Astrology: தட்டும் அதிர்ஷ்டம்.. 2025ல் பணக்கார யோகம் கொண்ட 6 ராசிகள்!

New Year 2025: இந்தாண்டு நம் அனைவருக்கே இன்பம், துன்பம் நிறைந்த ஒன்றாகவே இருந்திருக்கலாம். ஆனால் வரப்போகும் 2025 ஆம் ஆண்டு இன்பங்களும், மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்பது  தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Astrology: தட்டும் அதிர்ஷ்டம்.. 2025ல் பணக்கார யோகம் கொண்ட 6 ராசிகள்!

கோப்பு புகைப்படம்

Published: 

12 Dec 2024 13:36 PM

ஜோதிடம் 2025: 2024 ஆம் ஆண்டு முடியப் போகிறது. இந்தாண்டு நம் அனைவருக்கே இன்பம், துன்பம் நிறைந்த ஒன்றாகவே இருந்திருக்கலாம். ஆனால் வரப்போகும் 2025 ஆம் ஆண்டு இன்பங்களும், மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்பது  தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜோதிட பலன்கள் கணிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் சனி, வியாழன், ராகு, கேது ஆகியவை ராசிகள் மாறுவதால் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், மகரம் ஆகிய ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாற வாய்ப்புள்ளது. மார்ச் 29 ஆம் தேதி சனி மீன ராசியிலும், குரு மே 25ல் மிதுன ராசியிலும், ராகு மே 18ல் கும்ப ராசியிலும், கேது மே 18ல் சிம்ம ராசியிலும் சஞ்சரிக்கின்றனர். இந்த மாற்றங்களால் இந்த ராசிக்காரர்களுக்கு வருடம் முழுவதும் பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். நன்றாக சம்பாதிக்க சில வழிகளும் வாய்ப்புகளும் அவர்களுக்கு முன் வரும். எப்படிப் பார்த்தாலும், 2024-ஐ விட இந்த ராசிக்காரர்களுக்கு 2025 மிகவும் அற்புதமாகவும், மகிமையாகவும் இருக்கும்.

  1. ரிஷபம்: சனி, ராகு, குரு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச யோகத்தை அளிக்க வாய்ப்புள்ளது. வருமானம் அபரிமிதமாக உயரும்,  பெருகும். பணம் சம்பாதிக்க வாய்ப்பு அதிகமாக இருக்கும். உத்யோக அதிபதியான சனி லாப ஸ்தானத்தில் நுழைவதால் உத்தியோகத்தில் நிச்சயம் பதவி உயர்வுகள் உண்டாகும். சம்பளம் உயரும். தொழில், வியாபாரம் மிகவும் லாபகரமாக இருக்கும். எந்த இடத்தில் போட்டி இருந்தாலும் வெற்றி உங்களைத் தேடி வரும்.
  2. மிதுனம்: இந்த நான்கு முக்கிய கிரகங்களும் இந்த ராசிக்கு சாதகமாக இருப்பதால் உச்சக்கட்ட ராஜயோகம் உருவாகிறது. ராஜ மரியாதை கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். சிறந்த வேலைக்கு மாறவும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வேலையில் விரைவான முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிரபலங்களுடன் பழக தொடங்குவீர்கள். வருமானம் குறித்து எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறும்.
  3. கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சுப ஸ்தானத்தில் பிரவேசிப்பது பெரும் அதிர்ஷ்டமாகவே கருதப்படுகிறது. அஷ்டம சனி தோஷம் முழுவதுமாக நீங்குவதைத் தவிர, பல வழிகளில் பாக்ய யோகங்கள் உண்டாகின்றன. வேலையில்லாதவர்களுக்கும் வேலையில் இருப்பவர்களுக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் கூடிவரும். வெளிநாட்டு வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் குடியேறிய ஒருவருடன் திருமண வரன் ஏற்படும். தந்தையிடமிருந்து சொத்து கிடைக்கும். காதல் விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். பல தரப்பிலிருந்தும் வருமானம் பெருகும்.
  4. கன்னி: ஏழாம் வீட்டில் சனியும், ஆறாம் வீட்டில் ராகுவும், பத்தாம் வீட்டில் குருவும் இருப்பதால் ராஜயோகங்கள் உண்டாகும். நிதி, உடல்நலம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து கிட்டத்தட்ட முழுமையான விடுதலையைப் பெறுவீர்கள். பல வழிகளில் வருமானம் பெருகும். பங்குகள், முதலீடுகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் பெரும் நிதி ஆதாயங்களை ஏற்படுத்தும். ஒவ்வொரு முயற்சியும் நிறைவேறும். சொத்து தகராறு, பிரச்சனைகள், நீதிமன்ற வழக்குகள் சுமூகமாக தீர்க்கப்படும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும்.
  5. துலாம்: இந்த ராசிக்கு ஏழாம் வீட்டில் சனியும், பாக்ய வீட்டில் குருவும் சஞ்சரிப்பதால் திட்டமிட்ட வேலைகள் திட்டமிட்டபடி நிறைவேறும். எந்த முயற்சியும் வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத உறுதியாகும். தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்வீர்கள். ராகு மற்றும் கேதுவின் இணக்கம் காரணமாக குடும்ப விவகாரங்களும் மேம்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். குழந்தைகளுக்கான தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வருமானம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
  6. மகரம்: இந்த ராசியின் மூன்றாம் ஸ்தானத்தில் சனி நுழைவதால், சனியின் தாக்கம் நீங்கும். பல வழிகளில் வளரவும் முன்னேறவும் வாய்ப்பு உள்ளது. எந்த முயற்சியும் 100% வெற்றி கிடைக்கும். வருமானம் நன்றாக வளரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். பெரும்பாலான உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படும். உத்தியோகத்தில் நிச்சயம் உயர் பதவிகளைப் பெறுவீர்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

டிசம்பர் மாதத்தில் நாம் செல்ல வேண்டிய அழகிய சுற்றுலா இடங்கள்!
ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ டிப்ஸ்!
ஒல்லியாக இருப்பவர்கள் இந்த காரணங்களால் எடை அதிகரிப்பது கிடையாது..!
கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் படைத்த டாப் 10 சாதனைகள்..!