Aavani Rasipalan: மேஷம் முதல் கடகம் வரை.. ஆவணி மாத ராசிபலன்கள் இதோ!

Monthly Horoscope: தமிழ் மாதங்களில் 5வது மாதமான ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, ஆவணி மூலம், ஆவணி அவிட்டம், ஆவணி ஞாயிற்றுக்கிழமை, கோகுலாஷ்டமி என பல ஆன்மிக நிகழ்வுகள் நடக்கும். அதேசமயம் ஆவணி மாதத்தில் திரிகிரஹி யோகம் என அழைக்கப்படும் மூன்று கிரகங்கள் ஒன்றுகூடும் நிகழ்வும் நடைபெறுகிறது.

Aavani Rasipalan: மேஷம் முதல் கடகம் வரை.. ஆவணி மாத ராசிபலன்கள் இதோ!

கோப்பு புகைப்படம்

Updated On: 

16 Aug 2024 15:52 PM

ஆவணி மாத ராசிபலன்: ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை ஆவணி மாதம் வருகிறது. தமிழ் மாதங்களில் 5வது மாதமான ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, ஆவணி மூலம், ஆவணி அவிட்டம், ஆவணி ஞாயிற்றுக்கிழமை, கோகுலாஷ்டமி என பல ஆன்மிக நிகழ்வுகள் நடக்கும். அதேசமயம் ஆவணி மாதத்தில் திரிகிரஹி யோகம் என அழைக்கப்படும் மூன்று கிரகங்கள் ஒன்றுகூடும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதனால் 12 ராசிகளிலும் பல மாற்றங்கள் நிகழப்போகிறது. நாம் ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ராசியிலும் என்னென்ன விஷயங்கள் நடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

மேஷம்: இந்த ராசிக்கு குரு பகவான் தனஸ்தானத்தில் பலம் பெற்று திகழ்கிறார் என்பதால் இம்மாதம் முழுவதும் உங்களுக்கு பொருளாதார பிரச்னைகள் ஏற்படாது. திருமண முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகள் வருகை தர வாய்ப்புள்ளது. முதல் வாரத்தில் செவ்வாய் அனுகூலமாக இல்லாததால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  தேவையில்லாத அலைச்சர், வெளி உணவுகள், வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஆவணி மாத கடைசியில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சிக்கனம் மிக அவசியம். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீடு, நிலம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். கடன் கொடுப்பது, வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். அரசியல் உள்ளிட்ட பிற துறைகளில் இருப்பவர்களுக்கு சிக்கல் உண்டாகும். சொல்லிலும், செயலிலும் நிதானம் தேவை. மாணவர்களுக்கு படிப்பு விஷயத்தில் நாட்டம் குறையும். விவசாயத்தில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் பெண்களுக்கு உறவினர்களால் நிம்மதி குறையும். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

Also Read: Aavani Rasipalan: சிம்மம் முதல் விருச்சிகம் வரை.. ஆவணி மாதம் எப்படி இருக்கும்?

ரிஷபம்: செவ்வாயும், குருவும் ஜென்ம ராசியில் இருந்தாலும் சுக்கிரன் சாதகமாக இல்லாமல் இருப்பதால் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். திருமண வரனுக்கான முயற்சியில் பிரச்னை ஏற்படலாம். நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் மூலம் நெருக்கடியான சமயத்தில் உதவி கிடைக்கும். உஷ்ணம் காரணமாக உடல் உபாதைகளும், சரும பிரச்னைகளும் உண்டாகலாம். பிறருடன் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து பொறுமையை கடைபிடிக்கவும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.தொழிலில் விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். லாபம் அதிகரித்தாலும் போட்டிகள் கடுமையாக இருக்கும். படிப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் நெருக்கடியான சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்: சுக்கிரனால் போதிய அளவு வருமானம் இருக்கும். திருமண முயற்சிகள் தள்ளிப்போக கூடும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். குடும்பத்தினரிடையே ஒற்றுமை குறையும். பணியிடத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. சுக்கிரன் மட்டுமே அனுகூலமாக இருப்பதால் தொழில் பெரிய அளவில் லாபம் இருக்காது. அதேசமயம் நஷ்டமும் உண்டாகாது. யாரையும் நம்பி கடன் கொடுக்க வேண்டும். பணம் கிடைக்க தாமதமாகலாம். திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். அரசியல் சார்ந்தவர்களுக்கு கட்சியில் ஆதரவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பு விஷயத்தில் ஆர்வம் குறையும். விவசாயிகளுக்கு விளைச்சல், வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நிலவும் பிரச்னைகள் குறையும். பணியிடத்தில் பெண்களுக்கு பிரச்னை முடிவுக்கு வரும்.

கடகம்: குரு, சுக்கிரன், கேது ஆகியவை ஆதரவாக இருப்பதால் தேவையான அளவுக்கு பண வரவு இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை உண்டாகலாம். கணவர், மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகலாம். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படலாம். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். தொழில் விஷயமாக வெளியூர் அல்லது வெளிமாநில பயணங்கள் மேற்கொள்வீர்கள். கலையுலகில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அளவோடு செய்யலாம். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் இருக்கும். விவசாயத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களின் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். பணியிடத்தில் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த சாம்சன்..!
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்க செய்ய வேண்டிய விஷயங்கள்..!
நீண்ட நேரம் கழிவறையில் அமர்வதால் ஏற்படும் உடல்நல கேடுகள்..!
ஹல்தி போட்டோஸை வெளியிட்ட ரம்யா பாண்டியன்