ஐப்பசி மாத ராசி பலன்… மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்கான பலன்கள்! - Tamil News | Aippasi Month rasipalan for first 6 zodiac signs full horoscope in Tamil | TV9 Tamil

ஐப்பசி மாத ராசி பலன்… மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்கான பலன்கள்!

Aippasi Month Horoscope: தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதம் முடிந்து அடுத்த மாதமான ஐப்பசி மாதம் தொடங்க இருக்கிறது. இந்த ஐப்பசி மாதம் ஜாதக ரீதியாக கொடுக்கப் போகும் ராசிபலன் என்ன என்பதை பார்க்கலாம். மேலும் எந்தெந்த ராசிக்காரர்கள் (மேஷம் முதல் கன்னி) கவனமுடன் இருக்க வேண்டும், அந்தந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் லாபமும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஐப்பசி மாத ராசி பலன்... மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்கான பலன்கள்!

மாத ராசிபலன் (Photo Credit: Pinterest)

Updated On: 

16 Oct 2024 20:19 PM

மேஷம்: ஐப்பசி மாசத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு பெரிய வெற்றி உண்டு. எதிர் பாலினத்தவர் மூலமாக நல்ல ஒரு ஏற்றம் கிடைக்கும். தொழிலில் பெரிய முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. பண வரவிற்கு பஞ்சம் இருக்காது. நண்பர்கள் மூலமாக ஆதாயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தாய் தந்தை உறவுகள் மேம்படும். சனி வக்ர‌ம்‌ நிவர்த்தியாகி விடும். எனவே தொழிலில் லாபங்களுக்கு பஞ்சம் இருக்காது. புதிய வேலை அமையக்கூடிய பாக்கியம் நிச்சயமாக உண்டு.

வேலையில் மாற்றங்கள் உண்டு. வேலையில் ஏற்றங்கள் உண்டு. அதிக வருமானம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். ஏழாம் அதிபதி எட்டாம் இடத்தில் இருப்பதால் திடீர் பணவரவு வருவதற்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்:

இந்த ராசியை பொறுத்தவரை இவர்களுக்கு ஏற்றமான காலமாக இருக்கிறது. பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்புகள் நிச்சயமாக இல்லை. திருமணங்கள் பேசி முடிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வரும். முயற்சிகள் நிச்சயமாக வெற்றியாகும். தாயின் உடல்நிலையில் நல்ல ஒரு ஏற்றம் இருக்கும். புதியதாக கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

புது வீடு, மனை வாங்க கூடிய பாக்கியம் உண்டு. செய்யக்கூடிய தொழிலில் ஏற்றம் உண்டு. பணியில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு கீழ் பணிபுரிபவர்களோடு பிரச்சனை ஏற்படும். வெளிநாடு, வெளியூர் போகக்கூடிய பாக்கியம் ஏற்படும். படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏற்றம் கிடைக்கும். பண வரவிற்கு பஞ்சம் இருக்காது. ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் நல்ல ஒரு ஏற்றமாக இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசியை பொறுத்த வரையில் பண வரவிற்கு பஞ்சம் இருக்காது. உடல் நிலையில் நல்ல ஒரு ஏற்றம் இருக்கும். முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும். குழந்தை பாக்கியம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. புதிய வேலை கிடைக்கும். வேலையில் மாற்றங்கள் உண்டு. வேலையில் ஏற்றம் இருக்கக்கூடிய காலகட்டம். பண வரவிற்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்திக்கான செலவுகள் அதிகமாக இருக்கும்.

தாயின் உடல் நிலையில் நல்ல ஒரு தீர்க்கம் இருக்கும். தந்தையின் உடல்நிலை  நல்லபடியாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வெளியூர், வெளிமாநிலங்கள் சம்பந்தமாக நிறைய வருமானங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. போட்டிகளிலும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புண்டு. வெளி மாநில பயணங்கள் மேற்கொள்ளும் பாக்கியம் உண்டாகும். இவ்வளவு நாள் தூக்கத்தில் பிரச்சனை இருந்த இந்த ராசிக்காரர்கள் இனி நன்றாக உறங்கலாம். சுப விஷயங்கள் நடக்கும்.

Also Read: Sabarimala: ஐயப்ப பக்தர்களுக்கு நற்செய்தி… தேவஸ்தானம் எடுத்துள்ள முக்கிய முடிவுகள்…

கடகம்:

வேளாண்மை தொழிலில் இருக்கக்கூடிய இந்த ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் உண்டாகும். மேலும் எளிதில் வீணாக கூடிய உணவு பொருள்களான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அதிக ஏற்றம் உண்டாகும். உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. படிக்கக் கூடிய மாணவர்களுக்கு நல்ல ஏற்றம் இருக்கும்.

குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. திருமண வாய்ப்பு நன்றாக இருக்கிறது. யாருடனும் போட்டி போடாமல் பொறுமையாக இருக்க வேண்டிய காலம். தேவையற்ற பழக்க வழக்கங்களுக்குள் செல்லாமல் பொறுமையாக இருக்க வேண்டும். வாகனங்களை பயன்படுத்தி வேலை செய்பவர்கள், உணவு டெலிவர் செய்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

சிம்மம்:

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்படும். உடல்நலத்தில் பிரச்சனைகள் ஏற்படும். தந்தையின் உடல் நலத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்படும். தாயின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்படும். தொழிலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

பண வரவிற்கு பஞ்சம் இருக்காது. வெளிநாடு சென்று படிக்க நினைப்பவர்களுக்கு சில இடர்பாடுகள் ஏற்படும். அரசு அதிகாரிகள், அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், அரசு ஒப்பந்தங்களை எடுத்திருப்பவர்கள், அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படும்.

Also Read: Money Horoscopes: அபூர்வ யோகம்… இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

கன்னி:

இந்த ராசிக்காரர்கள் உடல்நலத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பழக்க வழக்கங்களை விட்டு விலகுவது நல்லது.‌ பண வரவிற்கு பஞ்சம் இருக்காது. மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எல்லா விஷயத்திலும் சிறு சிறு தடங்கல்கள் ஏற்பட்டு பிறகு வெற்றி கிடைக்கும்.

வெளிநாடு செல்லக்கூடிய பாக்கியம் ஏற்படும். வீட்டை விட்டு பிரிந்து செல்லக்கூடிய நிலை ஏற்படும். வேலைக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பேச்சில் அனைவரையும் கவர வாய்ப்பிருக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் நல்ல ஏற்றமான மாதமாக இருக்கிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?