukku 2024: ஆடிப்பெருக்கு நாளில் வீட்டிலேயே வழிபடுவது எப்படி?

கோப்பு புகைப்படம்

Updated On: 

05 Aug 2024 15:43 PM

ஆடிப்பெருக்கு நாள்: ஆடி மாதம் வந்தாலே எல்லா நாளும் சுபநாள் தான். அதிலும் மற்ற பண்டிகைகள் நேரம், திதி பார்த்து கொண்டாடப்படும் நிலையில் ஒரு பண்டிகை மட்டும் நாட்களின் அடிப்படையில் கொண்டாடப்படும். அதுதான் ஆடிப்பெருக்கு திருவிழாவாகும். நடப்பாண்டு ஆடிப்பெருக்கு திருவிழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாள் விவசாயிகளுக்கு மிக முக்கியமான நாள் என்றாலும், காவிரி நதிக்கரையோரம் வசிக்கும் மக்களால் நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் வைபவமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்படிப்பட்ட ஆடிப்பெருக்கு நாளில் பெண்கள் தாலிக்கயிறு, தாலிச்சரடு ஆகியவற்றை மாற்றி நீண்ட ஆயுளுடன் திருமதியாக நீடுடி வாழ வேண்டும் என வேண்டிக்கொள்வார்கள். ஆடிப்பெருக்கு நாளில் சிலரால் நீர்நிலைகளுக்கு சென்று பூஜை செய்ய இயலாது. அவர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி காணலாம்.

இதையும் படிங்க: Aadi Perukku: இந்தாண்டு ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிறு மாற்றலாமா?

வீட்டிலேயே வழிபடுவது எப்படி?

வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம். அதாவது ஒரு நிறை குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுக்க வேண்டும். அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு சேர்த்தால் வழிபாடு நடத்த தேவையான தீர்த்தம் தயாராகி விடும். அதனைக் கொண்டுபோய் வழிபாடு நடத்த வேண்டிய ஒரு அம்மன் படத்துக்கு முன்னால் வைக்க வேண்டும். அதற்கு நேரெதிராக உட்கார்ந்து உதிரிப்பூக்களால் 108 அம்மன் போற்றி சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். தொடர்ந்து கற்பூர ஆரத்தி காட்டும்போது கங்கை, யமுனை, வைகை, நர்மதை, காவிரி, தாமிரபரணி மட்டுமல்லாது உங்கள் இல்லங்கள் அருகே செல்லும் நதிகளின் பெயருடன் போற்றி என சொல்லி மனதார வழிபட வேண்டும்.

எந்த நேரம் வழிபட வேண்டும்

பின்னர் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். செம்பில் இருக்கும் தீர்த்தத்தை காலடி படாத இடம் அல்லது தாவரங்களின் வேர்களில் ஊற்றினால் வீட்டில் வளம் பெரும் என்பது ஐதீகமாக கடைபிடிக்கப்படுகிறது.வீட்டில் அதிகாலையில் நீராடும் பெண்கள் சித்ரானங்கள், கலவை சாதங்கள் ஆகியவை கொண்டும் வழிபடலாம். மேலும் இந்நாளில் அன்னதானம் உள்ளிட்டவை செய்தால் பல மடங்கு புண்ணியம் கிட்டும்.

இதையும் படிங்க: Aadi Perukku: ஆடிப்பெருக்கு எப்போது தெரியுமா? – வழிபாடு முறைகள் என்னென்ன?

நடப்பாண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடிப்பெருக்கு என்பதால் சனிக்கிழமை மாலை 4.55 மணி வரை மட்டுமே சதுர்த்தசி திதி உள்ளது. அதன்பிறகு அமாவாசை தொடங்கி விடும். அப்படி இருக்கும் நிலையில் அன்று ராகுகாலம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும், எமகண்டம் பகல் 1.30 மணி முதல் 3 மணி வரையும் உள்ளது. இந்த 2 நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் ஆடிப்பெருக்கு வழிபாட்டினை நாம் செய்யலாம். முடிந்தால் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்யலாம். இப்படியாக வழிபாடு மேற்கொண்டு இறைவன் அருளை பரிபூரணமாக பெறலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!