Born Month Personality: நீங்கள் ஜூலை முதல் டிசம்பர் வரை பிறந்தவர்களா? – இதைப் படிங்க!
Astrology: ஆங்கிலம் மற்றும் தமிழ்நாட்காட்டியின்படி 12 மாதங்கள் என்பது உள்ளது. குளிர்காலம், கோடைகாலம், மழைகாலம் என பருவகாலங்கள் பொதுவாக சொல்லப்படுவதுண்டு. மாதங்களை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறான சிறப்புகளை கொண்டிருக்கும். எந்த மாதமும் ஒன்றுக்கொன்று குறைவில்லை என்பது போல அந்தந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு என தனிப்பட்ட சிறப்புகளும் உள்ளது.
பிறந்த மாத பலன்கள்: ஆங்கிலம் மற்றும் தமிழ்நாட்காட்டியின்படி 12 மாதங்கள் என்பது உள்ளது. குளிர்காலம், கோடைகாலம், மழைகாலம் என பருவகாலங்கள் பொதுவாக சொல்லப்படுவதுண்டு. மாதங்களை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறான சிறப்புகளை கொண்டிருக்கும். எந்த மாதமும் ஒன்றுக்கொன்று குறைவில்லை என்பது போல அந்தந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு என தனிப்பட்ட சிறப்புகளும் உள்ளது. நாம் பெயர், ராசி. நட்சத்திரம், பிறந்தநாள், இடம் உள்ளிட்டவை மட்டுமல்ல அந்த மாதம் கூட நம் ஆளுமைகள் பற்றி சொல்லும். அப்படியாக ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பிறந்தவர்கள் எப்படிப்பட்ட ஆளுமைகளைப் பெற்றிருப்பார்கள் என்பதை இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
- ஜூலை மாதம் பிறந்தவர்கள் புத்திசாலித்தனமாக இருப்பார்கள். மற்றவர்கள் அவர்களை புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். இந்த மக்கள் சுயமரியாதையுடன் செயல்படுவதை நம்புகிறார்கள்.மற்றவர்களின் உணர்வுகளைக் கருத்தில் கொள்வார்கள். மற்றவர்களிடம் நட்பாகவும் சாமர்த்தியமாகவும் நடந்துக் கொள்வார்கள். தன்னை அவமானப்படுத்துவதை மன்னிக்கும் குணம் கொண்டவர்கள். ஆனால் எதையும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். இவர்கள் எப்பொழுதும் பழைய நட்பைப் பற்றியும் கடந்த காலத்தைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.
- ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் மகிழ்ச்சியாக நடப்பவர்கள். எதிலும் ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டார்கள். தன்னடக்கம், தன்னம்பிக்கை, உரக்கப் பேசுதல், உற்சாகமான சுபாவம் ஆகியவை இவர்களிடம் இருக்காது. அமைதியாக இருந்து சாதிப்பார்கள். பழிவாங்கும் குணம் அதிகமாக இருக்கும். பகல் கனவு காணும் பழக்கம் இருக்கும். உங்களை யாராவது கட்டுப்படுத்தும்போது அவர்கள் பொங்கியெழுபவர்களாக மாறுவார்கள். இவர்கள் மனதளவில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் மற்றும் அழகான பேச்சுக்கு சொந்தக்காரர்கள்.
- செப்டம்பர் மாதம் பிறந்தவர்கள் அனைவரையும் கவரும் பேச்சுக்கு சொந்தக்காரர்கள். குறிப்பிட்ட ஒரு வேலையில் நிலையாக இருக்க மாட்டார்கள். ஆனால் எதையாவது செய்து முன்னுக்கு வர நினைப்பவர்களாக இருப்பார்கள். ஆறுதலான அணுகுமுறையை கையாளும் இவர்களின் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
- அக்டோபர் மாதம் பிறந்தவர்கள் அதிகம் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். தங்களை நேசிப்பவர்களை ஆழமாக நேசிப்பார்கள். பொய் சொன்னாலும் வெளியில் தெரியாத அளவுக்கு நடந்து கொள்வார்கள். அதிகம் கோபப்படுபவர்களாக இருப்பார்கள். மனதளவில் எந்தளவுக்கு விரைவில் காயம் அடைவார்களோ, அதே அளவுக்கு வேகமாக வெளியே வருவார்கள். பகல் கனவு காணும் குணம் கொண்டவர்களாகவும் சில சமயங்களில் இருப்பார்கள்.
- நவம்பர் மாதம் பிறந்தவர்கள் அன்பானவர்களாகவும், ஆபத்தானவர்களாகவும் இருப்பார்கள். சுதந்திரமாக நடக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் சில நேரங்களில் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். அதிகமாக நட்பு பாராட்டவும் செய்யும் இவர்கள் தாங்கள் நினைக்கும் காரியங்களை எப்பாடுபட்டாலும் முடித்து விடும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
- டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் தோற்றத்தில் அனைவரையும் கவர்பவர்களாக இருப்பார்கள். மற்ற மாதங்களில் பிறந்தவர்களை விட சிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் எல்லாவற்றிலும் போட்டித்தன்மை கொண்டவர்கள். விளையாட்டுகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். கருணை மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதே அவர்களுக்கு ஆபத்தாக முடியும்.