அட்சய திருதியை 2024! தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்.. தெரிஞ்சுக்கோங்க! - Tamil News | | TV9 Tamil

அட்சய திருதியை 2024! தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்.. தெரிஞ்சுக்கோங்க!

Updated On: 

13 May 2024 16:38 PM

Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை நாளில் எந்த நேரத்தில் தங்க நகைகளை வாங்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 / 6சித்திரை

சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியை நாம் அட்சயதிருதியை என கொண்டாடுகிறோம். அள்ள அள்ள குறையாத தினமே அட்சயம் எனப்படுகிறது. எனவே அந்நாளில் நகை, ஆபரணம் சேர்க்க வேண்டுமென்பது ஐதீகம்.

2 / 6

அட்சய திருதியை அன்று தங்கம் அல்லது வெள்ளி வாங்கும் வழக்கம் உள்ளது. ஆனால் எந்த நேரத்தில் வாங்குகிறோம் என்பதை பார்க்க வேண்டும். முகூர்த்த நேரத்தில் நகைகளை வாங்கினால் நல்லது என்று சொல்லப்படுகிறது. நகைகள் மட்டுமல்லாமல், பாத்திரங்கள், ஆடைகள், வீடு போன்றவையும் உகர்ந்த நேரம் பார்த்து வாங்கலாம்.

3 / 6

அதன்படி, 2024ம் ஆண்டுக்கான அட்சயதிருதியை மே 10ஆம் தேதி (நாளை) அதிகாலை 4.17 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.50 மணி வரை தொடர்கிறது. அட்சய திருதியை நாளில் சுப முகூர்த்தம் காலை 5.33 மணி முதல் காலை 7.14 மணி இருக்கிறது.

4 / 6

மேலும், அமிர்த முகூர்த்தம் காலை 8.56 மணி முதல் காலை 10.37 மணி வரையும், மதியம் 12.18 மணி முதல் 1.59 மணி வரையும் உள்ளன. அதேபோல, மாலை 5.21 மணி முதல் இரவு 7.02 மணி வரை சிறிய முகூர்த்தங்கள் உள்ளன.

5 / 6

எனவே, மேற்கண்ட நேரங்களில் தங்கத்தை வாங்குவது நல்லது என்றும், இதன் மூலம் புதிய தொடக்கம் உருவாகும் என்றும் கருதப்படுகிறது.

6 / 6

தங்கம், வெள்ளி என மிகவும் விலை உயர்வாக இருக்கிறது என்றால், காப்பர், பித்தளை ஆகியவற்றை கூட வாங்கலாம். அட்சய திருதியை அன்று இதுபோன்ற பொருட்களை வாங்கி பூஜையறையில் வைத்து வழிபடலாம். இதன் மூலம் லட்சுமி தேவியின் பூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!