Aadi Perukku: இந்தாண்டு ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிறு மாற்றலாமா?
Aadi Month: தாலிக்கயிறு மாற்றும் நடைமுறையை நாம் வீட்டிலும், கோயிலிலும், ஏதேனும் நீர் நிலைகளிலும் செய்யலாம். ஆனால் இந்தாண்டு சனிக்கிழமை ஆடிப்பெருக்கு வருவதால் தாலிக்கயிறு மாற்றும் நடைமுறையை மேற்கொள்ளலாமா என பலருக்கு கேள்வி எழுந்துள்ளது அன்றைய நாளில் மாலை 4.55 மணி வரை சதுர்தசி திதி வருகிறது.
ஆடிப்பெருக்கு: ஆடி மாதம் 18 ஆம் நாள் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழா நடப்பாண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வருகிறது. சனிக்கிழமை இந்த நாள் வருவதால் பலருக்கு பலவிதமான கேள்விகள் எழுந்துள்ளது. ஆடி மாதம் பிறந்து விட்டாலே ஒவ்வொரு நாளும் சுபநாட்கள் தான் என்றாலும் பண்டிகைகளை கொண்டாட திதி, நல்ல நேரம், கிரக நிலைகள் என அனைத்தும் மிக முக்கியம். பொதுவாக ஆடிப்பெருக்கு விவசாயிகள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும் இந்த காலக்கட்டத்தில் அந்த நீர்நிலைகளை வழிபட்டு பயிர்களை பயிரிட தொடங்குவார்கள். அடுத்த 6 மாதங்கள் கணக்கிட்டால் சரியாக தை மாதத்தில் அறுவடை செய்ய சரியாக இருக்கும். இதுதான் ஆடிப்பெருக்கின் அடிப்படையான காரணமாகும்.
Also Read: Aadi Perukku: ஆடிப்பெருக்கு எப்போது தெரியுமா? – வழிபாடு முறைகள் என்னென்ன?
தாலிக்கயிறு மாற்றும் நடைமுறை
இத்தகைய ஆடிப்பெருக்கு நாளில் பெண்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அதாவது திருமணமான பெண்கள் தாலி பெருக்கி போடுவதால் நீண்ட ஆயுளோடு மஞ்சள் குங்குமத்துடன் நீடுடி வாழ்வார்கள் என்பது அர்த்தமாகும். அதேசமயம் புதிதாக திருமணமான பெண்கள் தாலிக்கயிறை மாற்றிக் கொள்ளலாம். தாலிச்செயின் போட்டிருப்பவர்கள் அதில் ஏதேனும் காசு, மணி உள்ளிட்டவற்றை சேர்ப்பதால் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம்.ஆனால் இதனை தனக்கு தானே பெண்கள் செய்யக்கூடாது. தங்களுடைய கணவர் அல்லது சுமங்கலி பெண் கையால் இந்த வைபவத்தை நடத்த வேண்டும். இந்த நாளில் கன்னிப்பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால் சிறப்பான கணவர் அமைவார்கள் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
இந்த தாலிக்கயிறு மாற்றும் நடைமுறையை நாம் வீட்டிலும், கோயிலிலும், ஏதேனும் நீர் நிலைகளிலும் செய்யலாம். ஆனால் இந்தாண்டு சனிக்கிழமை ஆடிப்பெருக்கு வருவதால் தாலிக்கயிறு மாற்றும் நடைமுறையை மேற்கொள்ளலாமா என பலருக்கு கேள்வி எழுந்துள்ளது அன்றைய நாளில் மாலை 4.55 மணி வரை சதுர்தசி திதி வருகிறது. அதன்பிறகு அமாவாஸ்யை திதி வருகிறது. ஆனால் சனிக்கிழமை தாலி மாற்றிக்கொண்டால் வீட்டில் பிரச்னைகள் வரலாம் ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: Kidney Health : இந்த அறிகுறிகள் இருந்தால் கிட்னி பிரச்னை என்று அர்த்தம்.. இதைப்படிங்க முதல்ல!
அன்றைய தினம் சகுனி கரணம் வருவதால் தாலிக்கயிறு மாற்றக்கூடாது என்றும், அதற்கு பதிலாக அமாவாஸ்யைக்குப் பின் வரும் வளர்பிறை திதியில் நல்ல நாள் ஒன்று பார்த்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் சனி பகவானுக்குரிய சனிக்கிழமை செய்யாமல் திங்கட்கிழமை, செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை மட்டுமே தாலிக்கயிறை மாற்ற வேண்டும். அதேபோல் தாலிசரடை மாற்றுபவர்கள் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்து மாற்ற வேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி விட்டு இறை வழிபாட்டில் ஈடுபட்ட பின் தாலிக்கயிறை மாற்றினால் இன்னும் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)