கடவுளுக்கு பிரசாதம் தயாரிக்கும்போது இந்த தவறை செய்யாதீங்க!
Aadi Masam: பால், பழம் தொடங்கி சர்க்கரைப் பொங்கல், உணவுகள் என பலவிதமான உணவுகளும் பூஜைகளில் நைவேத்தியமாக வைக்கப்படுகிறது. அப்படி வைத்தால் தான் பூஜை வழிபாடு முழுவதுமாக முடிவடையும் என நம்பப்படுகிறது. ஆனால் இத்தகைய பிரசாதங்களை தயாரிப்பது தொடங்கி வழிபடுவது, பிறகு எடுத்து சாப்பிடுவது வரை பல்வேறு விதிமுறைகள் உள்ளது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
வழிபாட்டு பிரசாதம்: இறைவனுக்கு நம்மால் முடிந்த உணவுப் பொருட்களை வைத்து எப்போதும் பூஜை செய்வது அனைவருடைய வழக்கமாக இருந்து வருகிறது. பால், பழம் தொடங்கி சர்க்கரைப் பொங்கல், உணவுகள் என பலவிதமான உணவுகளும் பூஜைகளில் நைவேத்தியமாக வைக்கப்படுகிறது. அப்படி வைத்தால் தான் பூஜை வழிபாடு முழுவதுமாக முடிவடையும் என நம்பப்படுகிறது. ஆனால் இத்தகைய பிரசாதங்களை தயாரிப்பது தொடங்கி வழிபடுவது, பிறகு எடுத்து சாப்பிடுவது வரை பல்வேறு விதிமுறைகள் உள்ளது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனை சரியாக பின்பற்றாதபோது கடவுளின் அருள் கிடைக்காமல் போவதோடு, எதிர்மறையான விஷயங்களும் நடக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. அப்படியாக கடவுள் பிரசாதம் தயாரிப்பதில் இருக்கும் பல்வேறு விதிமுறைகளைப் பற்றி காணலாம்.
Also Read: Varalakshmi Viratham: வரலட்சுமி நோன்பு அன்று வீட்டில் வழிபடுவது எப்படி?
என்னென்ன விதிமுறைகள்?
இறைவனுக்காக செய்யப்படும் உணவுகளை எப்போதும் வெள்ளி, மண், பித்தளை அல்லது தங்கப் பாத்திரங்களில் மட்டுமே சமைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அலுமினியம், இரும்பு, எஃகு போன்ற பாத்திரங்களில் கடவுளுக்கு உணவுப் படைக்க பயன்படுத்தக் கூடாது.
இறைவனுக்கு படைக்கப்பட்டும் எத்தகைய நைவேத்தியங்களை நீங்களே வீட்டில் தயார் செய்யலாம். ஆனால் அதில் பூண்டு மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகளை கட்டாயம் சேர்க்கக்கூடாது. அதேபோல் காலிஃபிளவர், ப்ரக்கோலி உள்ளிட்டவற்றில் செய்யப்பட்ட உணவுகளையும் படைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நைவேத்தியம் செய்ய தயார் செய்யப்பட்ட உணவுகளை தனியாக இலை அல்லது பாத்திரங்களில் மட்டுமே படைத்து வழிபட வேண்டும். இதனை வெறும் தரையில் வைக்காமல் மேசை அல்லது நாற்காலியில் வைக்க வேண்டும். மேலும் ஒருபோதும் வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் பாத்திரத்தில் உணவு சமைக்கவோ, படைக்கவோ கூடாது. S
Also Read: Shocking News : 10 ரூபாய் குளிர்பானத்தை குடித்த 5 வயது சிறுமி பரிதாப பலி.. நடந்தது என்ன?
பலரும் பிரசாதத்தை தெய்வங்களுக்கு படைத்தும் வழிபாடு செய்த பிறகு அப்படியே வைக்கும் பழக்கம் உள்ளது. அப்படி செய்யாமல் பூஜை முடிந்ததும், அனைவருக்கும் பிரசாதம் விநியோகிம் செய்ய வேண்டும். பூஜை வழிபாட்டில் படைக்கப்பட்ட பிரசாதத்தை நீண்ட நேரம் வைத்திருப்பது வீட்டில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பூஜை முடிந்து சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை அதனை வைத்திருந்தால் போதும்.
அதேபோல் லட்சுமி தேவிக்கு பாலில் செய்யப்பட்ட வெள்ளை இனிப்புகளை வழங்குவது சாஸ்திரங்களின்படி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அன்னைக்கு வெள்ளை நிற இனிப்புகளை வழங்குவதன் மூலம், செல்வத்தின் தேவி மகிழ்ச்சியடைந்து செல்வத்தைப் பொழிவார் என்பது நம்பிக்கையாகும்.
நைவேத்தியமாக படைக்கும் உணவுகளை ஒருபோதும் ருசிபார்க்கக்கூடாது. அதன் பொருட்களையும் சமைக்கும்போது எடுத்து சாப்பிடக்கூடாது. உண்மையான அன்பு, பக்தி, சமைப்பதில் எந்தவித கலப்படமும் இல்லாமல் சுத்தமாக உணவுப் பொருட்களை வைக்க வழிபட வேண்டும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)