5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vasthu : பெட்ரூம், கிச்சன் எங்கு இருக்கவேண்டுமென தெரிந்துகொள்ளுங்கள்.

Bedroom & Kitchen Vasthu : படுக்கயறை சமையலறை இருக்கவேண்டிய சரியான இடம் இதுதான்!

Vasthu : பெட்ரூம், கிச்சன் எங்கு இருக்கவேண்டுமென தெரிந்துகொள்ளுங்கள்.
மாதிரி படம்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 14 May 2024 20:10 PM

ஒரு வீடு என்றால் அதில் மிக முக்கியம் தூங்கும் இடமும், சமைக்கும் இடமும்தான். ஏனென்றால் நல்ல சாப்பாடும், நல்ல தூக்கமும்தான் மன அமைதியையும் ஆரோக்கியமான உடல்நிலையையும் தரவல்லது. எனவே அந்த இரண்டு அறைகளும் சரியாக அமைந்துவிட்டால் வாழ்நாள் சொர்க்கம்தான். நல்ல ஆரக்கியம் மற்றும் வளமான சந்ததிகளைப் பெற படுக்கயறையானது தென்மேற்கு திசையில் அமைந்திருக்கவேண்டும். வடகிழக்கு திசை உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதே சமயம் தென்கிழக்கிலுள்ள படுக்கயறையை பயன்படுத்தும் தம்பதியரிடையே கடும் சண்டை ஏற்படும். மேலும் படுக்கயறையில் இருக்கும் படுக்கையானது தென்மேற்கு மூலையில் வைக்கப்பட வேண்டும். தலை மேற்கு நோக்கி இருக்கவேண்டும்.

படுக்கயறை வடிவமைப்பு டிப்ஸ்:

படுக்கையறையில் படுக்கைக்கும் முன் கண்ணாடியோ, டீவியோ இல்லை ஏதெனும் பிரதிபலிப்பை ஏற்படுத்தும் பொருளையோ வைக்கக்கூடாது. ஏனெனில் படுக்கையிலிருந்தபடி பிரதிபலிப்பை பார்த்தால் சண்டையும் சச்சரவும் அதிகரிக்கும்.

சுவர்கள் மிகவும் வெளிரிய அல்லது லேசான நிறத்தில் வண்ணம் பூசப்பட வேண்டும், அது நேர்மறை எண்ணத்தை தரக்கூடியது. மாறாக கருப்பு நிறத்தையோ டார்க்கான நிறத்தையோ பயன்படுத்தக் கூடாது.

Also Read: பணம் கொட்டோ கொட்டுனு கொட்ட, குபேரரை இப்படி வழிபடுங்க!

சாமி செல்புகள் படுக்கயறையில் இருக்கவே கூடாது. நீர் மற்றும் நீர் சம்பந்தப்பட்ட படங்கள் எதுவும் படுக்கறையில் வைக்கக்கூடாது. இது உணர்ச்சி வெடிப்புகளை ஏற்படுத்தும்.

ஜீரோ வாட்ஸ் அல்லது வெளிச்சம் குறைவான லைட்டுகளை பயன்படுத்தவேண்டும். வாசனை திரவியங்கள் அல்லது நறுமன எண்ணெய்களை எரியவிடலாம்.

சமையலறை:

வீட்டின் தென்கிழக்கு திசையில் சமையலறை கட்டப்பட வேண்டும். வடக்கு, வடகிழக்கு, அல்லது தென்மேற்கு திசையில் சமயலைறையை கட்டுவதை சுத்தமாக தவிர்த்தல் நல்லது. சமையலறை போலவே சமையலறையில் உள்ள பொருட்கள் மற்றும் சாதனங்களும் தென்கிழக்கு திசையிலேயே இருக்கவேண்டும்.

Latest News