Astrology: இந்த 4 ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தெரியுமா?

Love: ஒருவரின் வாழ்க்கை எப்படி இருந்தாலும் சரியான வாழ்க்கை துணை இருந்தால் எப்பேர்ப்பட்ட சவால்களையும் நேருக்கு நேராக சந்திக்கலாம். ஆனால் சிலருக்கு சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது வாழ்க்கையில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதற்கு ஜோதிடம் சிறந்த தீர்வைக் காட்டுகிறது. அதனால்தான் திருமணத்திற்கு முன்பே ஜாதகம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது. 

Astrology: இந்த 4 ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Published: 

19 Aug 2024 12:20 PM

காதல்: நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் திருமணத்திற்கு முன், பின் என இருவகைகளாக பிரிக்கலாம். ஒருவரின் வாழ்க்கை எப்படி இருந்தாலும் சரியான வாழ்க்கை துணை இருந்தால் எப்பேர்ப்பட்ட சவால்களையும் நேருக்கு நேராக சந்திக்கலாம். ஆனால் சிலருக்கு சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது வாழ்க்கையில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதற்கு ஜோதிடம் சிறந்த தீர்வைக் காட்டுகிறது. அதனால்தான் திருமணத்திற்கு முன்பே ஜாதகம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது.  ஜாதகம் நன்றாக இருந்தால்தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. சில வித்தியாசம் இருந்தாலும் பெரிய அளவில் பிரச்னை இருக்காது என கணிக்கப்படுகிறது. ஆனால் சாஸ்திரத்தின்படி ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்களை நேசிப்பது வாழ்க்கையில் ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. இவர்களை மற்றவர்கள் ஒருமுறை காதலித்தாலும் என்றைக்கும் மறக்க முடியாத அளவுக்கு நினைவுகளை விட்டுச் செல்வார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. அப்படி எந்தெந்த ராசிக்காரர்கள் நல்ல காதலர்கள் என்பதை நாம் காணலாம்.

ரிஷபம்: சுக்கிரன் ஆட்சி செய்வதால் இந்த ராசிக்காரர்கள் அழகு மற்றும் வசீகரத்தின் உருவகமாக கருதப்படுகிறார்கள் அதனால்தான் இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் அதிகம் நேசிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு மன்மத யோகம் இருப்பதால் இந்த ராசிக்காரர்களை நீங்கள் ஒருமுறை நேசித்தால் மறப்பது மிகவும் கடினம். மிக முக்கியமாக, இவர்கள் தங்கள் காதலால் தங்கள் வாழ்க்கைத் துணையை திணற வைக்கும் அளவுக்கு அன்பை கொட்டுவார்கள். திருமண விஷயத்தில் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பதால்  இந்த ராசியை சேர்ந்தவர்கள் சந்தேகமில்லாமல் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

கடகம்: இந்த ராசியை சேர்ந்தவர்கள் அன்பின் உருவகம் என்று ஜோதிடம் தெரிவிக்கின்றது. அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாக்க எந்த விலை வேண்டுமானாலும் கொடுப்பார்கள். இந்த ராசிக்காரர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டால் கடைசி வரை வாழ்க்கை துணை எதிர்பார்த்த அந்த காதல் வாழ்க்கை கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு நல்ல ஆதரவைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.  மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருக்கும் இவர்கள் மனதை யாரும் புண்படுத்தாமல் இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஒருமுறை கடக ராசிக்காரர்களின் நம்பிக்கையை இழந்தால், அதை மீண்டும் பெறுவது கடினம். எனவே அவர்களுடன் கவனமாக இருங்கள். மொத்தத்தில் இவர்களை சிறந்த வாழ்க்கை துணை என்று சொல்லலாம்

சிம்மம்: இந்த ராசிக்கு அதிபதியான சூரியன்  என்பதால் இவர்களுக்கு சூரியனின் குணாதிசயங்கள் உண்டு. எதையும் நேரடியாகப் பேசுவார்கள். அதே சமயம் ஒருவரை காதலித்தால் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவரை விட்டு விலக மாட்டார்கள். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் அன்புக்குரியவர்களின் துணையை விரும்புகிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த யாருக்கும் பயப்படுவதில்லை. விரும்பியவர்களுடன் தங்கள் வாழ்க்கையின் இறுதி வரை ஒன்றாக இருப்பார்கள். அவர்களின் காதல் கடல் போல் ஆழமானது. அவர்களை சமாதானப்படுத்துவது மிகவும் கடினம். சிம்ம ராசிக்காரர்களை ஒரு முறை காதலித்தால் வாழ்க்கையில் மறக்கவே மாட்டார்கள்.

துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பதில் சற்று சிரமம் இருக்கும். ஆனால் வாழ்க்கைத் துணையாக யார் காலடி எடுத்து வைத்தாலும் அந்தத் வாழ்க்கை முழுவதும் சுகமாகவே இருக்கும். சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையாக இருக்க விரும்புவார்கள். அவர்களுடன் காதல் நெருக்கம் மிகவும் வசதியானது. மேலும், அவர்கள் உருவாக்கும் உறவுகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எப்போதும் விரும்புவார்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?