5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஐப்பசி மாத ராசிபலன்… துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிக்கான பலன்கள்!

Aippasi Month Horoscope: தமிழ் மாதமான ஐப்பசி தொடங்க இருக்கிறது. துலாம் முதல் மீனம் வரையிலான‌ ராசிக்காரர்கள் எதைச் செய்யலாம், எதை செய்யக்கூடாது, திருமணம் முடிவுகள், பொருளாதாரம் ஆகியவை பற்றி முடிவு எடுக்க ஜாதக ரீதியிலான ராசி பலன்களை (துலாம் முதல் மீனம் வரை) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஐப்பசி மாத ராசிபலன்… துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிக்கான பலன்கள்!
மாத ராசிபலன் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Updated On: 16 Oct 2024 20:19 PM

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு பெரிய வெற்றி காத்திருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக பிரச்சனைகளை சந்தித்த இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய மாற்றம் நடக்க இருக்கிறது. எந்த தொழிலை செய்தாலும் அந்த தொழிலில் பெரிய லாபமும் ஏற்றமும் உண்டாக வாய்ப்பிருக்கிறது. உடல் நலத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். பேச்சில் நல்ல இனிமை இருக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். எல்லா போட்டியிலும் வெற்றி பெறக்கூடிய சூழல் இருக்கிறது. புதிய கடன் வாங்கக்கூடிய சூழல் ஏற்படும்.‌ வாகனங்கள் வாங்குவதற்கு ஏதுவான காலம் இது. வெளிநாடு சென்று படிக்கக்கூடிய பாக்கியம் ஏற்படும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல ஏற்றமான காலம் இந்த ஐப்பசி மாதம். பண வரவு அபரிதமாக இருக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். முயற்சியில் எல்லாம் வெற்றி அடையும். பொது காரியங்களுக்கு செலவு செய்ய வாய்ப்பு ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்படும். படிக்கக் கூடிய மாணவர்களுக்கு ஏற்றம் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி இருக்கும். வேலை சார்ந்து வெளிநாடு, வெளியூர் செல்ல வேண்டியதில் வருவது சிக்கல் ஏற்படும். வெளிநாடு போவது தடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

மகரம்:

இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகத்தை கொடுக்கக்கூடிய மாதமாக இருக்கிறது. சொந்த தொழில் செய்யும் அனைவருக்கும் பெரிய ஏற்றம் கிடைக்கும். அதீத பணம் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத் துறை, அரசியல் துறை, இரும்பு வியாபாரம், நீதிமன்றம், சட்டம் மற்றும் ஒழுங்கு துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல ஏற்றம் கிடைக்கும். உடல் சுகங்கள் சற்று குறைய வாய்ப்பிருக்கிறது.

Also Read: Sun Transit Horoscope: சூரியனின் நகர்வால் நஷ்டம்.. இந்த ராசிகள் உஷார்!

விருச்சிகம்:

போட்டி விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உடல் நலத்தில் சற்று பின்னடைவு இருக்கும். அலைச்சல் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சுகங்கள் கெடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். தாயின் உடல்நிலையில் சற்று கவனம் தேவை. குழந்தைகள் மூலமாக பிரச்சினைகள் ஏற்படும். ஊரைவிட்டு வெளியே சென்று செய்யக்கூடிய தொழிலில் பெரிய ஏற்றம் ஏற்படும். படிக்கக் கூடிய மாணவர்களுக்கு ஏற்றம் கிடைக்கும்.

சகோதரர்கள் மூலமாக ஆதாயம் ஏற்படும். திருமண வரன்கள் நன்மையை கொடுக்கும். மன கஷ்டம், மன அழுத்தம் கடுமையாக ஏற்படும். உடல் நலத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அலைச்சல் கொஞ்சம் அதிகமாக இருக்கும். பண வரத்திற்கு குறைவிருக்காது.

கும்பம்:

இந்த ராசிக்காரர்கள் உடல் நலத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். உடல் உழைப்பு, மன அழுத்தம் சற்று அதிகமாக இருக்கும். பங்கு தொழிலில் ஏற்றம் இருக்கும். வெளிநாடு சென்று படிக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் நினைத்த நிலையை அடைய முடியும். தாயின் உடல் நிலையில் சற்று பின்னடைவு இருக்கும்.

தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். பண‌‌ வரவிற்கு பஞ்சம் இருக்காது. படிக்கக் கூடிய மாணவர்களுக்கு ஏற்றம் கிடைக்கும்.

Also Read: Sabarimala: ஐயப்ப பக்தர்களுக்கு நற்செய்தி… தேவஸ்தானம் எடுத்துள்ள முக்கிய முடிவுகள்…

மீனம்:

இந்த ராசிக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. சனி பகவான் வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி அடைந்து விட்டார். தேவையற்ற செலவுகள் அதிகமாக இருக்கும். அலைச்சல் அதிகமாக இருக்கும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். முயற்சிகளில் சற்று பின்னடைவு இருக்கும். பங்குத் தொழிலிலும் சற்று பின்னடைவு ஏற்படும்.  உங்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதிய உயர்வு மேலும் தாமதப்படும். சக ஊழியர்கள் எவரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.

எதிர்ப் பாலினத்தவர் மூலமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. வேலையில் மாற்றங்கள் உண்டு. அதிக சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் சற்று பின்னடைவு ஏற்படும். எதிர்பாராத இடத்திலிருந்து திடீர் பணவரவு ஏற்படும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

Latest News