Diwali 2024: தீபாவளி நாளில் இப்படியெல்லாம் செய்யாதீங்க.. அப்புறம் பணத்துக்கு பிரச்னை தான்! - Tamil News | Avoid these behaviors during Diwali Otherwise you will be facing financial trouble | TV9 Tamil

Diwali 2024: தீபாவளி நாளில் இப்படியெல்லாம் செய்யாதீங்க.. அப்புறம் பணத்துக்கு பிரச்னை தான்!

Published: 

29 Oct 2024 09:10 AM

Deepavali 2024: வாழ்க்கையில் நல்ல நிலைமையில் வாழ தெய்வங்களின் ஆசி என்பது மிக முக்கியமானது. அதேசமயம் அஷ்ட லட்சுமிகளின் ஆசி இருப்பவரால் வாழ்வில் எத்தகையில் நிலையிலும் எளிதாக வாழ இயலும். அப்படிப்பட்ட லட்சுமிக்கு உகந்த நாளாக தீபாவளி பார்க்கப்படுகிறது. இந்த மங்களகரமான நாளில் நாம் லட்சுமி தேவியை வருத்தப்படுத்தும் செயல்களைத் தவிர்ப்பது நல்லது

1 / 6அக்டோபர்

அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் தங்கள் வீடுகளை நன்கு சுத்தம் செய்து அழகாக அலங்கரித்து, ரங்கோலி கோலமிட்டு, இனிப்புகள் தயாரித்து மாலையில் லட்சுமி தேவியை வழிபடுகிறார்கள்.

2 / 6

வாழ்க்கையில் நல்ல நிலைமையில் வாழ தெய்வங்களின் ஆசி என்பது மிக முக்கியமானது. அதேசமயம் அஷ்ட லட்சுமிகளின் ஆசி இருப்பவரால் வாழ்வில் எத்தகையில் நிலையிலும் எளிதாக வாழ இயலும். அப்படிப்பட்ட லட்சுமிக்கு உகந்த நாளாக தீபாவளி பார்க்கப்படுகிறது.

3 / 6

இந்த மங்களகரமான நாளில் நாம் லட்சுமி தேவியை வருத்தப்படுத்தும் செயல்களைத் தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் தீபாவளி அன்று நாம் கண்டிப்பாக சில செயல்களை செய்யவே கூடாது என சாஸ்திரம் சொல்கிறது.

4 / 6

தீபாவளி நாள் என்றாலே கொண்டாட்டம் தான் என்ற நிலையில் சூதாட்டத்தில் ஈடுபடுவது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இது லட்சுமி தேவியை கோபப்படுத்துவதோடு, அப்படி செய்பவர்கள் வீட்டில் அவள் ஒருபோதும் வாசம் செய்ய மாட்டாள் என நம்பப்படுகிறது. இது நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

5 / 6

வீட்டிலிருக்கும் பெண்கள் லட்சுமியின் உருவமாக பார்க்கப்படுகிறார்கள். எனவே தீபாவளி நாள் மட்டுமல்ல எந்த நாளிலும் அம்மா, மனைவி, மகள், சகோதரி மற்றும் பிற பெண்கள் யாவரையும் அவமரியாதையாகவோ, தரக்குறைவாகவோ பேசக்கூடாது மற்றும் நடத்தக்கூடாது. இதனால் நிதி பிரச்னை உண்டாகும்.

6 / 6

தீபாவளி என்பது விளக்குகளின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. எனவே இந்த நாளில் வீட்டின் எந்த மூலையிலும் இருட்டு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீபங்களை ஏற்றி வைப்பதோடு, தீபாவளி இரவு முழுவதும் ஒவ்வொரு அறையிலும் விளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!