Naga Panchami: நாக பஞ்சமி எப்போது? – 5 ராசிக்கு அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம்! - Tamil News | Astrology these 5 zodiac signs will get more benefits on Naga Panchami Day | TV9 Tamil

Naga Panchami: நாக பஞ்சமி எப்போது? – 5 ராசிக்கு அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம்!

Published: 

07 Aug 2024 10:44 AM

Aadi Masam: இந்த நாகபஞ்சமி அன்று சித்தியோகமும், ரவியோகமும் சேர்ந்து வருவது கூடுதல் விஷேசமாக பார்க்கப்படுகிறது. நாக பஞ்சமி திதியானது வெள்ளிக்கிழமை அதிகாலை 12.36 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 3.14 மணிக்கு முடிவடைகிறது. ஆனால் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அதிகாலை 5.47 மணி முதல் காலை 8.27 மணி வரை தான் வழிபட உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது.

Naga Panchami: நாக பஞ்சமி எப்போது? - 5 ராசிக்கு அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம்!

கோப்பு புகைப்படம்

Follow Us On

நாக பஞ்சமி: ஆடி மாதம் வரும் என்றாலே ஆன்மீக மாதம் என்று பொருள். இந்த மாதங்களில் வீட்டு விசேஷங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு முழுக்க முழுக்க ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என முன்னோர்கள் கணித்துள்ளனர். அப்படியாக ஆடி மாதம் வரும் பண்டிகைகளில் மிக முக்கியமானது நாக பஞ்சமி. கடவுளின் வாகனமாக கருதப்படும் பாம்புகளுக்கு என இப்பண்டிகை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.இது ஆடி மாத வளர்பிறையின் 5வது நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி நாக பஞ்சமி வருகிறது. அன்றைய நாளில் நாம் நாக தேவதைகளை வழிபட்டால் கைமேல் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Also Read: Whatsapp : இனி இந்த மாடல் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.. முக்கிய அறிவிப்பு!

அதுமட்டுமல்லாமல் இந்த நாகபஞ்சமி அன்று சித்தியோகமும், ரவியோகமும் சேர்ந்து வருவது கூடுதல் விஷேசமாக பார்க்கப்படுகிறது. நாக பஞ்சமி திதியானது வெள்ளிக்கிழமை அதிகாலை 12.36 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 3.14 மணிக்கு முடிவடைகிறது. ஆனால் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அதிகாலை 5.47 மணி முதல் காலை 8.27 மணி வரை தான் வழிபட உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இந்த பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

Also Read: Aadi Pooram: ஆடிப்பூரம் திருவிழாவுக்கு பேமஸான கோயில்கள் என்னென்ன தெரியுமா?

இன்றைய நாளில் அருகிலுள்ள கோவில்களில் இருக்கும் நாக தேவதைகளுக்கு பாலாபிஷேகம் செய்யலாம். அப்படி செய்வதால் சர்ப்பதோஷம் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி மேலோங்கி இருக்கும் என்பது ஐதீகமாகும். இந்த நன்னாளில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களும் கிடைக்கிறது. அதனைப் பற்றி காணலாம்.

மிதுனம்

இந்த ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி சுப பலன்களைத் தருகிறது. குடும்ப நலத்தில் பிரச்னை ஏற்பட்டால் அது தீர்ந்து உறவுமுறை இயல்பு நிலைக்குத் திரும்பும். வெளியூர் பயணம் செய்யும் எண்ணமும் வரும்

கன்னி

 

இந்த ராசிக்காரர்களுக்கு மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சியான திருமணம் அமையும். ஒரு துணையைத் தேட ஒற்றையர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நல்ல வாழ்க்கைத்துணையைப் பெறுவீர்கள்.

துலாம்

இந்த ராசிக்கு நோய் குறையும். சிறந்த சிகிச்சை கிடைக்கும். பாவம் மீட்கப்படும். பதட்டத்தில் இருந்து மீள்வதற்கான நேரம் இது.

கும்பம்

 

நிதிச்சுமை குறையும். தீய செயல்களுக்கு இழந்த பணம் நற்செயல்களுக்கு செலவிடப்படும். மன உளைச்சலுக்கு ஆளாகும்.

மீனம்

இந்த ராசிக்காரர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். செய்யும் பணியில் தைரியம் காணப்படும், பயம் நீங்கி செய்யும் பணியில் உற்சாகம் உண்டாகும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version