5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நேரில் செல்லாமல் இறந்தவரின் அஸ்தியை கங்கையில் கரைக்கலாம்.. எப்படி தெரியுமா?

மரணித்த பின்பு தன்னுடைய அஸ்தியை புனித நீரான கங்கையில் கரைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக உள்ளது. பொருளாதாரம் மற்றும் பிற காரணங்களால் நேரில் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு நேரில் செல்லாமலேயே இறந்தவர்களின் அஸ்தியை கங்கையில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரில் செல்லாமல் இறந்தவரின் அஸ்தியை கங்கையில் கரைக்கலாம்.. எப்படி தெரியுமா?
கங்கை (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 16 Dec 2024 19:20 PM

ஒருவர் இந்த மண்ணை விட்டு மறைந்ததும் அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருக்கும். ஆனால் பொருளாதார வசதிகள் மற்றும் மற்ற காரணங்களால் அனைவராலும் நேரில் சென்று அஸ்தியை கங்கையில் கரைக்க முடியாது. எனவே பலரது ஆசையும் நிராசையாக போய் விடுகிறது. இதை கருத்தில் கொண்டு அனைத்து மக்களின் அஸ்தியவும் கங்கையில் கரைக்க ‘அஸ்தி விசர்ஜன்’ அமைப்பும் இந்தியா ஸ்பீட் போஸ்ட்டும் இணைந்து ஒரு ஏற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் கங்கைக்கு நேரில் செல்லாமலேயே இறந்தவர்களின் உடலை கங்கையில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஸ்தி சாம்பலை ஸ்பீட் போஸ்ட் மூலமாக அந்த அமைப்பிற்கு அனுப்பி வைத்தால் அவர்கள் புனித கங்கையில் அஸ்தியை கரைத்து விடுவார்கள். இந்த சடங்குகளை நாம் நேரலையிலும் பார்த்துக் கொள்ள வசதிகள் செய்யப்படுகிறது.

Also Read: Number Numerology: நீங்கள் இந்தத் தேதியில் பிறந்தவரா? காத்திருக்கும் அதிர்ஷ்டம்!

எப்படி வசதியை பெறுவது?

  • முதலில் ஓம் திவ்யதர்ஷன் என்ற போர்ட்டலுக்கு சென்று https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfN3R-aP90EBEIXos_XOalJuRTgar8AhSU9ICrPk6cLRFDs_w/viewform என்ற Google Form மூலமாக இறந்தவர்கள் பற்றிய விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.
  • பதிவு செய்த பின்னர் +91 8369666626 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க வேண்டும்.
  • பதிவு செய்த பிறகு அஸ்தி சாம்பல் பொட்டலத்தை ஹரித்வார், பிரயாக்ராஜ், வாரணாசி மற்றும் கயா ஆகிய ஏதாவது ஒரு இடத்திற்கு ஸ்பீடு போஸ்ட் மூலமாக தபால் அலுவலகம் சென்று அனுப்பலாம்.
  • அனுப்பும் பார்சலில் ஓம் திவ்ய தரிசனம் என்று பெரிய எழுத்துக்களால் எழுதப்பட வேண்டும். அஸ்தியை அனுப்பிய பிறகு மீண்டும் அதே போர்டலில் அஸ்தியை அனுப்பியது பற்றிய தகவலை அதில் தெரிவிக்க வேண்டும்.
  • இதன் பிறகு ஓம் திவ்யதர்ஷன் அமைப்பு பிற சடங்குகளை பார்த்துக் கொள்ளும். அந்த சடங்குகளை வீட்டில் இருந்தவாறு இணையத்திலும் பார்க்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த அமைப்பை தொடர்பு கொண்டு உறுதி செய்யாமல் யாரும் அஸ்தி சாம்பலை அனுப்ப வேண்டாம் என்று அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.‌ தற்பொழுது குளிர்காலமாக இருப்பதால் புனித நீரில் குளிர்ச்சி அதிக அளவில் உள்ளது.‌ எனவே சடங்குகள் செய்வதற்கு தாமதம் ஏற்படலாம். எனவே அதை புரிந்து கொண்டு ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம் என அந்த அமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Margazhi Month: மார்கழி மாதத்தின் முக்கிய மற்றும் விசேஷ தினங்கள்

கேட்கப்படும் விவரங்கள்:

இறந்தவரின் முழு பெயர், இறந்த தேதி, இறந்த நேரம், இறப்பிற்கான காரணம், இறந்தவரின் கணவர் அல்லது தந்தையரின் பெயர், கோத்திரம் ஆகிய விவரங்கள் Google Form ல் கேட்கப்படுகிறது.

Latest News