Dream Theory: உங்கள் கனவில் தேள் கொட்டினால் என்ன அர்த்தம் தெரியுமா?

Astrology: பெரும்பாலானோருக்கு இரவில் கனவு  வரும் நிலையில் அதில் மனிதர்கள், விலங்குகள்,  எதிர்பாராத சம்பவம் என பல நிகழ்வுகளும்  நடைபெறும். சுபமான கனவுகள் வந்தால் காலையில் எழுந்ததும் கிடைக்கும் மகிழ்ச்சி அன்றைய தினம் முழுவதும் இருக்கும். மாறாக அசுபமாக கனவு வந்தால் அவ்வளவு தான். ஏன் அப்படி வந்தது என யோசித்து யோசித்து தலையே வெடித்துவிடும் அளவுக்கு யோசிப்பார்கள்.

Dream Theory: உங்கள் கனவில் தேள் கொட்டினால் என்ன அர்த்தம் தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Published: 

02 Sep 2024 13:00 PM

கனவுப்பலன்: ஜோதிட பலன்கள், வாஸ்து சாஸ்திரங்கள் போன்றவஒ நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பலன்கள் சாஸ்திரத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இதில் கனவு சம்பந்தப்பட்ட பலன்களும் அடக்கம். கனவு என்பது பொதுவாக பலருக்கும் தூக்கத்தின் போது தான் வரும். சிலர் முழுத்திருக்கும்போதே கனவு காண்பார்கள். இதனைப் பகல் கனவு என்போம். ஆனால் பெரும்பாலானோருக்கு இரவில் கனவு  வரும் நிலையில் அதில் மனிதர்கள், விலங்குகள்,  எதிர்பாராத சம்பவம் என பல நிகழ்வுகளும்  நடைபெறும். சுபமான கனவுகள் வந்தால் காலையில் எழுந்ததும் கிடைக்கும் மகிழ்ச்சி அன்றைய தினம் முழுவதும் இருக்கும். மாறாக அசுபமாக கனவு வந்தால் அவ்வளவு தான். ஏன் அப்படி வந்தது என யோசித்து யோசித்து தலையே வெடித்துவிடும் அளவுக்கு யோசிப்பார்கள்.

Also Read: Aadhaar Card : ஆதார் கார்டில் முகவரியை மாற்ற இந்த 45 ஆவணங்களை பயன்படுத்தலாம்.. எவையெல்லாம் தெரியுமா?

இத்தகைய கனவுகள் இயற்கையானது என்றும், அவை நம் வாழ்வோடு உணர்வு ரீதியாக இணைந்தவை என்றும் கனவுப்பலன் தொடர்பான சாஸ்திரம்  சொல்கிறது. அதன்படி உங்கள் கனவில் நீங்கள் பார்க்கும் விஷயங்களைப் பற்றிய பல அர்த்தங்களை இது வெளிப்படுத்துகிறது. உதாரணமாக நீங்கள் எதைப் பற்றி அல்லது யாரைப் பற்றி அதிகம் சிந்திக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகளை உங்கள் தூக்கத்தில் காண்பீர்கள் என எடுத்துக் கொள்ளலாம். இந்த வரிசையில் கனவில் தேள் தோன்றினால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி காணலாம்.

Also Read:New Rules : கேஸ் சிலிண்டர் விலை முதல் ஆதார் கார்டு வரை.. அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள்!

தேள் மிகவும் விஷத்தன்மை கொண்ட உயிரினம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  பல வகைகள் இதில் உள்ள நிலையில் இது ஜோதிட சாஸ்திரத்தில் விருச்சிக ராசியின் அடையாளமாக உள்ளது.  சாஸ்திரப்படி  ஒருவரது கனவில் தேள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று அர்த்தம் என சொல்லப்படுகிறது.  ஆனால் அந்த பிரச்னை தலைக்கு மேல் கத்தியாக தொங்கினாலும் அதிலிருந்து தப்பித்து வெற்றி பெறுவீர்கள். மேலும் ஒருவருக்கு தேள் கொட்டியது போலவும், அழுது தவிப்பது போலவும் கனவு கண்டால், அவர்கள்  எதிர்பாராத சவால்களை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது எதிர்காலத்தில் சிரமங்களை எதிர்கொள்வீர்கள் என்றும்,  வாழ்க்கை உங்களுக்கு கடினமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இவர்கள் நிதி இழப்புகளை அதிகம் சந்திப்பார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?