Thiruvannamalai : திருவண்ணாமலை தீபத்தை தரிசிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
Benefits of Worship Maha Deepam: திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையின் போது ஏற்றப்படும் மகா தீபம் ஏற்றப்படும். இது மகா தீபத்தை தரிசிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. மலையேறி தரிசிக்க முடியாதவர்கள் கீழிருந்தும் அந்த தீபத்தை பார்த்து தரிசிக்கலாம்.
திருவண்ணாமலை என்றாலே தீபமும் அண்ணாமலையாரும் தான் நினைவுக்கு வரும். இங்கு அருணாச்சலேஸ்வரர், கிரிவலம், கிரிவலம் சுற்றி இருக்கும் கோயில்கள், கார்த்திகை தீபம் உள்ளிட்டவைகளும் இதில் அடங்கும். அந்த வகையில் இன்று (13-12-2024) திருக் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்வார்கள். இந்த மகா தீபம் ஆனது மலை மீது ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை காண குறிப்பிட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட மலை சரிவினால் சில பாதுகாப்பு முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்தை மலையேறி போய் பார்க்க முடிவது கேள்விக் குறியாகியுள்ளது. தீபம் ஏற்றும் மலைப்பாதை முழுவதும் பாறைகளும் கற்களும் உடைந்து சேதமடைந்துள்ளது. இருந்தாலும் மலையேறி தீபத்தை வழிபட முடியாதவர்கள் கீழிருந்தும் வழிபடலாம். இந்த கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தீபத்தை தரிசிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
மலையில் ஏற்றப்படும் திருக்கார்த்திகை தீபம் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் தெரியும். இந்த தீபத்தை நேரில் பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தத் திருக்கார்த்திகை திருவிழாவின் அண்ணாமலையார் வீற்றிருக்கும் மலையைப் பார்த்து ஓம் நமச்சிவாய என்று கூறினாலே மூன்று கோடி முறை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Also Read:வீட்டில் விளக்கு வைக்க வேண்டிய இடங்கள்… அதனால் ஏற்படும் நன்மைகள்!
திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றும் போது மலையின் உள் பகுதியிலும் பூஜை நடக்கும் சத்தங்கள் கேட்பதாக ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலையில் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டவுடன் தீபத்தை வழங்கிவிட்டு கிரிவலம் வந்தால் ஆத்ம சக்தி கிடைக்கும்.
மலை மீது ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. மேலும் அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் கொப்பரை நெய்யில் ஆற்றல் வாய்ந்த மூலிகை பொருட்களை சேர்த்து விடுவதால் அதிலிருந்து வரும் புகை தீய சக்திகளை அழிக்கும் திறன் கொண்டது. எனவே இது உடல் உபாதைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது என்று சொல்லப்படுகிறது.
இந்த நாளில் கிரிவலம் வந்தால் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும் அவற்றிலிருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும். மேலும் கார்த்திகை தீபத்திலிருந்து மூன்றாவது நாள் மலையை பஞ்சமூர்த்திகள் வலம் வருவார்கள் என்று சொல்லப்படுகிறது. அன்றைய தினம் நாமும் வலம் வந்தால் எண்ணற்ற புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது .
கிரிவலத்தின் நன்மைகள்:
கிரிவலம் என்றால் மலையை சுற்றி வந்து வழிபாடு செய்வது என்பது தான் பொருளாகும். ஒரு கோவிலுக்குள் எழுந்தருளி இருக்கும் இறைவனின் கருவறையை சுற்றி வழிபாடு செய்யும்போது அந்த கருவறையின் மேல் நிறைந்திருக்கும் தெய்வீக சக்திகள் நாம் ஈர்த்து இதன் மூலமாக நம் உடலுக்கு தேவையான நேர்மையான சக்தியும் நல்லெண்ணங்களும் ஏற்படும். அதேபோல மலை மீது எழுந்தருளி இருக்கக்கூடிய இறைவனை சுற்றி வரும் பொழுது நல்லெண்ணங்களையும் நேர்மறையான ஆற்றல்களையும் பெற முடியும். கிரிவலம் செய்வதால் நம்முடைய வினைகள் அந்த இடத்திலேயே நீங்கப்படுகிறது. மேலும் கெட்டவினைகள் நீங்கி நல்வினைகள் நமக்கு மேம்படும். எனவே பாவத்தைப் போக்கி புண்ணியத்தை தரக்கூடியதாக இந்த கிரிவலம் அமைகிறது.
Also Read: Girivalam: எந்த நாளில் கிரிவலம் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
அணையாத ஒளிவிளக்கு:
மேலும் இந்த தினத்தன்று கிரிவலம் சொல்பவர்களுக்கு ஆயிரம் அஸ்வமேதயாகும் செய்த பலன் கிடைக்கும். இன்று ஏற்றப்படும் தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரிந்து கொண்டிருக்கும். திருக்கார்த்திகையின் போது ஏற்றப்படும் தீபம் எவ்வளவு காற்று, மழை வந்தாலும் இந்த தீபம் அணையாது. பஞ்சபூத தலங்களில் நெருப்புத் தலமாக இருப்பது இந்த திருவண்ணாமலை.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)