Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகை.. முதன்முதலில் குடில் வைத்தவர் யார் தெரியுமா?

X mas Festival: டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே முதலில் தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். தொடர்ச்சியாக கிறிஸ்தவ மக்கள் தங்களுடைய இல்ல வாயிலில் விதவிதமான வடிவங்களில் ஸ்டார்களை தொங்கவிட்டு அலங்கரிப்பார்கள். கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் கிறிஸ்மஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகை.. முதன்முதலில் குடில் வைத்தவர் யார் தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Published: 

19 Nov 2024 11:58 AM

கிறிஸ்துமஸ் பண்டிகை: டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே கிறிஸ்தவ மக்களுக்கு கொண்டாட்டமான நேரம் தொடங்கி விடும். காரணம் அம்மதத்தின் கடவுளாக வணங்கப்படும் இயேசு கிறிஸ்து பிறந்த தினம் வரும் என்பதால் அந்த மாதம் முழுக்க மிகுந்த மன மகிழ்ச்சியோடு துன்பங்கள் நீங்கி காணப்படுவர். பொதுவாக பிற மதத்தில் எந்த பண்டிகை எப்போது வரும் என கேட்டால் அது திதி, பிறை தென்படுவது, லீப் வருடம் ஆகியவை பொறுத்து மாற்றம் பெறும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும்போதும் எந்த பண்டிகை எந்த தேதியில், எந்த மாதத்தில் வருகிறது என்பதை முன்கூட்டியே கணிப்பதே கடினமாக இருக்கும்.

ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகை எப்போது கொண்டாடப்படுகிறது? என எந்த மதத்தினரையும் கேட்டாலும் சட்டென டிசம்பர் 25 என தேதியை குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு அந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினரும் இந்த பண்டிகையை தங்கள் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். அன்றைய நாள் தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகளிலும் கலந்து கொண்டு சக கிறிஸ்தவ மக்களோடு இணைந்து வாழ்த்துக்களை பரிமாறி, கேக்குகளை ஊட்டி, விருந்துண்டு இந்த நாளை சிறப்பிக்கின்றனர்.

Also Read: Vastu Tips: வீட்டில் மயில் தோகை வைப்பதால் தீரும் பிரச்னைகள் என்னென்ன தெரியுமா?

வித்தியாசமாக கொண்டாட்டம்

டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே முதலில் தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். தொடர்ச்சியாக கிறிஸ்தவ மக்கள் தங்களுடைய இல்ல வாயிலில் விதவிதமான வடிவங்களில் ஸ்டார்களை தொங்கவிட்டு அலங்கரிப்பார்கள். கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் கிறிஸ்மஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அனைத்து தேவாலயங்களிலும் ஒவ்வொரு நாளும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். இதனை தவிர்த்து வீடுகள் மற்றும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில் வைக்கப்படும். முதன் முதலில் குடில் வைப்பதற்கான நோக்கம் எப்போது தொடங்கியது என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

பாவங்களில் இருந்து மீட்க பிறந்த இயேசு

மனிதர்கள் செய்யும் பாவங்களில் இருந்து அவர்களை மீட்க சக மனிதனாகவே அவதரித்தவர் தான் இயேசு. பெத்லகேமில் உள்ள மாட்டு தொழுவத்தில் பிறந்து ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து மக்களுக்காகவே ரத்தம் சிந்தினார். அவர் பிறந்த அந்த நாள்தான் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் புனித பிரான்சிஸ் அசிசியார் என்பவர் தான் கிறிஸ்துமஸ் குடிலை வடிவமைத்ததாக சொல்லப்படுகிறது. மிகப்பெரிய செல்வந்தரின் மகனாய் பிறந்த இவர் அனைத்தையும் விட்டு கடவுளை பின்பற்ற துறவறம் மேற்கொண்டு உள்ளார். பிரான்சிஸ் அசிசியார் தான் இறப்பதற்கு முன்பாக கிறிஸ்துவின் பிறப்பை சிறப்பாக கொண்டாட வேண்டும் எண்ணியுள்ளார்.

