Aavani Rasipalan: சிம்மம் முதல் விருச்சிகம் வரை.. ஆவணி மாதம் எப்படி இருக்கும்?
Monthly HoroScope: சூரியன், செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்கள் தவிர பெரும்பான்மையான கிரகங்கள் ஆதரவாக இருப்பதால் இம்மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் ஏற்படலாம். சுப காரியங்களுக்கான முயற்சிகள் கைகூடும். வருமானம் திருப்திகரமாக அமையும். மனைவியின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம்.
ஆவணி மாத ராசிபலன்: தமிழ் மாதங்களில் 5வது மாதமான ஆவணி மாதம் பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிறக்கும் இம்மாதம் செப்டம்பர் 16 ஆம் தேதி தான் முடிவடைகிறது. இந்த ஒரு மாத காலத்தில் விநாயகர் சதுர்த்தி, ஆவணி மூலம், ஆவணி அவிட்டம், ஆவணி ஞாயிற்றுக்கிழமை, கோகுலாஷ்டமி, சனிப்பிரதோஷம் ஆகிய பல்வேறு விசேஷ தினங்கள் வருகிறது. அதேசமயம் இந்த ஒரு மாதக்காலக்கட்டத்தில் பல்வேறு கிரகங்களின் பெயர்ச்சியும் ஏற்படப்போகிறது. இதனால் 12 ராசிகளிலும் பல்வேறு மாற்றங்கள் உண்டாகப்போகிறது. அந்த வகையில் சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலான ராசிகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படலாம் என்பது பற்றி காணலாம்.
Also Read: Aavani Rasipalan: மேஷம் முதல் கடகம் வரை.. ஆவணி மாத ராசிபலன்கள் இதோ!
சிம்மம்: ஆவணி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு வரவைவிட செலவு அதிகமாக இருக்கும். மாதக் கடைசியில் பண பற்றாக்குறை ஏற்படலாம். சிம்ம ராசியில் புதன் சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் சந்திப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டுவதை குறைக்கவும். பிறருடைய பிரச்சனையில் விலகி இருப்பது மிகவும் நல்லது. பணியிடங்களில் மேலதிகாரிகளுடன் மோதல் உண்டாகலாம். சக ஊழியர்களின் பேச்சுக்கள் மன வருத்தத்தை உண்டாக்கும்.
அலுவலகப் பணி காரணமாக வெளியூர் செல்லும் போது உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் விஷயத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிரமமான மாதமாக இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்கள் கட்சிப் பணிகளில் தீரும் காட்டாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. படிப்பு விஷயத்தில் மாணவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். விவசாயத் துறையில் இருப்பவர்களுக்கு விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்காது. குடும்ப பெண்மணிகள் நிதி பிரச்சினையால் சிரமப்படுவார்கள். திருமணம் வர அமைவதில் தடை ஏற்படும். எனவே சிம்மராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் மனம் தளராமல் பொறுத்திருந்து செயல்பட வேண்டும்.
கன்னி: சூரியன், செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்கள் தவிர பெரும்பான்மையான கிரகங்கள் ஆதரவாக இருப்பதால் இம்மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் ஏற்படலாம். சுப காரியங்களுக்கான முயற்சிகள் கைகூடும். வருமானம் திருப்திகரமாக அமையும். மனைவியின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். வீடு மாற்றம் உண்டாகலாம். பணியிடங்களில் பதவி உயர்வு ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்க வாய்ப்புள்ளது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். தொழில் விஷயத்தில் குரு, சனி மற்றும் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசு பதவியை பெரும் வாய்ப்பு கிடைக்கும். மாணவ மாணவிகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். விவசாயத்தில் விளைச்சலும் வருமானமும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மன நிறைவை தருவதோடு உறவினர்களில் இருந்த பிரச்சனையும் தீரும்.
துலாம்: சூரியனும் சுக்கிரனும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணத்துக்கான தேவை இருக்காது. எதிர்காலத்திற்கென்று சேமித்து வைப்பது சிறந்த பயனை கொடுக்கும். கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். நகைகள் வாங்கும் யோகம் அமையும். பணியிடங்களில் பணிச்சுமை அதிகரிப்பதோடு மேலதிகாரியுடன் முரண்பாடு உண்டாகலாம். பணியிடங்களில் கவனமுடன் வார்த்தையை பயன்படுத்தவும். தொழில் விஷயத்தில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஆவணி மாதத்தில் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்கலாம். கட்சி பணிக்காக அரசியல் துறையில் இருப்பவர்கள் வெளி மாநிலம் செல்லும் நிலை ஏற்படலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் அனைவருடனும் ஒத்துப் போவது சிறந்தது. பெண்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்: இந்த ராசிக்கு குரு, சூரியன் மற்றும் கேது ஆகியவை ஆதரவாக உள்ளது. ஆனால் அர்த்தாஷ்டகத்தில் சனி இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். பிரச்னையில் சிக்கிக் கொள்வோம் என தெரிந்தால் முன்கூட்டியே விலகி விட வேண்டும். குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூடா நட்பு கேடா முடியும் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். சாலைகளில் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. திருமணம் முயற்சிகள் கைகூடும்.
பணியிடங்களில் சக ஊழியர்களுடன் பழகும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அளவுக்கு மீறி உழைப்பதால் நிதானத்தை இழப்பீர்கள். தொழில் விஷயத்தில் போட்டிகள் உருவாகும். வருமானம் சீராக இருந்தாலும் லாபத்தை தக்க வைப்பதில் கடும் போட்டி நிலவும். மருத்துவ விஷயங்களில் செலவுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்படலாம். குடும்பத்தில் பிரச்சனை இல்லாவிட்டாலும் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியத்தில் ஏற்படும் சறுக்கல் மன நிம்மதியை பாதிக்கும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)