5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Christmas Holiday : இந்த நாடுகளில் கிறிஸ்துமஸ் விடுமுறை இல்லை.. விவரங்கள் இதோ!

கிறிஸ்துமஸ் கொண்டாடாத நாடுகள்:‌ உலகில் அதிக நபர்களால் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் பல நாடுகளின் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும் சில நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதில்லை.‌ மேலும் சில நாடுகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பொது விடுமுறையும் அளிக்கப்படுவதில்லை.

Christmas Holiday : இந்த நாடுகளில் கிறிஸ்துமஸ் விடுமுறை இல்லை.. விவரங்கள் இதோ!
கிறிஸ்துமஸ் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 16 Dec 2024 11:09 AM

உலகில் மனிதர்களின் பாவங்களை நீக்குவதற்காக இந்த மண்ணில் பிறந்தவர் தான் இயேசுநாதர். டிசம்பர் 25ஆம் தேதி ஏசுநாதர் இந்த உலகில் அவதரித்தார் என்று அவரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மறுபுறம் இயேசு நாதரின் பிறந்தநாள் பற்றி பைபிளில் குறிப்பிடவில்லை எனவும் வாழ்நாளில் அன்னை மரியா இயேசு நாதரின் பிறந்த நாளை கொண்டாடவே இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும் இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வர இருக்கிறது. இந்தப் பண்டிகைக்காக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தயாராகி வருகிறார்கள்.

வீடுகளில் நட்சத்திரங்கள் தொங்கவிடுவது, இல்லங்களை அலங்கரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட தொடங்கிவிட்டனர். மேலும் கரோல் குழுக்களும் வர தொடங்கிவிட்டனர்.

இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகக் கோலாகலமாக இருக்கும். பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது. ஆனால் எல்லா நாடுகளிலும் இல்லை. சில நாடுகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஜனவரி மாதத்தில் கொண்டாடுகிறது. இன்னும் சில நாடுகள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதே இல்லை. எந்தெந்த நாடுகள் ஜனவரியில் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .

ஜனவரியில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்:

எத்தியோப்பியா மற்றும் அண்டை நாடான எரித்திரியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஜனவரி 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் இது எரித்திரியாவில் லெடெட் என்றும் எத்தியோப்பியாவில் ஜெனா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாடுகளில் உள்ள அவர்கள் 40 நாள் விரதத்தை கடைபிடிப்பார்கள். மேலும் அவர்கள் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை நடனம் மற்றும் இசையுடன் ஆடி பாடி கொண்டாடுகின்றனர்.

எத்தியோப்பியர்கள் இயேசு கிறிஸ்து ஜனவரி 7 என்று பிறந்தார் என்று நம்புகின்றனர். ஏனெனில் ‘காப்டிக் கிறிஸ்தவர்கள்’ (அதாவது எகிப்து மற்றும் மத்திய கிழக்கின் பூர்வீக கிறிஸ்துவ மக்களை குறிக்க பயன்படுத்தப்படும் சொல்) கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறாக காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்துகின்றனர்.

Also Read: Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படும் காரணம் தெரியுமா?

ஜார்ஜியா, ரஷ்யா, செர்பியா, பெலாரஸ், ​​உக்ரைன், ஆர்மீனியா, மாண்டினீக்ரோ, மாசிடோனியா மற்றும் மால்டோவா ஆகியவை ஜனவரி 7 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றன. ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் ஜூலியன் நாட்காட்டியைப் பின்பற்றுவதால் இந்த நாடுகளில் ஜனவரி மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் விடுமுறை இல்லாத நாடுகள்:

சில நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இருந்தாலும் பொது விடுமுறை அளிக்கப்படுவது இல்லை. அந்த வகையில் அஜர்பைஜான், பஹ்ரைன், கம்போடியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் சில மக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டாலும் அங்கு பொது விடுமுறை அளிக்கப்படுவதில்லை.‌

அதைப்போல கொமோரோஸ், ஈரான், ஈரான், இஸ்ரேல், ஜப்பான், குவைத், லாவோஸ், மாலத்தீவு, மங்கோலியா, மொராக்கோ, ஓமன், பாகிஸ்தான், கத்தார், தைவான், தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பூட்டான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் கிறிஸ்துமஸ்தினத்திற்கு பொது விடுமுறை அளிக்கப்படுவது இல்லை

கிறிஸ்துமஸ் கொண்டாடாத நாடுகள்:

சில நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை. ஆப்கானிஸ்தான், வட கொரியா, சவூதி அரேபியா, அல்ஜீரியா, பூட்டான், லிபியா, மொரிஷியஸ், சோமாலியா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், துனிசியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில்லை.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள். எனவே இங்கு கிறிஸ்துமஸுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவதில்லை. இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர். அதை போல் பாகிஸ்தான், எகிப்து, மொராக்கோ, துனிசியா, சவுதி அரேபியா, அல்ஜீரியா போன்ற நாடுகளிலும் அதிக அளவில் இஸ்லாமியர்கள் வசித்து வருவதால் அந்த தேசங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதில்லை.‌

பூட்டானில் புத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் தேசம் என்பதால் அங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதில்லை. அதேபோல் சீனா, மங்கோலியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் புத்தர்கள் வாழ்வதால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவது இல்லை. அதைப்போல் இஸ்ரேலில் யூதர்கள் பெருமளவில் வாழ்வதால் அங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதில்லை.

Also Read: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் மரம் வந்தது எப்படி தெரியுமா?

கிறிஸ்துமஸ் பண்டிகையை தடை செய்த நாடுகள்:

இங்கிலாந்து, புருனை, தஜிகிஸ்தான், சவுதி அரேபியா, வடகொரியா, அல்பேனியா, அமெரிக்கா, கியூபா, சோமாலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடந்த காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தடை விதித்திருந்தது.

Latest News