5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Astrology: தங்க நகைகளை காலில் அணியலாமா? – சாஸ்திரம் சொல்வது என்ன?

Gold Jewels: பெண்கள் கம்மல், செயின், ஒட்டியானம், கொலுசு, மெட்டி என பல வகை ஆபரணங்களை அணிகிறார்கள். இவற்றில் இடுப்புக்கு கீழே அணியும் ஆபரணங்களை தங்கத்தில் அணியக்கூடாது என சாஸ்திரம் சொல்கிறது. அதாவது தங்கத்தில் லட்சுமி தேவியின் அருள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.அப்படியிருக்கையில் இடுப்பில் அணியும் அரைஞாண் கயிறு, காலில் அணியும் கொலுசு, மெட்டி ஆகியவற்றை வெள்ளியில் அணிய முன்னோர்கள் பழக்கினார்கள்.

Astrology: தங்க நகைகளை காலில் அணியலாமா? – சாஸ்திரம் சொல்வது என்ன?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 12 Aug 2024 16:50 PM

தங்க நகைகள்: தங்க ஆபரணங்களை விரும்பாதவர்கள் இந்த உலகிலேயே கிடையாது. அப்படியிருக்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் தங்கத்தின் மீதான ஆசையும் அதிகரித்து வருகிறது. இதில் பெண்கள் கம்மல், செயின், ஒட்டியானம், கொலுசு, மெட்டி என பல வகை ஆபரணங்களை அணிகிறார்கள். இவற்றில் இடுப்புக்கு கீழே அணியும் ஆபரணங்களை தங்கத்தில் அணியக்கூடாது என சாஸ்திரம் சொல்கிறது. அதாவது தங்கத்தில் லட்சுமி தேவியின் அருள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.அப்படியிருக்கையில் இடுப்பில் அணியும் அரைஞாண் கயிறு, காலில் அணியும் கொலுசு, மெட்டி ஆகியவற்றை வெள்ளியில் அணிய முன்னோர்கள் பழக்கினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை மக்களிடம் காலில் தங்க கொலுசு அணியும் பழக்கம் இருக்கிறது. ஆனால் என்னதான் பொருளாதார அளவில் வசதியுள்ளவர்களாக இருந்தாலும் காலில் தங்கத்தில் கொலுசு அணியக்கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Thoranamalai: மன அமைதி தரும் தோரணமலை முருகன் கோயில்.. என்னென்ன சிறப்பு தெரியுமா?

ஜோதிடத்தில் நம்முடைய உடலின் ஒவ்வொரு பாகமும் நவக்கிரகங்களை குறிப்பதாக இருக்கும். அப்படி பார்க்கும்போது கால் என்பது சனி பகவானின் இருப்பிடமாக பார்க்கப்படுகிறது. தங்கம் குரு பகவானின் அம்சமாகவும் இருக்கிறது. அதனால் தான் தங்க நகைகள் குரு ஓரையில் வாங்கினால் தொடர்ச்சியாக தங்கம் வாங்கும் வாய்ப்பு அமையும். மேலும் காலில் தங்க ஆபரணங்களை அணிவது மகாலட்சுமியை அவமதிக்கும் செயலாகும் என சொல்லப்படுகிறது. தங்கத்தை காலில் அணிவதால் நேர்மறை எண்ணங்கள் தோன்றாமல் எதிர்மறை எண்ணங்கள் தோன்றி வாழ்க்கையில் பிரச்னை மேல் பிரச்னை ஏற்படும்.

தங்க நகை அணியும்போது நம் மனதில் தெளிவான எண்ணங்கள் தோன்றும். இயற்கையாகவே தங்கத்துக்கு உறுதித்தன்மை அதிகம் என்பதால் அது நம் மனதுடன் ஒட்டிக்கொள்ளும். இதனால் மனதின் பலமானது அதிகரிக்கும். நீங்கள் முதல்முறை தங்கம் வாங்கும்போது தான் கஷ்டப்படும் தேவை இருக்கும்.ஒருமுறை அது உங்கள் கைகளுக்கு வரும்போது தொடர்ச்சியாக நகைகள் வாங்குவதற்கான சூழல் உண்டாகும். தங்கத்தை காலில் அணிவதால் வீட்டில் உள்ள செல்வ வளம் குறையும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Trigrahi Yogam: சிம்ம ராசியில் இணையும் 3 கிரகங்கள்..எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்?

மேலும் சனியும், குருவும் ஒன்றுசேராத பகை கிரகங்களாகும். அப்படியிருக்கும் சனியின் அம்சமான காலில் குருவின் அம்சமான தங்கத்தை அணியக்கூடாது. ஆனால் வெள்ளியை அணியலாம். காரணம் வெள்ளி சுக்கிரனுக்குரியது. சனி மற்றும் குருவுடன் சுக்கிரன் நட்பு பாராட்டும் என்பதால் வெள்ளி அணிய சொல்கிறார்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News