5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Astrology: வியாழன், சுக்கிரன் இடையே ராசிமாற்றம்.. நவம்பரில் 6 ராசிக்கு யோகம்!

நவம்பர் மாதத்தில் சுக்கிரனும்,  சூரியனும் ராசி மாறுவதால் சனிஸ்வரன் தோஷம் நீங்கும் நிலை உண்டாகிறது. மேலும் வியாழன் மற்றும் சுக்கிரன் இடையே ஒரு ராசி மாற்றம் உள்ளது. இந்த மாற்றங்களால் மேஷம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளில் சாதகமான மாற்றங்களும், சுப பலன்களும் ஏற்படுகிறது. இதனால் வருமான வளர்ச்சி மற்றும் அதிகார யோகத்திற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அது என்ன என பார்க்கலாம்.

Astrology: வியாழன், சுக்கிரன் இடையே ராசிமாற்றம்.. நவம்பரில் 6 ராசிக்கு யோகம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 30 Oct 2024 18:38 PM

நவம்பர் பலன்கள்: ஜோதிடத்தில் நம்பிக்கைக் கொண்ட பலருக்கும் கிரகப்பலன்கள் சாதகமாகவும், பாதகமாகவும் அமையும். அவ்வப்போது நிகழும் கிரக மாற்றம் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அந்த வகையில் நவம்பர் மாதத்தில் சுக்கிரனும்,  சூரியனும் ராசி மாறுவதால் சனிஸ்வரன் தோஷம் நீங்கும் நிலை உண்டாகிறது. மேலும் வியாழன் மற்றும் சுக்கிரன் இடையே ஒரு ராசி மாற்றம் உள்ளது. இந்த மாற்றங்களால் மேஷம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளில் சாதகமான மாற்றங்களும், சுப பலன்களும் ஏற்படுகிறது. இதனால் வருமான வளர்ச்சி மற்றும் அதிகார யோகத்திற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. நல்ல செய்திகளை கேட்பதும், நேர்மறையான நிகழ்வுகளும் அதிகம் நடைபெறும் . மீதமுள்ள ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் சறுக்கல் இல்லாமல் சாதகமான பலன்கள் உண்டாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

Also Read: November Month: கந்த சஷ்டி, கார்த்திகை மாத பிறப்பு.. நவம்பரின் முக்கிய விசேஷ தினங்கள்!

  1. மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் முழுவதும் சுப நிகழ்வுகள் மற்றும் நல்ல செய்திகள் நடக்கும். புதிய வேலையில் சேரவும், விரும்பிய நல்ல வேலைக்கு மாறவும் வாய்ப்பு உண்டாகும். பொருளாதாரத்தில் உயர்தர குடும்பத்துடன் திருமண உறவு உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் எதிர்பார்த்த சாதகமான தகவல்கள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியாக  செல்லும். தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் வருமானம் பெருகும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் அதிகரிக்கும்.
  2. கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் அஷ்டம சனியின் தாக்கம் வெகுவாக குறையும். தொழில் மற்றும் வேலைகளில் பணிச்சுமை மற்றும் கூடுதல் பொறுப்புகள் குறையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. தொழில், வியாபாரத்தில் நஷ்டம், நிதி பிரச்சனைகள் வெகுவாக குறையும். வேலையில்லாதவர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும். கிரஹ, வாகன யோகங்கள் ஏற்படும். குடும்பத்தில் நல்ல செயல்கள் மற்றும் பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  3. சிம்மம்: இந்த  ராசிக்காரர்கள்  பல வழிகளில் அங்கீகரிக்கப்படுகிறார்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் புதிய சிந்தனைகளால் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு லாபம் கிடைக்கும். உயர் மட்ட நபர்களுடன் லாபகரமான தொடர்புகள் அதிகரிக்கும். வருமானத்தை அதிகரிக்க பல வழிகள் கிடைக்கும். மனதின் பெரும்பாலான ஆசைகள், நம்பிக்கைகள், லட்சியங்கள் நிறைவேறும். பணியாளர்களுக்கு தேவை அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகளும் வந்து சேரும்.
  4. கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். சொத்து மதிப்பு உயர வாய்ப்புள்ளது. சொத்து தகராறு, பிரச்சனைகள் சாதகமாக தீரும். வீடு மற்றும் வாகன வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். சுப செய்திகள் கேட்க வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வருமானம் பல வழிகளில் பெருகும்.
  5. விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு, தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். இந்த மாதம் நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலிப்பது அல்லது திருமணம் செய்வது நடக்கும். சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்களுடன் தொடர்புகள் ஏற்படும். பிடித்த இடங்கள் மற்றும் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பல தரப்பிலிருந்தும் வருமானம் அதிகரிக்கும். திடீர் பண ஆதாயமும் உண்டாகும். வார்த்தையின் மதிப்பு கூடும்.
  6. கும்பம்: இந்த லக்னத்தில் சுப கிரகங்களின் பொருந்திய தன்மையால் கடந்த காலத்தில் இருந்த சனியின் தாக்கம் முற்றிலும் குறைந்து விடுகிறது. வருமானம் தரும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பெரும்பாலான தனிப்பட்ட பிரச்சனைகள் தீரும். நீங்கள் நிதி சிக்கல்களில் இருந்து கிட்டத்தட்ட விடுதலை பெறுவீர்கள். உத்யோகத்தில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சிறந்த வேலைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு தாங்கள் விரும்பிய வேலை நிச்சயம் கிடைக்கும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News