Purattasi Full Moon: புரட்டாசி மாத பௌர்ணமி விரதம்… நினைத்தது நடக்க இதை செய்யுங்க!
புரட்டாசி மாத பௌர்ணமி அன்று சிவபெருமானையும் அம்பிகையையும் மனதால் வழிபட்டால் நினைப்பது நடக்கும். வீட்டில் செல்வம் பெருக, தாலி பாக்கியம் நிலைக்க, சகல ஐஸ்வர்யங்களையும் கிடைத்து சந்தோஷமாக வாழ புரட்டாசி மாத பௌர்ணமி அன்று விரதம் வைக்க வேண்டும். புரட்டாசி பௌர்ணமி அன்று காலை நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால் முற்பிறப்பில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை
புரட்டாசி மாத பௌர்ணமி: இன்னும் சில தினங்களில் (செப்டம்பர் 17) புரட்டாசி மாதம் பிறக்க இருக்கிறது. மகத்துவம் மிக்க இந்த புரட்டாசி மாத பௌர்ணமி அன்று விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும். இந்த மாத பௌர்ணமி அன்று அம்பிகையையும் சிவபெருமானையும் ஒருசேர வழிபட்டால் நம் வாழ்க்கையில் எல்லா நலன்களையும் பெற முடியும். புரட்டாசி மாத பௌர்ணமி அன்று விரதம் இருந்தால் நம் வாழ்க்கையில் நினைத்த காரியம் கைகூடுவதோடு வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம். இந்த பௌர்ணமியின் நடுநிசியில் தியானம் மேற்கொண்டால் எதிர்காலத்தை உணரும் சக்தியை பெறலாம் என்பது நம்பிக்கை. மேலும் தாலி பாக்கியம் நிலைக்கும், கடன் தொல்லை நீங்கும், அனைத்து தெய்வங்களின் அருள் கிடைக்கும், அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைத்து சந்தோஷமாக வாழலாம்.
புரட்டாசி பௌர்ணமி குறித்த புராணக்கதை:
விநாயகப் பெருமானின் பக்தர்களில் ஒருவரான கிருச்சம்பதர் என்ற முனிவர் விநாயகப் பெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவர் தவத்தில் மெச்சய சிவபெருமான் அவருக்கு பல வரங்களை அளித்தார். அதில் முக்கியமான வரனாக சிவபெருமானை தவிர வேறு எவராலும் அழிக்க முடியாத ஒரு மகனை அவர் பெற்றெடுத்தார். தன்னுடைய தவ சக்தியால் பெற்ற மகனுக்கு பலி என்று பெயரிட்டார். தன் தந்தை கிருச்சம்பதர் போலவே தானும் விநாயகர் பெருமான் மீது அளவு கடந்த பக்தி கொண்டு விநாயகரிடம் இருந்து பல வரங்களை பெற்றார். மூன்று உலகங்களையும் அடக்கி ஆளக்கூடிய வல்லமையும் பொன், வெள்ளி, இரும்பாலான கோட்டை தனக்கு வேண்டும் என்ற வரங்களை அவர் பெற்றிருந்தார். இந்த வரங்களைப் பெற்ற பலி தேவர்களை கொடுமைப்படுத்த தொடங்கினார். இதனால் சிவபெருமானுக்கும் பலிக்கும் போர் நடந்தது. இந்த போரில் சிவபெருமான் பலியை வதம் செய்கிறார். இந்த பலி வதம் செய்யப்பட்ட புரட்டாசி மாத பௌர்ணமியின் அன்று சிவபெருமானை வழிபட்டால் அவர்கள் வாழ்க்கையில் எந்தவிதமான துன்பங்களும் நெருங்காது என்பது நம்பிக்கை.
புரட்டாசி மாத நவராத்திரியின் பத்தாவது நாளான விஜயதசமி அன்று மகேசனை அம்பிகை வதம் செய்தார். அதனால் ஏற்பட்ட கோபத்தினால் அம்பிகையின் முகம் உக்கிரமாக காட்சி அளிக்கும். எனவே புரட்டாசி மாத பௌர்ணமி அன்று இந்திரன், பிரம்மன்,விஷ்ணு ஆகியோர் அம்பிகையை வணங்கியதின் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகமாக பௌர்ணமி அன்று சாந்த சொற்பினியாக அன்னை காட்சியளிப்பார்.