Also Read: Vastu Tips: சூரிய அஸ்தனமத்திற்கு பின் செய்யக்கூடாத விஷயங்கள்.. பண பிரச்னை உண்டாகும்!

முதன்முதலாக அமைக்கப்பட்ட குடில்

கிபி 11 ஆம் நூற்றாண்டு சமயத்தில் அப்போதைய போப்பின் அனுமதி பெற்று நிஜ விலங்குகளான கழுதை, எருது மற்றும் வைக்கோல் எல்லாம் வரிசையாக வைத்து உயிருள்ள குடிலை பிரான்சிஸ் உருவாக்கியுள்ளார். அந்த விழாவில் மக்களுக்கும் பங்கேற்க அழைப்பு  விடுக்கப்பட்ட நிலையில் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த இரவின் இருளைப் போக்க மெழுகுவர்த்திகளும் தீப்பந்தமும் ஏற்றப்பட்டன. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆடம்பர திருப்பலி கொண்டாடப்பட்டது.

அந்த குடிலில் இயேசு கிறிஸ்துவாக வைக்கப்பட்ட நிஜ குழந்தை திருப்பலி நடைபெற்ற 3 மணி நேரமும் அழாமல் அமைதியாக இருந்ததாக இன்றளவும் சொல்லப்படுகிறது. 14-ம் நூற்றாண்டில் அந்த குடில் வைக்கப்பட்ட இடத்தில் புதிய தேவாலயம் ஒன்று கட்டப்பட்டது. குடில்களில் வைக்கப்படும் வைக்கோலை நாம் தொட்டு வணங்கினால் பலவிதமான உடல் நல பாதிப்புக்கு தீரும் என்பது நம்பிக்கையாகும்.

கிறிஸ்துமஸ் குடில் என்பது வெறும் அலங்காரம் என்று இல்லை. அது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஒவ்வொரு தலைமுறைக்கும் காண்பிக்க வேண்டிய அவசியத்தின் பயன்பாடாகும். மாட்டு தொழுவத்திலேயே ஏழ்மையாக பிறந்து உலகம் வணங்கும் கடவுளாக மாறிய இயேசுவின் வாழ்க்கையை பிறருக்கு உணர்த்தும் வகையில்  அமைக்கப்படுகிறது. செல்வத்துடன் பிறந்தாலும் அகந்தை இல்லாமல் வாழ வேண்டும் என்பதை நினைவுபடுத்தவும் இந்த குடிலானது வைக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு கிறிஸ்மஸிலும் பிறக்கும் பாலன் இயேசு நம் வீட்டிலும் பிறக்க வேண்டும் என்ற அர்த்தத்திலும் குடில் வைக்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் மரம் வைப்பதற்கான பின்னணி

அதே நேரத்தில் கிறிஸ்துமஸ் மரம் வைப்பதற்கும் பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. ஜெர்மன் நாட்டில் வாழ்ந்த போனி போஸ் என்ற பாதிரியார் ஒருவர் பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வரும் வழியில் பழங்குடியின மக்கள் சிலர் ஓக் மரத்தை வழிபடுவதை கண்டுள்ளார். இயேசுவை வணங்காமல் ஓக் மரத்தை வழிபடுவதை கண்டு கோபம் கொண்ட அந்த பாதிரியார் அதனை பிடுங்கி எரிந்துள்ளார். ஆனால் எறியப்பட்ட இடத்தில் மரம் மீண்டும் சில நாட்களிலேயே வளர ஆரம்பித்துள்ளது. இதனை தொடர்ந்து தான் அந்த மரத்தை கிறிஸ்துமஸ் மரம் என எண்ணி வழிபட தொடங்கினார்கள் என சொல்லப்படுகிறது.

காதலில் பிரச்னையை உண்டாக்கும் சின்ன பொய்கள்!
நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கர்ப்பக் காலத்தில் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க சில டிப்ஸ்..
தினசரி தேங்காய் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?