Astrology: விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் புதன்.. 6 ராசிகளுக்கு கஷ்ட காலம் தான்!

நவம்பர் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை விருச்சிக ராசியில் புதன் சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் இருந்தாலும்,  சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை தேவைப்படுகிறது.

Astrology: விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் புதன்.. 6 ராசிகளுக்கு கஷ்ட காலம் தான்!

கோப்பு புகைப்படம்

Published: 

24 Nov 2024 15:00 PM

ஜோதிடப்பலன்: ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கும் பலருக்கும் அதன் சாதகம், பாதகம் என அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள். கிரகங்களின் செயல்பாடுகளால் வாழ்க்கையில் நடக்க இருக்கும் விஷயங்கள் பற்றிய கணிப்புகளை அறிந்துக் கொள்வார்கள். அந்த வகையில் நவம்பர் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை விருச்சிக ராசியில் புதன் சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் இருந்தாலும்,  சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சரிப்பதால் சற்று எதிர்மறையான பலன்களை சந்திக்க வேண்டி வரும். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் தங்கள் நிதி விவகாரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன விஷயங்கள் நடக்கும்?

  1. மேஷம்: இந்த ராசிக்கு எட்டாம் வீட்டில் புதனின் அம்சம் இருப்பதால் சில பிரச்னைகள், சர்ச்சைகளில் சிக்க வாய்ப்பு உள்ளது. அவசரமாக எதிலும் மூக்கை நுழைக்க வேண்டாம். ஏதேனும் ஒப்பந்தங்களில் ஈடுபடும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. சொத்து தகராறில் முட்டுக்கட்டை ஏற்பட வாய்ப்புள்ளது. வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாக்குவாதங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டாம். மன உளைச்சல் அதிகமாக இருக்கும்.
  2. கடகம்: இந்த ராசியின் பஞ்சம ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் சில முக்கிய விஷயங்களில் தவறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. தொழில், உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் சிரமங்கள் மற்றும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சக போட்டியாளர்களால் பிரச்சினைகள் இருக்கலாம். உறவினர்கள் சிலரால் உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. உதவி பெற்றவர்கள் முகம் சுழிக்கும் நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பிருக்காது.
  3. சிம்மம்: இந்த ராசிக்கு நான்காம் இடத்தில் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். மன அழுத்தம் அதிகரிக்கும். வீடு கட்டும் பணிகளும், அதற்கான முயற்சிகளும் தடைபடும். சொத்துப் பிரச்சனைகள் மற்றும் தகராறுகள் மிகவும் தொந்தரவாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை அதிகம் தேவை. நிதி சிக்கலில் சிக்காமல் கவனமாக இருங்கள். பணம் கொடுத்து எதையும் வாங்காதீர்கள். சில உறவினர்களால் பண இழப்பு ஏற்படும்.
  4. விருச்சிகம்: இந்த லக்னத்தில் பிற்போக்கான புதன் இருப்பதால் தனிப்பட்ட பிரச்சனைகள் மன உளைச்சலை ஏற்படுத்தும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிரமங்களை சந்திக்க நேரிடும். தொழில் மற்றும் வேலைகளில் உங்கள் திறமை கேள்விக்குறியாகிவிடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. கடின உழைப்புக்கு பலன் கிடைக்காமல் போகலாம். திருமண வாழ்வில் எதிர்பாராத பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. சம்பாதிக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.
  5. தனுசு: இந்த ராசிக்கு 12ல் பிற்போக்கான புதன் சஞ்சாரம் செய்வதால் கடின உழைப்பின் பெரும்பகுதி வீணாகிவிடும். எந்த முயற்சி எடுத்தாலும் கூடி வராது. உரிய நேரத்தில் பணம் கிடைக்காமல் சிரமமாக இருக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நெருங்கிய நண்பர்கள் சிலர் எதிரிகளாக மாறும் அபாயம் உள்ளது. தொலைதூரப் பயணங்களில் லாபத்தை விட இழப்புகளே அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் பாதிப்பு குறையும். தொழில், வியாபாரம் மந்தமாக இருக்கும்.
  6. மீனம்: இந்த ராசிக்கு அதிஷ்ட ஸ்தானத்தில் புதன் சஞ்சாரம் செய்வதால் சுப காரியங்களில் தடைகள் ஏற்படும். வெளிநாடு செல்வதில் சிரமங்கள் ஏற்படும். வெளிநாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் உறவினர்களிடம் இருந்து தொடர்பு கிடைக்காமல் போகலாம். பணப்பற்றாக்குறையால் சிரமம் ஏற்படும். நண்பர்கள் உண்மையான முகம் காட்டும் சூழல் உண்டாகும். சொத்து, நிதி விவகாரங்களில் அனுகூலம் குறையும். தந்தையின் உடல்நிலையில் பிரச்னை உண்டாகும். உத்தியோகம் மற்றும் திருமண முயற்சிகளில் ஏமாற்றம் ஏற்படும்.

மேற்குறிப்பிட்ட இந்த ராசிக்காரர்கள் மரகதம் அல்லது பச்சைக்கல்லை மோதிரத்தில் அணிவித்து, பச்சை நிற ஆடைகளை அணிந்து, கணபதியை அதிகம் வழிபட்டால் வக்ர புத தோஷத்தில் இருந்து விடுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்