Also Read: Astrology: கடவுள் வழிபாட்டில் இப்படியெல்லாம் வேண்டாதீங்க.. அப்புறம் அவ்வளவு தான்!
விரதத்தினால் கிடைக்கும் பயன்கள்:
புரட்டாசி பௌர்ணமி அன்று விரதம் மேற்கொண்டு சிவபெருமானையும் அம்பிகையையும் வழிபட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
புரட்டாசி பௌர்ணமி அன்று காலை நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால் முற்பிறப்பில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். அதேபோல் நண்பகலில் சிவபெருமானை வழிபட்டால் முற்பிறப்பு பாவங்கள் மட்டுமல்லாமல் இந்த பிறப்பின் பாவங்களும் நீக்கப்படுகிறது. அதேபோல் இந்த தினத்தில் மாலை நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால் ஏழேழு பிறவியிலும் செய்து முற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்குவதோடு விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்
புரட்டாசி பௌர்ணமியில் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டியது:
இந்த நாளன்று தங்களின் குல தெய்வத்திற்கு மாலை நேரத்தில் குறைந்தது அரை மணி நேரமாவது பூஜை செய்ய வேண்டும். உங்கள் பூஜை அறையில் குலதெய்வத்தின் படத்தினை ஒரு மரப்பலையின் மீது வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். குலதெய்வத்தின் படம் இல்லை என்றால் குலதெய்வத்தினை மனதார நினைத்து கொண்டு குத்து விளக்கு அல்லது நிறை செம்பு நீரை தங்களின் குலதெய்வமாக பாவித்து வழிபடலாம். அதுவும் இல்லை என்றால் ஒரு தாளில் உங்களின் குலதெய்வத்தின் பெயரை எழுதி வைத்து வழிபாடு செய்யலாம். பிறகு தாமரை மலர்கள், வாசனை வருகின்ற வண்ண மலர்கள் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 108 ஒரு ரூபாய் நாணயங்கள் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக பெண் தெய்வமாக இருந்தால் குங்குமமும் ஆண் தெய்வமாக இருந்தால் விபூதி அல்லது சந்தனமும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து படத்தின் இருபுறமும் குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு இல்லை என்றால் இரண்டு மண் அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். அந்த விளக்கில் சிவப்பு நிற திரி போட வேண்டும். குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய் ஏற்றது. எனவே இலுப்பை எண்ணையை பயன்படுத்தலாம். இலுப்பை எண்ணெய் கிடைக்கவில்லை என்றால் நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தலாம். பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் விநாயகர் பெருமானை மனதால் வணங்க வேண்டும். பிறகு குலதெய்வங்களின் பாடல்கள் தெரிந்தால் பாடலாம் இல்லையென்றால் 108 முறை தங்களின் குலதெய்வங்களின் பெயர்களை உச்சரிக்க வேண்டும். பிறகு தாமரை, வண்ணமலர், நாணயங்கள், குங்குமம் அல்லது சந்தனம் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். இதை செய்து முடித்த பிறகு தலைவாழை இலை எடுத்து அதில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் கேசரி, ஜாங்கிரி போன்ற சிவப்பு நிற இனிப்பு வகைகளை படைகளாக வைக்க வேண்டும். முடிந்தால் தங்களின் பூஜையில் ஒரு மாவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
இறுதியாக தெய்வத்தை கும்பிட்டு தீப தூப ஆராதனை செய்து தங்களின் பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். சாமிக்கு ஆர்த்தி எடுக்கும் பொழுது சூடத்திற்கு பதிலாக பச்சை கற்பூரம் ஏற்றுங்கள். படையலில் வைத்த உணவை வீட்டில் உள்ள அனைவர்களும் பிரசாதமாக எடுத்துக் கொள்ளவும்.
Also Read: Kula Deivam: வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது எப்படி?