Born Month Personality: நீங்கள் இப்படிப்பட்டவரா? – பிறந்த மாதம் சொல்லும் பலன்கள்!

Astrology: மாதங்களை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறான சிறப்புகளை கொண்டிருக்கும். எந்த மாதமும் ஒன்றுக்கொன்று குறைவில்லை என்பது போல அந்தந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு என தனிப்பட்ட சிறப்புகளும் உள்ளது. நாம் பெயர், ராசி. நட்சத்திரம், பிறந்தநாள், இடம் உள்ளிட்டவை மட்டுமல்ல அந்த மாதம் கூட நம் ஆளுமைகள் பற்றி சொல்லும்.

Born Month Personality: நீங்கள் இப்படிப்பட்டவரா? - பிறந்த மாதம் சொல்லும் பலன்கள்!

கோப்பு புகைப்படம்

Published: 

13 Aug 2024 13:13 PM

பிறந்த மாத பலன்கள்: ஆங்கிலம் மற்றும் தமிழ்நாட்காட்டியின்படி 12 மாதங்கள் என்பது உள்ளது. குளிர்காலம், கோடைகாலம், மழைகாலம் என பருவகாலங்கள் பொதுவாக சொல்லப்படுவதுண்டு. மாதங்களை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறான சிறப்புகளை கொண்டிருக்கும். எந்த மாதமும் ஒன்றுக்கொன்று குறைவில்லை என்பது போல அந்தந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு என தனிப்பட்ட சிறப்புகளும் உள்ளது. நாம் பெயர், ராசி. நட்சத்திரம், பிறந்தநாள், இடம் உள்ளிட்டவை மட்டுமல்ல அந்த மாதம் கூட நம் ஆளுமைகள் பற்றி சொல்லும். அப்படியாக ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பிறந்தவர்கள் எப்படிப்பட்ட ஆளுமைகளைப் பெற்றிருப்பார்கள் என்பதை இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

  1. ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் சுய விருப்பமுள்ளவர்கள். இவர்களுக்கு தலைமைப் பண்பும் இருக்கும். அதனால் அவர்களைக் கேள்வி கேட்க யாருக்கும் பெரிய அளவில் தைரியம் இருக்காது. எப்பேர்ப்பட்ட கேல்வியாக இருந்தாலும் பதிலால் எதிரில் இருப்பவர்களை திணறடித்து விடுவார்கள். இவர்கள் பொதுவாகவே அன்பானவர்கள். தங்கள் வேலையில் நேர்மையாக இருக்க வேண்டும் என நினைத்து, எப்போதும் பாடுபடுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அவ்வளவு எளிதில் உணர்வுகளை வெளிக்காட்ட மாட்டார்கள்.
  2. பிப்ரவரியில் பிறந்தவர்கள் வலுவான முடிவெடுப்பவர்கள் மற்றும் புத்திசாலிகளாக இருப்பார்கள். இந்த மக்கள் தங்கள் பெற்றோரை அதிகம் நேசிக்கிறார்கள். எளிதில் ஒருவிஷயத்தில் மாறக்கூடிய இயல்புடையவர்களால் சில சமயங்களில் பெரிய மனிதர்களைப் போல நடந்துகொள்வார்கள். அதேசமயம் சுயமாக யோசிக்காமல் மற்றவர்களின் வார்த்தைகளைக் கேட்டு செயல்படுவது தவறாக பாதைக்கு அழைத்துச் செல்லும். எந்தவொரு விஷயத்திலும் யோசித்து சுயமாகவும் மிக விரைவாக முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள். எதிர்காலத்தை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.  இந்த மக்கள் நேர்மையான மற்றும் நம்பகமானவர்கள். கட்டமைப்பிற்குள் அடைத்துவைக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.
  3. மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியானவர்களாகவும், வசீகரமான ஆளுமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எல்லாவற்றிலும் முழுமையை விரும்புகிறார்கள். சாகச விஷயங்களில் அதிக ஆர்வம் இருக்கும். மற்றவர்கள் தங்களைப் பற்றி விமர்சித்தால் பிடிக்கவே பிடிக்காது. சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட மனம் சோர்ந்து போகும். அவர்கள் தங்கள் துணையை ஆளும் இயல்புடையவர்கள். உறவுகளை எப்படி நடத்துவது என்பது இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
  4. ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் நன்றாகப் பேசக்கூடியவர்களாகவும்,  ஆளுமைத்திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.   மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவார்கள். அவர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்கள். எல்லாவற்றையும் நேர்மறையாகப் பார்ப்பார்கள். அறிவைப் பெறுவதில் ஆர்வம் கொண்டவர்கள். இவர்களுக்கு விளையாட்டு, இசை மற்றும் பயணங்களில்  அதீத ஆர்வம் இருக்கும்.
  5. மே மாதத்தில் பிறந்தவர்கள்  ஒவ்வொரு விஷயத்தில் அதிக விருப்பமும், ஈடுபாடும் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு சீக்கிரம் கோபம் வரும். எந்த சூழலிலும் உறுதியான நிலைப்பாடுகளை எடுப்பார்கள். எதிர்பாலின மக்களிடம் பேசுவதில் அதிக ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கழுத்து மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் அடிக்கடி ஏற்படும். நல்ல கற்பனை வளம் இருக்கும் இவர்கள் ஒருபோதும் வீட்டில் இருக்க விரும்பவே மாட்டார்கள்.
  6. ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். சுற்றுப்புறத்தில் தன்னைப் பற்றிய நிலை அறிந்து திருப்தி அடைவார்கள். புதிய நட்புகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கலகலப்பான மற்றும் மகிழ்வுடன் இருக்கும் வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?