5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadi Pooram: ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு.. வீட்டிலேயே செய்வது எப்படி?

Aadi Masam: இறை வழிபாட்டின்போது ஸ்ரீ சக்தி ஓம் சக்தி என்ற மந்திரத்தை கட்டாயம் உச்சரிக்க வேண்டும். எத்தனை முறை சொல்கிறமோ, அந்தளவு பலன் கிடைக்கும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து அந்த குங்கும அம்மனை பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பூஜையில் வைக்கப்பட்ட பழங்களை எடுத்து ஜூஸ் போட்டு குடிக்கலாம். பூஜையில் இருந்த பழம் என்பதால் நோய்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.

Aadi Pooram: ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு.. வீட்டிலேயே செய்வது எப்படி?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 06 Aug 2024 12:17 PM

ஆடிப்பூரம்: ஆடி மாசம் வந்து விட்டாலே கொண்டாட்டம் தான். இது ஆன்மீகத்துக்குரிய மாதம் என்பதால் சைவம், வைணவம் என அனைத்து விதமான கோயில்களும் களைகட்டும். ஆடி மாதத்தில் வரும் அத்தனை நாட்களும் விஷேசமானவை. குறிப்பாக ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி,  ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், வரலட்சுமி நோன்பு என பல பண்டிகைகள் இம்மாதத்தில் வரும். இதில் ஆடிப்பூரம் நடப்பாண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் இதற்கான நட்சத்திரம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை 06.42 மணிக்கு தொடங்குகிறது.7 ஆம் தேதி இரவு 9.03 மணி வரை இந்த நட்சத்திரம் உள்ளது. ஆனால் சூரிய உதயத்தை கணக்கிட்டு பண்டிகை கொண்டாடப்படும் என்பதால் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஆடிப்பூரமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீட்டில் வழிபடுவது எப்படி என்பது பற்றி காணலாம்.

இதையும் படிங்க: Money Astrology: கிரகப்பெயர்ச்சியால் தீரும் பொருளாதார பிரச்னைகள்.. 6 ராசிக்கு யோகம்!

ஆடிப்பூரம் அன்று அம்மன் கோயில்களில் வளைகாப்பு திருவிழா கொண்டாடப்படும். அவ்வாறு கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபாட்டை மேற்கொள்ளலாம். அதன்படி அன்றைய நாளில் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். ஒரு சிறிய தட்டில் கைப்பிடி அளவுக்கு சாதாரண அல்லது தாழம்பூ குங்குமம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் பன்னீர், ஜவ்வாது ஆகியவை சேர்த்து பிள்ளையார் பிடித்துக் கொள்ளுங்கள். தட்டின் நடுவில் மூன்று எலுமிச்சை பழங்களை வைத்துக் கொள்ளவும்.

பிடித்து வைத்துள்ள குங்கும பிள்ளையாரை அம்மனின் சக்தி வடிவமாக கருதி விளக்கேற்றி தீபாரதனை காட்டி வழிபட வேண்டும். முடிந்தவரை நைவேத்தியமாக ஏதேனும் இனிப்பு படைக்கலாம். குங்கும பிள்ளையாரில் இருந்து வரும் மணம் வீட்டில் பக்தி மணத்தை எழச்செய்யும். இதனால் வீட்டில் அம்மன் வாசம் செய்வார் என்பது நம்பிக்கையாகும்.

இதையும் படிங்க: Wayanad Landslide: கிளி கொடுத்த நிலச்சரிவு எச்சரிக்கை.. தப்பித்த பல உயிர்கள்.. கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..

இறை வழிபாட்டின்போது ஸ்ரீ சக்தி ஓம் சக்தி என்ற மந்திரத்தை கட்டாயம் உச்சரிக்க வேண்டும். எத்தனை முறை சொல்கிறமோ, அந்தளவு பலன் கிடைக்கும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து அந்த குங்கும அம்மனை பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பூஜையில் வைக்கப்பட்ட பழங்களை எடுத்து ஜூஸ் போட்டு குடிக்கலாம். பூஜையில் இருந்த பழம் என்பதால் நோய்கள் விலகும் என்பது ஐதீகமாகும். இந்த குங்குமத்தை நாம் நெற்றியில் திலகமாக இடலாம். அதனை ஏதேனும் நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். வேண்டும்போது குங்கும பிள்ளையார் பிடித்தும் அம்மனை வழிபடலாம். தொழில் முன்னேற்றம், திருமணம் வரன், குழந்தை பேறு என வேண்டுதல் இருக்கும் பெண்கள் ஆடிப்பூர வழிபாட்டை கட்டாயம் மேற்கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

அதேசமயம் அருகிலுள்ள அம்மன் கோயிலில் நடைபெறும் வளைகாப்பு விழாவுக்கு செல்லும் பக்தர்கள் வளையல் வாங்கி கொடுத்து வழிபடலாம். பூஜையில் வைக்கப்பட்டு கொடுக்கும் வளையல்களை அணிந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News