Trigrahi Yogam: சிம்ம ராசியில் இணையும் 3 கிரகங்கள்..எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்?

Astrology: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் மற்றும் ராசிகளின் பெயர்ச்சிக்கு தனி இடம் உண்டு. வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒரே ராசியில் சந்திக்கின்றன. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கைக்கான ராசியாக சிம்மம் உள்ளது. அதன் அதிபதியாக சூரியன் இருக்கும் நிலையில் திரிகிரஹி யோகத்தை சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது.

Trigrahi Yogam: சிம்ம ராசியில் இணையும் 3 கிரகங்கள்..எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்?

கோப்பு புகைப்படம்

Updated On: 

12 Aug 2024 13:08 PM

திரிகிரஹி யோகம்: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் மற்றும் ராசிகளின் பெயர்ச்சிக்கு தனி இடம் உண்டு. இதில் ஒரே ராசியில் உள்ள கிரகங்களின் சேர்க்கை என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு ஒரு ராசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இணைவதால் சிறப்பான யோகங்கள் உண்டாகும். குறிப்பாக மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் சேர்வது திரிகிரஹி யோகம் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒரே ராசியில் சந்திக்கின்றன. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கைக்கான ராசியாக சிம்மம் உள்ளது. அதன் அதிபதியாக சூரியன் இருக்கும் நிலையில் திரிகிரஹி யோகத்தை சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. மேலும், சம்பந்தப்பட்ட ராசிகளுக்கு இந்த கிரகப் பெயர்ச்சியால் எதிர்பாராத விதமாக பணம் வந்து சேரும், நிதி நெருக்கடிகள் தீரும். அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் இருக்கும் என்று பார்க்கலாம்.

Also Read: Gold Rate : சவரனுக்கு ரூ.1120 உயர்ந்த தங்கம் விலை.. ஒரு வாரத்துக்குள் எகிறிய ரேட்.. 6 நாள் விலை பட்டியல்

சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு  திரிகிரஹி யோகத்தால் தங்களுக்கு வேண்டிய காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். மேலும் ஆன்மிக விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். இதனால் காலம் காலமாக தொல்லை கொடுத்து வந்த நாள்பட்ட நோய்கள் குறையும். பெற்றோருக்கு குழந்தைகளிடம் அன்பு கிடைக்கும். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழ தொடங்குவீர்கள். நீங்கள் எதைத் தொடங்கினாலும் வெற்றி உங்களுடையதாக இருக்கும்.

Also Read: Vastu Tips: வீட்டு வாசலை நோக்கி கால் வைத்து தூங்குவது நல்லதா?

விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் சுப பலன்களைத் தரும். பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். செலவை கட்டுக்குள் வைப்பது நல்லது. நீங்கள் செய்யும் கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும்.

தனுசு: இந்த மாதம்  16-ம் தேதி ஏற்படவுள்ள திரிகிரஹி யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன் தரும் என கணிக்கப்பட்டுள்ளது.  அதன்படி அவர்களுக்கு எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். புதிய வருமானங்களுக்கான ஆதாரங்கள் கிடைக்கும். எதிர்பாராத பணம் வந்து சேரும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். இதனுடன், தொழில் தொடர்பான வாழ்க்கையில் புதிய தொடர்புகள் உருவாகும். பணியாளர்களுக்கு நல்ல காலமாக அமையும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த நேரத்தில் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?