Saturn Retrograde: பிற்போக்கு நிலையில் சனி.. கவனமுடன் செயல்பட வேண்டிய 3 ராசிகள்!

ராசி சுழற்சியின் அடிப்படையில் கிரகங்களின் மாற்றம் ஒரு நபரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்துக் கொள்வது மிக முக்கியம். நாம் வாழ்க்கையில் கிரகங்களின் பெயர்ச்சி தான் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது.  அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தில் சனி என்றும் அழைக்கப்படும் சனி கிரகம் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Saturn Retrograde: பிற்போக்கு நிலையில் சனி.. கவனமுடன் செயல்பட வேண்டிய 3 ராசிகள்!

கோப்பு புகைப்படம்

Published: 

18 Oct 2024 20:00 PM

சனிப்பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரங்களில் கிரகப்பலன்கள் என்பது மிக முக்கியமானவை. ராசி சுழற்சியின் அடிப்படையில் கிரகங்களின் மாற்றம் ஒரு நபரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்துக் கொள்வது மிக முக்கியம். நாம் வாழ்க்கையில் கிரகங்களின் பெயர்ச்சி தான் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது.  அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தில் சனி என்றும் அழைக்கப்படும் சனி கிரகம் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான கிரகங்களில் ஒன்றாக சனி கருதப்படுகிறது. சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகம் என்று கூறப்படுகிறது.

Also Read: Surasamharam 2024: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் தேதி… முழு விவரங்கள்!

காரணம் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் சனிக்கிரகம் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம்பெயரும். ஒரு ராசியில் இருந்து சனி இடம்பெயர்ந்த பிறகு மீண்டும் அந்த ராசிக்கு திரும்ப சுமார் 30 வருடங்கள் ஆகும். நம்முடைய வாழ்க்கையில் கர்ம பலன்களைத் தருபவர் சனி. சனி ஜூன் மாதத்தில் இருந்து பிற்போக்கு நிலையில் உள்ளது. சில நேரங்களில் நேரடியாகவும், சில நேரங்களில் பிற்போக்காகவும் சனியின் பயணம் இருக்கும். இப்படியான சனிக்கிரகம் நவம்பர் மாதத்தில் நேரடியாகப் பயணிக்க உள்ளது.

அதாவது சனி தனது ராசியான கும்பத்தில் இருந்து பிற்போக்கு திசையில் நகரத் தொடங்குகிறது. சனி நேரடியாக சஞ்சரிப்பதால் பல ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார்கள் ஜோதிடர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் மட்டுமின்றி, சில ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Also Read: Aippasi Month: ஐப்பசியில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாதா? – சாஸ்திரம் சொல்வது என்ன?

எந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும்?

மேஷம்: சனியின் நேரடி சஞ்சாரம் மேஷ ராசிக்கு இருப்பது நல்ல நிகழ்வுகளை உண்டாக்கும்.  குறிப்பாக மேஷ ராசியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பெரும் வெற்றியை அடைவார்கள் என கருதப்படுகிறது. மேலும் தொழிலிலும் அமோகமான வளர்ச்சி இருக்கும். அதேசமயம் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் காணப்படும்.

கன்னி: இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு நவம்பர் 15க்கு பிறகு வரும் காலம் அற்புதமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். அதேசமயம் கடும் மன உளைச்சலில் இருந்தும் விடுபடுவார்கள். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடையே  மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியினர் மற்றும் அனைத்து உறவுகளுக்குமிடையேயான பரஸ்பர கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடிப் பெயர்ச்சி நல்ல சகுனத்தைத் தரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மகர ராசிக்காரர்களுக்கு நிதி மற்றும் முதலீட்டு பலன்கள் அதிகமாக கிடைக்கும். வேலைக்காக காத்திருப்பவர்களும் நல்ல செய்தி வந்து சேரும். ஆனால் பொருளாதார முன்னேற்றம் வளர்ச்சி அடைய இன்னும் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டும் என்பதால் பொறுத்து நடக்க வேண்டும்.

Also Read: Google Pixel 9 Pro : இன்று தொடங்கியது பிக்சல் 9 ப்ரோ ப்ரீ ஆர்டர் சேல்.. சிறப்பு சலுகைகள் என்ன என்ன?

யாருக்கு பிரச்சனைகள் வரும்?

கும்ப ராசியில் சனி சஞ்சரிக்கும் போது ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளால் சொத்து மற்றும் மாமியார் வகையிலான உறவுகளில் பிரச்னைகள் வரக்கூடும். மேலும் வாழ்க்கையில் நடைபெறவிருக்கும் பல நிகழ்வுகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.  சிலர் மிகவும் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மனநலம் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம் என்பதால் எச்சரிக்கையுடன் நடப்பது சாலச் சிறந்தது.

இந்த காலக்கட்டத்தில் சனிக்கிழமையில் ராகு காலத்தில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடலாம். அதேபோல் நவக்கிரங்களை வழிபடுதல், காகத்திற்கு உணவளித்தல், தான தர்மம் செய்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடலாம். மேலும் சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடக்கூடாது. அதேநேரம் நல்லெண்ணெய் குளியலும் இந்நாளில் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!