5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Pawan Kalyan: விஜய் அரசியல்.. திருப்பதி பிரச்னை.. ஓபனாக பேசிய பவன் கல்யாண்!

லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு நான் கோபப்பட்டதை பலரும் விமர்சித்தார்கள்.  அதனைப்பற்றி பேசிய பவன் கல்யாண்,  “நான் ஏழுமலையானின் சாதாரண பக்தன். ஆனால் மக்கள் என் சனாதான கொள்கையை அவமதிக்கும் போது எனக்கு கோபம் வருகிறது. எனது தர்மத்தை நான் காப்பாற்றவில்லை என்றால் வேறு யாரால் காப்பாற்ற முடியும். எதிர்க்கட்சியினர் கூறுவது போல் ஏழுமலையான் கோவில் விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்தார்.

Pawan Kalyan: விஜய் அரசியல்.. திருப்பதி பிரச்னை.. ஓபனாக பேசிய பவன் கல்யாண்!
பவன் கல்யாண் (கோப்பு புகைப்படம்)
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 02 Oct 2024 13:58 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தந்தி டிவிக்கு பேட்டியளித்துள்ள அவர், “பக்தர்களுக்கு நிச்சயம் திருப்தி அளிக்கும் வகையில் ஏழுமலையான் தரிசனத்தை ஆந்திர அரசு ஊக்குவிக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டுவில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவைகளில் ஏதேனும் ஒன்று கலந்திருக்கலாம் என ஆந்திர அரசின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் பரிகாரம் செய்யும் விதமாக 11 நாட்கள் விரதம் இருந்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இன்று திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக நடைபாதை வழியாக அவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

முன்னதாக பவன் கல்யாண் அளித்த பேட்டியில், லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு நான் கோபப்பட்டதை பலரும் விமர்சித்தார்கள்.  அதனைப்பற்றி பேசிய பவன் கல்யாண்,  “நான் ஏழுமலையானின் சாதாரண பக்தன். ஆனால் மக்கள் என் சனாதான கொள்கையை அவமதிக்கும் போது எனக்கு கோபம் வருகிறது. எனது தர்மத்தை நான் காப்பாற்றவில்லை என்றால் வேறு யாரால் காப்பாற்ற முடியும். எதிர்க்கட்சியினர் கூறுவது போல் ஏழுமலையான் கோவில் விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்தார்.மேலும் ஆந்திரா அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தனிப்பட்ட பழிவாங்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், திருப்பதி கோயில் புனிதத்தை காப்பதற்காகவே அவரை கேள்வி கேட்பதாகவும் தெரிவித்தார்.

Also Read: Chennai Metro Trains: சென்னையில் வெளியே போறீங்களா? – போக்குவரத்து சேவையில் மாற்றம்!

வணிக மயமான கோயில்கள்

இந்து மத கோயில்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டை மீண்டும் தெரிவித்த பவன் கல்யாண், “அனைத்து கோயில்களும் வணிகமயம் ஆகிவிட்டதாகவும், அதில் அரசியலும் நுழைந்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளார். மேலும், “இந்து கோயில் நிர்வாகம் தொடர்பாக வெளிப்படையான விவாதம் நடத்தப்பட்டு கோவிலை யார் நிர்வகிப்பது என்பது குறித்த ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்” எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தின் அரசியல்

இதனை தொடர்ந்து தமிழக அரசியல் களம் பற்றி பேசிய பவன் கல்யாண் விஜய்க்கு மறைமுகமாக அட்வைஸ் செய்தார். அதாவது, “எல்லாரும் அரசியலில் எம்ஜிஆர் ஃபார்முலாவை பின்பற்றுகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை. ஆரம்பத்தில் திராவிடர் கழகத்திலிருந்து திமுகவில் பயணித்து பின்பு கட்சி தொடங்கி வெற்றி பெற்றார். எம்ஜிஆர் மற்றும் அவரது கொள்கைகளை பின்பற்றுவது எளிதான காரியம் அல்ல. எம்ஜிஆரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது” என  தெரிவித்துள்ளார்.

அதேசமயம், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தென்னிந்தியாவிற்கு எதிரானது அல்ல. ஒருபோதும் அப்படி இருந்ததும் இல்லை. ஆந்திராவை விட தமிழகத்திற்கு தான் தேசிய ஜனநாயக கூட்டணி நிறைய செய்துள்ளது. சொல்லப்போனால் ஆந்திராவில் சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் கூட அளிக்கவில்லை. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதியும் உடனடியாக வரவில்லை என அவர் கூறினார்.

Also Read: Crime: மகனை கொன்ற தந்தை.. மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. தமிழ்நாட்டை அதிர வைத்த சம்பவங்கள்!

பிரதமர் மோடி ஆட்சி 

அதேசமயம் பிரதமர் மோடி பற்றி பேசிய பவன் கல்யாண், “இந்தியாவில் நரேந்திர மோடி ஆட்சி போல் எந்த பிரதமரும் ஆட்சி செய்ததில்லை என பாராட்டினார். மேலும் தென்னிந்தியர்களின் வலியை முழுமையாக புரிந்து கொண்டவர் மோடி என்றும், செங்கோல் உட்பட அனைத்து விஷயங்களிலும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் அவர் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அமெரிக்காவில் ராகுல் காந்தி பற்றி கருத்துகளை குறிப்பிட்டு பேசிய பவன் கல்யாண்,  “ஜனநாயகத்தில் நிறைய தலைவர்கள் உருவாக வேண்டும் என்பது எனது கருத்தாகும்.  அந்த வகையில் ராகுல் காந்தியின் தோற்றம் ஆரம்பத்தில் நன்றாக தான் இருந்தது. ஆனால் வெளிநாடு சென்று தன்னுடைய சொந்த நாட்டை பற்றி தவறாக பேசக்கூடாது. எந்த இடத்திலும் தன் நாட்டை பற்றி பெருமையாக பேச வேண்டும். அதுதான் நல்ல தலைவனுக்கு அழகு.  அந்த வகையில் ராகுல் காந்தி அந்த தகுதியை இழந்தார் என தெரிவித்தார்.  அப்போது தமிழகத்தின் புதிய துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை பவன் கல்யாண் தெரிவித்துக் கொண்டார்.

Latest News